தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
![]() | இந்தக் கட்டுரை கொண்டுள்ள உள்ளடக்கம் விளம்பரத்தைப் போல் காணப்படுகிறது.. (திசம்பர் 2017) |
![]() | இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
![]() | இந்தக் கட்டுரையில் பெரும்பகுதி உரையை மட்டும் கொண்டுள்ளது. கலைக்களஞ்சிய நடையிலும் இல்லை. இதைத் தொகுத்து நடைக் கையேட்டில் குறிப்பிட்டுள்ளபடி விக்கிப்படுத்துவதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.
இந்தக் கட்டுரையைத் திருத்தி உதவுங்கள் |
Remove ads
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (Tamil Nadu Thowheed Jamath) என்பது தமிழ்நாட்டில் இயங்கும் இசுலாமிய இயக்கம் ஆகும்.
தமுமுக அமைப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக அதன் நிறுவனர்களில் ஒரு பிரிவினரான பி. ஜெய்னுல் ஆபிதீன், எஸ். எம். பாக்கர் மற்றும் சிலரால் தனியாகப் பிரிந்து 2004 மே 16 அன்று இந்த அமைப்பு துவங்கப்பட்டது. தங்களுக்கென்று பச்சை வெள்ளை கருப்பு கொடியுடன் அரசியலில் நேரடியாக ஈடுபடாமல் அரசியல் சார்ந்த விவகாரங்களில் மட்டும் தலையிட்டுச் செயல்பட்டு வருகிறது. அமைப்பின் அடிப்படை உறுப்பினர் முதற்கொண்டு எவரும் தேர்தலில் (வார்டு தேர்தல் உட்பட) போட்டியிடக்கூடாது என்பதைக் கொள்கையாக கொண்டுள்ளது. ஏகத்துவவாதிகள் என்று அழைக்கக்கூடியவர்களை மட்டுமே உறுப்பினர்களாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.
ஆரம்பத்தில் முஸ்லீம் மக்களின் இட ஒதுக்கீடு உள்ளிட்ட சமூக நலன்களுக்காக மட்டும் தேர்தல் நேர ஆதரவு நிலைப்பாட்டை எடுத்து கொண்டிருந்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் பின்பு அதன் மேல் சொல்லப்பட்ட குற்றச்சாட்டுகளை, அதாவது அதன் தலைவர் தேர்தல் நேரத்தில் அரசியல் கட்சிகளிடம் அவர்களை ஆதரிப்பதற்காக கையூட்டுப் பெறுகிறார் என்பது போன்ற குற்றச்சாட்டுகளால் இனிவரும் காலங்களில் எந்த ஒரு அரசியல் கட்சிகளுக்கும் ஆதரவு கொடுப்பதோ பரப்புரை செய்வதோ இல்லை என்ற நிலைப்பாட்டினை எடுத்தது. [1], [2]
Remove ads
நிர்வாகம்
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் தன்னுடைய கிளைகளைக் கொண்டிருக்கிறது. தமிழகம் மட்டுமல்லாது புதுச்சேரி, காரைக்கால், கேரளம், கர்நாடகம், ஆந்திரா, மகாராஷ்டிரா போன்ற பகுதிகளில் உள்ள தமிழ் முஸ்லிம்களைக் கொண்டு அங்குள்ள கிளைகளை நிர்வகித்து வருகின்றது. நிறுவனர்களுள் ஒருவரான எஸ். எம். பாக்கர் மற்றும் சிலர் இந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்ட பின்னர் இந்திய தவ்ஹீத் ஜமாஅத் என்னும் புதிய அமைப்பைத் துவங்கினர். மற்றொரு நிறுவனரான பி. ஜெய்னுல் ஆபிதீனும் ஒரு பாலியல் குற்றத்தைத் தானே ஒப்புக்கொண்டதால் 2018 ஆம் ஆண்டு மே-13 ஆம் தேதி இந்த அமைப்பிலிருந்து நீக்கப்பட்டார்.[3]
வெளிநாட்டு மண்டலங்கள்
ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, கத்தார், குவைத், ஓமான், பக்ரைன், புரூணை, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, பிரான்சு, ஆஸ்திரேலியா, அமெரிக்கா, போன்ற நாடுகளிலும் தமிழ் முஸ்லிம்களைக் கொண்டு அங்குள்ள கிளைகளை நிர்வகித்து வருகின்றது.
Remove ads
செயற்பாடுகள்
சமயப் பணிகள்
திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அடிப்படையிலான பள்ளிவாசல்களை தனது உறுப்பினர்களுக்காகத் தமிழகம் முழுவதும் அமைத்து பராமரித்து வருகிறது. பித்ரா, ஜகாத், குர்பானி, போன்றவற்றை வசூலித்து வழங்கி வருகின்றது. மேலும் இசுலாத்தைத் தழுவியவர்களுக்கும், போதிப்பவர்களுக்கும் இசுலாமிய (ஆண்கள், பெண்கள் தனித்தனியே) கல்லூரிகளை நடத்தி வருகின்றது.
பிறவகை பிரச்சாரங்கள்
தீவிரவாதத்திற்கு எதிராக முஸ்லிம்களின் தீவிர பிரச்சாரம் என்ற தலைப்பில் 2014 அக்டோபர் 15 முதல் 2014 நவம்பர் வரை தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் ஒரு மாத காலம் பிரச்சாரம் செய்தது.[4]
மது மற்றும் புகையிலை உள்ளிட்ட போதைப்பொருட்களுக்கு எதிராக தீவிரபிரச்சாரத்தினை மேற்கொண்டுள்ளது. [5]

சமூக சேவைகள்
- திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் முதியோர் ஆதரவு இல்லம் நடத்தப்பட்டு வருகிறது.
- பெற்றோர்களால் கைவிடப்பட்ட ஆண் குழந்தைகளுக்காக தஞ்சை மாவட்டம் சுவாமிமலை மற்றும் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் அர்ரஹ்மான் சிறுவர் ஆதரவு இல்லம் என்ற பெயரில் நடத்திவருகின்றது.
- அதிக எண்ணிக்கையில் இரத்ததானம் செய்ததற்காக மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் பல விருதுகளை பெற்றுள்ளது. தமிழகம் மட்டுமல்லாது வளைகுடா நாடுகளிலும், இரத்ததானம் செய்து வருவதோடு அங்கும் பல்வேறு விருதுகளை பெற்றுவருகின்றது.[6][7]
- 2004 ஆம் வருடம் ஏற்பட்ட சுனாமியின் போதுபெருமளவிலான மக்கள் பாதிக்கப்பட்டனர். அதில் இறந்தவர்களின் உடல்களை மீட்டெடுத்து நல்லடக்கம் செய்ததோடு அதில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு நிவாரணப்பணிகளிலும் ஈடுபட்டனர்.
- 2011 ஆம் வருடம் கடலூர் மாவட்டத்தினை தாக்கிய தானே புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணப்பணிகளில் ஈடுபட்டனர்.[8]
- 2015 ஆம் வருடம் சென்னை மற்றும் கடலூர் மாவட்டத்தில் பெய்த கனமழையினால் பாதிக்கப்பட்ட மக்களை முகாம்களில் தங்கவைத்து உணவு, உடை மற்றும் அத்தியாவசிய பொருள்களை வழங்கியதோடு அவர்களுக்கான மருத்துவ முகாம்களையும் நடத்தினர். தொடர்ந்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் துப்புறவு பணிகளிலும் ஈடுபட்டனர். இப்பணியில் 30,000 க்கும் அதிகமான தொண்டர்களை இவ்வமைப்பினர் ஈடுபடுத்தினர்.[9]
- 2017 ஆம் வருடம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை தாக்கிய வார்தா புயலினால் பெருமளவிலான மரங்கள் சாய்ந்தத நிலையில், மக்களுக்கான நிவாரணப்பணிகளிள் ஈடுபட்டு, ஒரு லட்சம் மரங்களை நடும் பணிகளிலும் ஈடுபட்டனர்.[10]
- மியான்மர் நாட்டைச் சேர்ந்த ரோகிங்கியா முஸ்லிம்களை வங்கதேசத்திற்கு அகதியாய் நுழைந்துள்ளனர். அவர்களுக்கு தேவையான உதவிகளை ஜமாஅத்தின் சார்பாக செய்துள்ளனர்.[11]
- தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இலவச ஆம்புலன்ஸ் சேவைகளை செய்து வருகிறது
- கொரோனாவில் பாதிக்கபட்டு இறந்து போனவர்களை மத பேதமின்றி நல்லடக்கம் செய்ததது
- கொரோனா காலத்தில் பசித்தவர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தின் கீழ் ஏராளமான எழைகளுகு உணவு வழங்கினர்
Remove ads
விமர்சனம்
2013 இல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செயலாளர் கௌதம புத்தர் தன்னின உயிருண்ணி செயற்பாட்டில் ஈடுபட்டார் எனவும் மூவிரணத்தினம் என்பது ஒன்றுமில்லை, அது வெறும் கல் வழிபாடு எனவும் தெரிவித்தார்.
உலகப் தீவிரவாத நிர்ணர் ரொகான் குணரத்த தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இலங்கை மீது தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்றார். ஏனென்றால் இக்குழு அடைப்படைவாத பிரச்சாரம் செய்பவர்களைக் கொண்டுள்ளது. இது இலங்கையிலும் தாக்கம் செலுத்துகிறது.[12][13]
Remove ads
அதிகாரபூர்வ வாரஇதழ்
- நடுநிலை சமுதாயம் வார இதழ்
மாத இதழ்கள்
- தீன்குலப் பெண்மணி மகளிர் மாத இதழ்
- ஏகத்துவம் ஓரிறைக் கொள்கை விளக்க மாத இதழ் என்ற பெயரிலும் வெளிவந்து கொண்டிருக்கிறது.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads