செம்போல் மாவட்டம்

மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

செம்போல் மாவட்டம்
Remove ads

செம்போல் மாவட்டம் அல்லது ஜெம்போல் மாவட்டம் என்பது (மலாய்: Daerah Jempol; ஆங்கிலம்: Jempol District; சீனம்: 仁保县) மலேசியா, நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டம். நெகிரி செம்பிலான் மாநிலத்திலேயே பெரிய மாவட்டம். இந்த மாவட்டத்தின் வடகிழக்கில் பகாங்; கிழக்கில் ஜொகூர் மாநிலங்கள் உள்ளன.

விரைவான உண்மைகள் செம்போல் மாவட்டம், நாடு ...

செம்போல் மாவட்டத்தின் இரு முக்கிய நகரங்கள்: பண்டார் ஸ்ரீ செம்போல் (Bandar Seri Jempol); பகாவ் நகரம்.

கோலாலம்பூர் பெருநகரில் இருந்து தெற்கே 137 கி.மீ. தொலைவிலும்; நெகிரி செம்பிலான் மாநிலத்தின் தலைநகர் சிரம்பானில் இருந்து கிழக்கே 70 கி.மீ. தொலைவிலும் அமைந்து உள்ளது. மிக அருகாமையில் உள்ள நகரம் பகாவ் நகர்ம். 21 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

மூவார் ஆறும் செர்த்திங் ஆறும் சந்திக்கும் இடத்தில் செம்போல் மாவட்டம் அமைந்து உள்ளது. பழங்காலத்தில் போக்குவரத்துக்கு இந்தச் சந்திப்பு மிக முக்கியப் பங்கு வகித்து உள்ளது.

Remove ads

தம்பின் முக்கிம்கள்

தம்பின் மாவட்டத்தில் 5 முக்கிம்கள் உள்ளன.[3]

  1. செலாய் (Jelai)
  2. கோலா செம்போல் (Kuala Jempol)
  3. ரொம்பின் (Rompin)
  4. செர்த்திங் லிலிர் (Serting Ilir)
  5. செர்த்திங் உலு (Serting Ulu)

போக்குவரத்து

நெடுஞ்சாலை 10 (Malaysia Federal Route 10); ஜெம்போல் மாவட்டத்தில் முக்கிய சாலையாகும். இந்தச் சாலை பகாவ் நகரத்தின் வழியாகச் சென்று பண்டார் ஸ்ரீ செம்போலைத் தொட்டு, அப்படியே பகாங் தெமர்லோ நகரத்தை அடைகிறது.

பெரா நெடுஞ்சாலை (Bera Highway) 11; செம்போல் தொகுதியைக் கிழக்கு - மேற்குத் திசையாக வெட்டிச் செல்கிறது. இந்தச் சாலை செர்த்திங்கில் தொடங்கி, பின்னர் தெற்கு பகாங்கில் உள்ள பண்டார் துன் அப்துல் ரசாக் நகரத்திற்கு அருகே முடிவு அடைகிறது.

நெடுஞ்சாலை 13 (Malaysia Federal Route 13); கோலா பிலா தொகுதியில் பகாவ் நகரத்தையும் சுவாசே நகரத்தையும் இணைக்கிறது.

பகாவ் தொடருந்து நிலையம் தான், இந்த செம்போல் மாவட்டத்திற்கு சேவை செய்யும் முதன்மை தொடருந்து நிலையம் ஆகும்.

Remove ads

மலேசிய நாடாளுமன்றம்

மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் (டேவான் ராக்யாட்) போர்டிக்சன் மாவட்டத்தின் நாடாளுமன்றத் தொகுதி. 2018-ஆம் ஆண்டு பொதுத் தேர்தல் முடிவுகள்.

மேலதிகத் தகவல்கள் நாடாளுமன்றம், தொகுதி ...

தம்பின் மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள்

தம்பின் மாவட்டத்தின் சட்டமன்றத் தொகுதிகள்; 2018-ஆம் ஆண்டு; மலேசியாவின் தேர்தல் ஆணையம் (Suruhanjaya Pilihan Raya Malaysia - Election Commission of Malaysia) வெளியிட்ட பொதுத் தேர்தல் முடிவுகள்.[4][5]

மேலதிகத் தகவல்கள் மாநிலம், தொகுதி ...
Remove ads

செம்போல் மாவட்டத்தில் உள்ள தமிழ்ப்பள்ளிகள்

மலேசியா; நெகிரி செம்பிலான்; செம்போல் மாவட்டத்தில் (Jempol District) 11 தமிழ்ப்பள்ளிகள் உள்ளன. 978 மாணவர்கள் பயில்கிறார்கள். 141 ஆசிரியர்கள் பணியாற்றுகிறார்கள்.[6]

மேலதிகத் தகவல்கள் பள்ளி எண், இடம் ...
Remove ads

காட்சியகம்

நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள மாவட்டங்கள்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads