சூரி

இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia

சூரி
Remove ads

சூரி (Soori) என்பவர் ஒரு இந்தியத் திரைப்பட நடிகராவார்.[1] 2009இல் வெளிவந்த வெண்ணிலா கபடிகுழு திரைப்படத்தில் பரோட்டா போட்டியில் கலந்து கொள்வது போல இருந்த காட்சியில் நடித்துப் பிரபலமானதால் பரோட்டா சூரி என்று அறியப்படுகிறார். இவர் தமிழ்நாட்டின் மதுரை, ராஜாகூரில் முத்துசாமி-சேங்கையரசி அம்மாளுக்கு மகனாகப் பிறந்தார். இவருக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. இவர் மகாலட்சுமி என்பவரை மணந்தார். இந்த இணையருக்கு வெண்ணிலா என்னும் மகளும், சரவணன் என்னும் மகனும் உண்டு.[2][3][4]

விரைவான உண்மைகள் சூரி, பிறப்பு ...
Remove ads

தொழில்

தமிழ்த் திரையுலகில் நடிகராகும் நோக்கத்துடன் சூரி 1996 ஆம் ஆண்டு மதுரையிலிருந்து சென்னைக்கு வந்துசேர்ந்தார். பட வாய்ப்புகள் கிடைக்காததால், சிறிது காலம் துப்புரவுப் பணியாளராகப் பணியாற்றினார்.[5]

அவ்வப்போது படங்களில் குறிப்பிட்டுச் சொல்லமுடியாத வேடங்களில் நடித்தார், குறிப்பாக வின்னர் (2003) போன்ற படங்களில் நகைச்சுவைக் காட்சிகளில் தோன்றினார்.[5] அதன் பிறகு எழில் இயக்கிய தீபாவளி படத்திலும் உதிரி வேடத்தில் நடித்தார்.

விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்ற திரைப்படமான வெண்ணிலா கபடிகுழுவில் (2009) சூரி தோன்றினார். படத்தின் புகழ்பெற்ற 'பரோட்டா போட்டி' காட்சியின் காரணமாக "பரோட்டா" என்ற முன்னொட்டு விரைவில் இவரது பெயருடன் இணைந்தது, அதில் சூரியின் கதாபாத்திரம் 50 பரோட்டக்களை உண்ணும் போட்டியில் கலந்து கொண்டு, போட்டியில் பொய்க் கணக்குச் சொல்லும் உணவகக்காரிடம் நீ கள்ளாட்டம் ஆடுற கோட்ட எல்லாம் அழி நான் முதல்ல இருந்து சப்புடுறேன் என்று மீண்டும் 50 பரோட்டாக்களை சாப்பிடத் தயாராகும் காட்சி வரவேற்பைப் பெற்றது.[6] பின்னர் இவர் போராளி (2011), சுந்தர பாண்டியன் (2012), வருத்தப்படாத வாலிபர் சங்கம் (2013), ஜில்லா (2014) போன்ற வரவேற்பைப் பெற்ற பல படங்களில் நகைச்சுவை மற்றும் பக்கவாட்டு பாத்திரங்களில் தோன்றினார்.[7] ரஜினி முருகன் (2016) இது நம்ம ஆளு (2016), வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் (2016), சங்கிலி புங்கிலி கதவத் தொற (2017) ஆகிய படங்களிலும் இவரது துணைக் கதாபாத்திரங்கள் பாராட்டப்பட்டன.

2018 ஆம் ஆண்டில் சிவகார்த்திகேயனுடன் சீமராஜா மற்றும் விக்ரமுடன் சாமி 2 ஆகிய இரண்டிலும் நடித்தார். இந்த இரண்டு படங்களிலும் இவரது நகைச்சுவை நடிப்பு கடுமையாக விமர்சிக்கப்பட்டது, இதனால் சூரியே அதற்கடுத்த படங்கள் வழியாக பதிலளித்தார்.[8] பின்னர் வெற்றிகரமான நம்ம வீட்டு பிள்ளை (2019), சங்கத்தமிழன் (2019) ஆகிய அடுத்தடுத்த படங்களில் நடித்தார்.[9]

2023 ஆம் ஆண்டில், வெற்றிமாறனின் வரலாற்று குற்றவியல் பரபரப்பூட்டும் படமான விடுதலை பகுதி 1 இல் கதையின் நாயகனாக சூரி நடித்தார். இவரது நடிப்பு விமர்சகர்களிடமும், பார்வையாளர்களிடமிருந்தும் மிகவும் நேர்மறையான பாராட்டுகளைப் பெற்றது.[10] இதைத் தொடர்ந்து கருடன் (2024), காதல் நாடகப்படமான ஏழு கடல் ஏழு மலை (2024) ஆகியவற்றில் முன்னணி வேடங்களில் நடித்தார். மூன்று படங்களும் அவற்றின் இயக்கம் மற்றும் நடிப்பிற்காக பரவலாக விமர்சன ரீதியான பாராட்டுகளைப் பெற்றன. கொட்டுக்களி மற்றும் ஏழு கடல் ஏழு மாலை ஆகியவை முறையே 74வது பெர்லின் சர்வதேச திரைப்பட விழாவிலும் 53வது சர்வதேச திரைப்பட விழா ரோட்டர்டாமிலும் திரையிடப்பட்டன.

Remove ads

திரைப்படப் பட்டியல்

நடிகர்

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...

-பாடகராக

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...
Remove ads

மேற்கோள்கள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads