டிசம்பர் பூக்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
டிசம்பர் பூக்கள் (December Pookal) 1986 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இதில் மோகன், ரேவதி, நளினி, நிழல்கள் ரவி, கவுண்டமணி, செந்தில் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
Remove ads
கதை
சந்துருவின் மனைவி ஒரு விபத்திற்குள்ளாகிறார். பின்னர் சந்துரு கொலைவெறிச் செயலில் ஈடுபடுகிறார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது மனைவிக்கு இரத்த தானம் செய்ய மறுத்த பெண்கள் அனைவரையும் கொலை செய்கிறார். சந்துருவின் புதிய காதலியான பூர்ணிமா, சந்துருவின் மனநிலையைப் புரிந்து கொண்டு அவரை எதிர்கொள்கிறார். ஆனால் அவருக்கு உதவி கிடைப்பதற்குப் பதிலாக, அவரால் கொல்லப்படுவது பாக்கியம் என்று உணர்ந்து என்று அவரிடம் சொல்கிறார். சந்துருவைப் பின்னால் சுட காவலர்கள் சரியான நேரத்தில் வருகிறார்கள்.
Remove ads
நடிகர்கள்
- மோகன்- சந்துரு[1]
- ரேவதி -பூர்ணிமா
- நளினி - உமா
- ஆய்வாளர் வினோத்தாக நிழல்கள் ரவி
- மேஸ்த்ரி மயில்சாமியாக கவுண்டமணி
- செந்தில் குமாரனாக செந்தில்
- சிவச்சந்திரன்
- இளவரசன்
- பூர்ணிமாவின் தந்தையாக வி.கோபாலகிருஷ்ணன்
- சேசாத்ரியாக டெல்லி கணேஷ்
- சந்திருவின் உதவியாளராக சின்னி ஜெயந்த்
- மனோன்மணியாக ஒய். விஜயா
- சரசுவாக குயிலி
- காவலராக குமரிமுத்து
- ஓமக்குச்சி நரசிம்மன்
- மாஸ்டர் ஹாஜா ஷெரிப்
- எம். எல். ஏ. தங்கராஜ்
பாடல்கள்
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். [2]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads