தமிங்கிலம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ் மொழியின் பேச்சிலோ எழுத்திலோ ஆங்கில சொற்களின் பயன்பாடும் ஆங்கில இலக்கணக் கட்டமைப்பும் அதிகம் காணப்படும் பொழுது அந்த பேச்சையோ எழுத்தையோ தமிங்கிலம் எனலாம். தமிங்கிலிசு, தங்கிலிசு என்றும் சிலர் குறிப்பிடுவதுண்டு. தமிங்கிலம் ஆங்கிலத்தின் வட்டார மொழி வழக்கு அல்ல. இது தமிழ் மொழியின் திரிபே ஆகும். தமிங்கிலத்தை தமிழில் அதிக சமசுகிருதச் சொற்களின் பயன்பாட்டால் தோன்றிய மணிப்பிரவாள நடையோடு ஒப்பிடுவது தகும். சில தமிழர்கள் தமிழரோடு ஆங்கிலத்தில் உரையாடும்பொழுது தமிழ்ச் சொற்களை இடையிடையே பயன்படுத்துவதும் உண்டு.[1][2][3][4]
Remove ads
காரணங்கள்:
குடியேற்றவாதம்
ஆங்கில காலனித்துவ ஆட்சியில் ஆங்கிலம் கல்வி, நிர்வாக, சட்ட, அரச மொழியாக இருந்தது. அது ஆங்கில மொழி தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் பரவ வழி வகுத்தது. தமிழ் மொழி பேச்சு வழக்கில் ஆங்கில மொழியின் பல சொற்களை உள்வாங்கியது.
வர்க்கவாதம்
தமிங்கிலம் பேசுவதால், அதாவது அதிக ஆங்கில சொற்கள் பயன்படுத்திப் பேசினால், தம்மை படித்தவராக, அல்லது உயர் வர்க்கத்தவராக அடையாளப்படுத்தலாம் என்று தவறாக எண்ணிப் பலர் பயன்படுத்துகிறார்கள். இது இவர்களின் அறியாமையே. ஆங்கிலம் ஒரு பொருளீட்டு மொழி மட்டுமே என்பதை உணராததே ஆகும். இது காலனித்துவ காலத்தில் உயர் கல்வியை அல்லது உயர் பதவிகளை ஆங்கிலம் படித்தோர் மட்டும் பெற்றதன் தொடர்ச்சியான மனப்பாங்கு ஆகும்.
ஊடகங்கள்
இன்று ஊடகங்களில், குறிப்பாக தமிழ்நாட்டுத் தொலைக்காட்சிகளில் நல்ல தமிழ் தெரியாத அல்லது சரியான தமிழ் உச்சரிப்புத் தெரியாத தொகுப்பாளர்கள் தமிங்கிலத்தைப் பெரிதும் பயன்படுத்துகிறார்கள். இதைப் பின்பற்றி பலரும் தமிங்கிலம் பேசுகிறார்கள். இந்த இழிநிலையை நீக்க விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனத் தமிழ் ஆர்வலர்கள் கூறுகின்றனர். தமிழர் வாழும் இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், புலம்பெயர்ந்து வாழும் பிற நாடுகளில் இத்தகைய இழிநிலை இல்லை.
உலகமயமாதல்
மொழிக் குறைபாடுகள்
தமிழ் மொழியில் இலகுவாக உயர் கல்வி பெறும் வசதி இல்லை.. குறிப்பாக கணிதம், பொறியியல், வேதியியல், மருத்துவம் போன்ற துறைகளில் தமிழ் மொழியில் ஆக்கங்கள் அரிது. இதனால் அன்றாடம் பயன்படும் மொழியாக ஆங்கிலம் தமிழ்நாட்டிலும், இலங்கையிலும் உள்ளது. இப்படி துறைசார் உரையாடல்களில் ஆங்கிலம் அதிகம் பேசுப்படுவது, அறிவியல் தமிழ் போதிய வளர்ச்சி பெறாமை காரணம் ஆகும்.
Remove ads
தமிங்கிலச் சொற்கள் பட்டியல்
Remove ads
ஊடகங்களில் தமிங்கிலம்
தமிழ்நாட்டில் அச்சு மற்றும் எழுத்து ஊடகங்களில் தமிங்கிலத்தில் பேசுவதும் எழுதுவதும் நாகரிகம் எனக் கருதுவோர் உள்ளனர். குறிப்பாக இளைய தலைமுறையினரோடு இயல்பாக தொடர்பாடுவதற்கு தமிங்கிலத்தையே பயன்படுத்துகின்றனர். ஆங்கிலம் கலக்காத தமிழில் பேசுவோர் மொழித் தீவிரவாதிகள் என்று சித்தரிக்கப்படுவதும் நகைப்புக்குண்டாவதும் உண்டு.
தொலைக்காட்சி நிகழ்ச்சிகள்
- லிட்டில் யீனியசு - அதி பெரும்பான்மையாக ஆங்கிலம்
- சூப்பர் மம் - பெரும்பாலும் ஆங்கிலம்
- சூப்பர் சிங்கர்
திரைப்படங்கள்
இவற்றையும் பார்க்க
- செந்தமிழ்
- மொழி புத்துயிர்ப்பு
- தனித்தமிழ்
- மொழி நகர்வு
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads