சம்மு காசுமீர் சட்டப் பேரவை
2018 வரை நடைமுறையில் இருந்த சட்டப் பேரவை. From Wikipedia, the free encyclopedia
Remove ads
சம்மு காசுமீர் சட்டப் பேரவை என்பது இந்திய ஒன்றியப் பகுதியான சம்மு மற்றும் சம்மு காசுமீரின் சட்டப் பேரவையாகும்.
சம்மு காசுமீர் சட்டப் பேரவை 21 நவம்பர் 2018 அன்று ஆளுநரால் கலைக்கப்பட்டது.[4]
2019 க்கு முன்பு, சம்மு காசுமீர் மாநிலத்தில் ஒரு சட்டப் பேரவை (கீழ் அவை) மற்றும் ஒரு சட்ட மேலவை (மேல் சபை) கொண்ட ஈரவை சட்டமன்றம் இருந்தது. ஆகத்து 2019 இல் இந்திய நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சம்மு காசுமீர் மறுசீரமைப்புச் சட்டம், இதற்குப் பதிலாக ஒரு ஓரவைச் சட்டமன்றம் மற்றும் மாநிலத்தை ஒன்றியப் பகுதியாக மறுசீரமைத்தது.
Remove ads
வரலாறு
1951-இல் சம்மு காசுமீர் மக்கள் பிரதிநிதிகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட சம்மு காசுமீர் அரசியலமைப்புச் சட்டமன்றம், சம்மு காசுமீர் மாநிலத்திற்கான அரசியலமைப்பு சட்டத்தை 17 நவம்பர் 1956-இல் இயற்றிய பிறகு, 26 சனவரி 1957 அன்று சம்மு காசுமீர் சட்டமன்றம் அமைக்கப்பட்டது.[5][6] கலைக்கப்பட்ட சம்மு காசுமீர் அரசியலமைப்பு சட்டமன்றத்தின், அனைத்து அதிகாரங்களும் சம்மு காசுமீர் சட்டமன்றம் கொண்டிருக்கும்.
உறுப்பினர்கள்
இந்த மன்றத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 87 பேர் உறுப்பினர்களாக இருப்பர். அவையில் பெண்களுக்கு போதிய முக்கியத்துவம் இல்லை என ஆளுநர் கருதினால், இரு பெண்களை நியமிக்கலாம்.
ஆளுநர்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads