டாமாய் எல்ஆர்டி நிலையம்
டாமாய் இலகு விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
டாமாய் எல்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Dato' Keramat LRT Station; மலாய்: Stesen Dato' Keramat; சீனம்: 拿督克拉末) என்பது மலேசியா, கோலாலம்பூர், கிளானா ஜெயா வழித்தடத்தில் அமைந்துள்ள ஓர் இலகுரக விரைவுப் போக்குவரத்து (LRT) நிலையமாகும். இந்த வழித்தடம் முன்பு புத்ரா வழித்தடம் என்று அழைக்கப்பட்டது.[2]
டத்தோ கெராமாட் வட்டாரத்தில் உள்ள டாமாய் குடியிருப்புப் பகுதியின் பெயரில் இருந்து டாமாய் எல்ஆர்டி நிலையத்திற்குப் பெயரிடப்பட்டது. பசார் செனி இலகுத் தொடருந்து நிலையம் தொடங்கி கோம்பாக் எல்ஆர்டி நிலையம் வரையிலான இரண்டாவது கட்டமைப்புப் பிரிவின் ஒரு பகுதியாக 1 சூன் 1999 அன்று இந்த நிலையம் திறக்கப்பட்டது.[2]
மஸ்ஜித் ஜமெயிக் எல்ஆர்டி நிலையம் மற்றும் கோம்பாக் எல்ஆர்டி நிலையம் இடையே உள்ள 13 நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்.[3]
Remove ads
பொது
டாமாய் எல்ஆர்டி நிலையம், கிழக்கு கோலாலம்பூரில் உள்ள டத்தோ கெராமாட் கிராமத்தின் மையப் பகுதியில்; கிள்ளான் ஆற்றின் வடக்குக் கரையிலும், அம்பாங்-கோலாலம்பூர் உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலையிலும் அமைந்துள்ளது.[2]
டத்தோ கெராமாட் பகுதிக்குச் சேவை செய்யும் மூன்று கிளானா ஜெயா வழித்தட நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும். இதே டத்தோ கெராமாட் பகுதிக்குச் சேவை செய்யும் மற்ற இரண்டு நிலையங்கள்: டத்தோ கெராமாட் எல்ஆர்டி நிலையம் மற்றும் ஜெலாதெக் எல்ஆர்டி நிலையம்.
அம்பாங் பார்க் எல்ஆர்டி நிலையத்திற்குப் பிறகு தரைக்கு மேலே உயர்த்தப்பட்ட நிலையில் கட்டப்பட்ட முதல் நிலையம் இந்த டாமாய் நிலையம் ஆகும்
Remove ads
அமைவு
இந்த நிலையம் இரண்டு அடுக்குகளைக் கொண்ட நிலையமாகும். தொடருந்துகள் வழியாக ஏறி இறங்கும் இடம் தரையிலிருந்து மேலே உள்ளது. இந்த நிலையத்தில் கிளானா ஜெயா வழித்தடத்தின் சேவைகளுக்கான மையத் தளமும் உள்ளது.[4]
ஓர் உயரமான நிலைய அமைப்பைக் கொண்ட டாமாய் நிலையம் மூன்று அடுக்கு நிலைகளைக் கொண்டுள்ளது; அதாவது மூன்று அடுக்குத் தளங்களைக் கொண்டது.
கீழ் அடுக்கில், சாலை மட்டத்தில் பயணிகளின் அணுகல் தளம் உள்ளது; மற்றும் மேல் உயர் அடுக்கு நிலைகளில் கடப்புச் சீட்டு, சிற்றுண்ண்டிச் சாலைகள் உள்ளன.
மாற்றுத் திறனாளிகளுக்கான சேவை
அனைத்து அடுக்குகளிலும் படிக்கட்டுகள், மின்படிக்கட்டுகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான சுமையுந்துகள் உள்ளன. அத்துடன் இரு திசைகளின் வழியாகப் பயணிக்கும் தொடருந்துகளுக்கு என தனிப்பட்ட ஒரு தீவு நடைமேடையையும் இந்த நிலையம் பயன்படுத்துகிறது.
நவீன முறையிலான மழை வெயில் தடுப்பு கூரைகளால் இந்த நிலையம் கட்டப்பட்டு உள்ளது.
Remove ads
காட்சியகம்
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads