ஜெயந்தி நடராஜன்

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

ஜெயந்தி நடராஜன்
Remove ads

ஜெயந்தி நடராஜன் (Jayanthi Natarajan) இவர் ஒரு தமிழக அரசியல்வாதியும், தமிழ்நாடு இந்திய தேசிய காங்கிரசு துணைத் தலைவராகவும் மாநிலங்களவை உறுப்பினராகவும், மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் இருந்தவர்.[1][2][3]. இவர் சரோஜினி வரதப்பனின் சகோதரி ருக்குமணியின் மகளாவார் எம். பக்தவத்சலம் இவரின் பாட்டனார் ஆவார்.[4][5].

விரைவான உண்மைகள் ஜெயந்தி நடராஜன், சுற்றுச்சூழல் மற்றும் வனங்கள் அமைச்சர் ...
Remove ads

இளமை

ஜெயந்தி நடராஜன் இந்தியாவில் தமிழ்நாட்டில் சென்னையில் பிறந்தார். மருத்துவர் சி. ஆர். சுந்தரராஜன், ருக்மிணி சுந்தரராஜன் ஆகிய இணையோரின் மகளாகப் பிறந்தார். ஜெயந்தி நடராஜன் பிரபல சமூக சேவகர் சரோஜினி வரதப்பனின் மருமகள் ஆவார். இவரது தாய்வழி தாத்தா மு. பக்தவத்சலம், இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முக்கிய அரசியல்வாதியும், 1963 முதல் 1967 வரை தமிழ்நாட்டின் முதலமைச்சராகவும் இருந்தவர் ஆவார். சென்னை சர்ச் பூங்காவில் உள்ள திரு இருதய மேல்நிலைப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தார். ஜெயந்தி சட்டப்படிப்பைத் தொடர்வதற்கு முன்பு எத்திராஜ் மகளிர் கல்லூரியில் பயின்றார், பின்னர் சென்னையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார். தனது வணிக நடைமுறையைத் தவிர, அகில இந்திய மகளிர் மாநாடு, சட்ட உதவி வாரியம் உள்ளிட்ட பல சமூக அமைப்புகளிலும் இவர் இலவசமாக சேவையாற்றியுள்ளார். சென்னையில் உள்ள தூர்தர்ஷன் கேந்திராவில் செய்தி ஒளிபரப்பாளராகவும் சிறிது காலம் பணியாற்றினார்.[6][7]

Remove ads

அரசியல்

காங்கிரசு

1980களில் இராஜீவ் காந்தியினால் இவரது அரசியல் வாழ்க்கை தொடங்கியது. இவர் 1986-ஆம் ஆண்டிலும், 1992-ஆம் ஆண்டிலும் இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார்.

தமிழ் மாநில காங்கிரசு

1990களில் நரசிம்ம ராவ் மீது அதிருப்தி அடைந்த ஜெயந்தி நடராஜனும் தமிழ்நாட்டைச் சேர்ந்த பிற தலைவர்களும் இந்திய தேசிய காங்கிரசு கட்சியிலிருந்து விலக முடிவு செய்தனர். இவர்கள் ஜி. கே. மூப்பனார் தலைமையில் தமிழ் மாநில காங்கிரசு கட்சியினை நிறுவினர். ஜெயந்தி நடராஜன் மாநிலங்களவை உறுப்பினர் பதவியிலிருந்து விலகினார். 1997ஆம் ஆண்டு மீண்டும் தமிழ் மாநில காங்கிரசு சார்பில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தமிழ் மாநில காங்கிரஸ் தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்றக் கழகத்துடன் கூட்டணி அமைத்து மத்தியில் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தது. 1997-ஆம் ஆண்டில் ஜெயந்தி நடராஜன் நிலக்கரி, சிவில் விமானப் போக்குவரத்து மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களுக்கான இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

காங்கிரசு கட்சிக்குத் திரும்புதல்

மூபனார் இறந்த பிறகு, தமிழ் மாநில காங்கிரசு தலைவர்கள் காங்கிரசுடன் இணைவதற்கு முடிவு செய்தனர். சோனியா காந்தி ஜெயந்தி நடராஜனை கட்சியின் செய்தித் தொடர்பாளராக நியமித்தார். 2011 சூலை 12 அன்று ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைமையிலான மத்திய அரசில் ஜெய்ராம் ரமேஷுக்குப் பதிலாக சுற்றுச்சூழல் அமைச்சராகப் பதவியேற்றார். இவர் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இணை அமைச்சராக (சுயாதீன பொறுப்பு) 12 சூலை 2011 முதல் 20 திசம்பர் 2013 வரை பணியாற்றினார்.[8]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads