தஞ்சாவூர் மராத்திய அரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தஞ்சாவூர் மராத்திய அரசு சோழ மண்டலத்தை ஆண்ட மராத்தியர்களின் அரசாகும். இவர்களின் தலைநகரம் தஞ்சாவூர் ஆகும். போன்சலே குலத்தில் பிறந்த சத்ரபதி சிவாஜியின் இளைய தம்பி வெங்கோஜி என்ற ஏகோஜி என்பவர், தஞ்சாவூரை தஞ்சை நாயக்கர்களிடமிருந்து 1674இல் கைப்பற்றி தஞ்சாவூர் மாராத்திய அரசை நிறுவினார். இவரின் வழித்தோன்றல்கள் தஞ்சை மராத்திய அரசை 1855 முடிய அரசாண்டனர்.[2]


Remove ads
தஞ்சாவூர் மராத்தியர்களின் ஆட்சி
தஞ்சாவூரை விஜயராகவ நாயக்கரிடமிருந்து மராட்டியத்தைச் சேர்ந்த வெங்கோஜி என்ற ஏகோஜி ராவ் 1674ஆம் ஆண்டில் கைப்பற்றி ஆண்டார்.[3]
பின்னணி
தஞ்சாவூர் விஜயராகவ நாயக்கர் மீது மதுரை சொக்கநாத நாயக்கர் படையெடுத்து வந்தபோது, பிஜப்பூர் சுல்தானிடம் தஞ்சை நாயக்கர் உதவி கோரினார். பிஜப்பூர் சுல்தானின் ஜாகீர்தாராக இருந்த வெங்கோஜி என்ற ஏகோஜியை படைகளுடன் அனுப்பி வைத்தார். இவர் மராட்டிய மன்னர் சிவாஜியின் சகோதரர் முறையானர். இவரது படைக்கும், மதுரை நாயக்கருக்கும் இடையில் தஞ்சை அய்யம்பேட்டையில் போரில் விஜயராகவ நாயக்கர் தோற்றதால், வெங்கோஜி தஞ்சாவூர் மன்னராக முடிசூட்டிக்கொண்டார்.[4]
Remove ads
சுதேச சமஸ்தானமாக
1799இல் கிழக்கிந்தியக் கம்பெனியிடம் வீழ்ந்த தஞ்சாவூர் மராத்திய அரசு, 1855 வரை கிழக்கிந்திய கம்பெனி ஆட்சியாளர்களுக்கு அடங்கிய சுதேச சமஸ்தானமாக 1855 முடிய விளங்கியது.[5]
கம்பெனி நேரடி ஆட்சியில்
மன்னர் தஞ்சாவூர் சிவாஜி ஆண் வாரிசு இன்றி 1855ல் இறந்தார். எனவே அவகாசியிலிக் கொள்கையின் படி, வாரிசு அற்ற தஞ்சாவூர் மராத்திய அரசை, 1855இல் பிரித்தானியக் கிழக்ந்தியக் கம்பெனியின் நேரடி ஆட்சியில் இணைக்கப்பட்டது.
ஆட்சியாளர்கள்
- வெங்கோஜி என்ற ஏகோஜி (தஞ்சாவூர் மராத்திய அரசின் நிறுவனர்) 1674 - 1684
- முதலாம் சாகுஜி 1684-1712
- முதலாம் சரபோஜி 1712-1728
- துக்கோஜி 1728-1736
- இரண்டாம் வெங்கோஜி 1736–1737
- சுஜான்பாயி 1737 - 1738
- இரண்டாம் சாகுஜி 1738 - 1739
- பிரதாப சிம்மன் 1739-1763
- துளஜாஜி 1763-1773, 1776-1798
- இரண்டாம் சரபோஜி 1798-1832
- தஞ்சாவூர் சிவாஜி 1832-1855
இதனையும் காண்க
மேற்கோள்கள்
உசாத்துணை
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads