கரூர் சந்திப்பு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கரூர் சந்திப்பு தொடருந்து நிலையம் (Karur Junction railway station, நிலையக் குறியீடு:KRR) இந்தியாவின், தமிழ்நாட்டில், கரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து நிலையமாகும். இது தென்னக ரயில்வே மண்டலத்தின், சேலம் தொடருந்து கோட்டத்தின் கீழ் இந்த தொடருந்து நிலையம் அமைந்துள்ளது.
Remove ads
அமைவிடம்
இந்த தொடருந்து நிலையமானது திசம்பர் 3, 1866 ஆம் ஆண்டு திறக்கப்பட்டது. திரு. வி. க. சாலை, நீலிமேடு என்னும் இடத்தில் இந்த தொடருந்து நிலையம் அமைந்துள்ளது. நாளென்றுக்கு ஏறத்தாழ 10,000 பயணிகள் இந்த தொடருந்து நிலையத்தில் பயணம் செய்கின்றனர்.
திட்டங்கள் மற்றும் மேம்பாடு
இந்திய இரயில்வேயின் அமிர்த பாரத் நிலையத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்படுவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ்நாட்டின் 75 நிலையங்களில் இதுவும் ஒன்றாகும். மத்திய அரசின் உள்கட்டமைப்புக்கான பிரதமர் கதி சக்தி அமைப்பின் கீழ் இத்திட்டம் செயற்படுத்தப்படுகிறது.[1][2][3]
அமிர்த பாரத் திட்டத்தின் கீழ் திருச்சி கோட்டத்தில் 15 நிலையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன, கரூர் சந்திப்பு தொடருந்து நிலையத்தை புதுப்பிக்கும் பணிக்கு 34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.[4][5]
Remove ads
வழித்தடம்
இந்த தொடருந்து நிலையமானது திருச்சிராப்பள்ளி மற்றும் திண்டுக்கல்லிருந்து வருகின்ற இரயில்கள் ஈரோடு மற்றும் ஜோலார்பேட்டை வழியாக சென்னைக்கு செல்லவும் மற்றும் சென்னையிலிருந்து அதே வழித்தடத்தில் திருச்சிராப்பள்ளி மற்றும் திண்டுக்கல் செல்கின்ற தொடருந்துகளுக்கு சந்திப்பாக அமைகின்றது. மேலும் நாமக்கல் வழியாக சேலம் சந்திப்பை இணைக்கும் வகையில் அகலப்பாதை உருவாக்கப்பட்டு 2014 ஆம் ஆண்டு முதல் தொடருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. இந்த சந்திப்பு நிலையமானது தெற்கு இரயில்வேயின், சேலம் கோட்டத்திற்கு உட்பட்டதாகும்.
தளங்கள்
நடைமேடை /தளம் 1: திருச்சி, ஈரோடு, சேலம் மற்றும் திண்டுக்கல் மார்க்கமாகச் செல்லும் விரைவுத்தொடர் வண்டிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
நடைமேடை/தளம் 2: திருச்சி செல்லும் பயணிகள் தொடருந்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நடைமேடை/தளம் 3: திருச்சி, ஈரோடு, சேலம் மற்றும் திண்டுக்கல் வழியாக அதிதூர விரைவு மற்றும் அதிவிரைவு தொடருந்துக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
நடைமேடை/தளம் 4: சரக்கு வண்டிகள் மற்றும் விரைவுத் தொடருந்துகள் பாதைமாற்றி விடுவதற்கானதாகும்.
நடைமேடை/தளம் 5: சேலம் பயணிகள் தொடருந்து மற்றும் சரக்கு வண்டிக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும் நடைபாதை 1, 2 மற்றும் 3 ஆகியவற்றில் தேநீர் மற்றும் உணவு சிற்றுண்டிச்சாலைகள் உள்ளது. அனைத்து தளங்களிலும் பொதுவாகவும், மாற்றுத் திறனாளிகளுக்காகவும் கழிப்பறை வசதி உள்ளது. நடைபாதை ஒன்றில் இரயில்வே காவல் துறையின் அலுவலகம் உள்ளது.
Remove ads
பாதைகள்
கரூர் தொடருந்து சந்திப்பிலிருந்து பின்வரும் மார்க்கமாக தொடருந்து பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது:[6][7][8][9]
- திண்டுக்கல் சந்திப்பு மார்க்கமாக ஒருவழி அகல இரயில் பாதை.
- ஈரோடு சந்திப்பு மார்க்கமாக ஒருவழி அகல இரயில் பாதை.
- திருச்சிராப்பள்ளி சந்திப்பு மார்க்கமாக ஒரு வழி அகல இரயில் பாதை.
- சேலம் சந்திப்பு மார்க்கமாக ஒருவழி அகல இரயில் பாதை.
இந்தப் பாதைகள் எல்லாம் மின்தடங்கலாக மாற்ற 2015-2016 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது.
Remove ads
நிகழ்வுகள்
- சேலம் - கரூர் அகல ஒரு வழிப்பாதைக்காக 40 விவசாயிகளிடமிருந்து நிலம் பெறப்பட்டு அவர்களுக்கு நீதிமன்றத்தின் உத்தரவுப்படி அதற்குாிய தொகை வழங்கப்பட்டுள்ளது.[10]
- 2014 ஆம் ஆண்டு பிப்ரவாி மாதம் கல்லுமடை என்ற இடத்தில் ஆளில்லா இரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற போது 7 வயதுடைய பள்ளிக் குழந்தைகள் உட்பட 6 பேர் இரயில் வண்டியில் மோதாமல் மயிரிழையில் உயிர் தப்பினர்.[11]
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads