தெற்காசியப் பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தெற்காசியப் பல்கலைக்கழகம் (South Asian University) என்பது தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பிற்கான (SAARC) ஆப்கானித்தான், வங்களாதேசம், பூடான், இந்தியா, மாலத்தீவு, நேபாளம், பாக்கித்தான்,இலங்கை ஆகிய எட்டு உறுப்பு நாடுகளால் நிதியுதவி செய்யப்படும் ஒரு சர்வதேசப் பல்கலைக்கழகமாகும் . பல்கலைக்கழகம் 2010 இல் இந்தியாவின் அக்பர் பவனில் உள்ள தற்காலிக வளாகத்தில் மாணவர்களைச் சேர்க்கத் தொடங்கியது. பிப்ரவரி 2023 முதல், இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்திற்கு (IGNOU) அடுத்ததாக[4] தெற்கு டெல்லியில் உள்ள மைதான் கர்ஹியில் உள்ள அதன் நிரந்தர வளாகத்தில் பல்கலைக்கழகம் இயங்கி வருகிறது.[5]
Remove ads
வரலாறு
நவம்பர் 2005 இல் டாக்காவில் நடைபெற்ற 13வது சார்க் உச்சி மாநாட்டில், இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங், சார்க் உறுப்பு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு உலகத் தரம் வாய்ந்த வசதிகள் மற்றும் தொழில்முறை ஆசிரியர்களை வழங்குவதற்காக தெற்காசியப் பல்கலைக்கழகத்தை நிறுவ முன்மொழிந்தார். [6] 14வது சார்க் உச்சி மாநாட்டில் "தெற்காசிய பல்கலைக்கழகத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தம்" கையெழுத்தானது. சார்க் உறுப்பு நாடுகளும் இந்தியாவில் பல்கலைக்கழகம் நிறுவப்படும் என்று முடிவு செய்தன. [6] பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரும், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான பேராசிரியர் ஜி.கே.சதா, திட்டத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும், முதல் தலைவராகவும் அலுவல்பூர்வமாக நியமிக்கப்பட்டார். [7]
இத்திட்டத்தில் இந்தியா பெரும்பான்மையான நிதியை வழங்குகிறது, சுமார் US$239.93 மில்லியன், பல்கலைக்கழகத்தின் அடித்தளத்திற்கு வழங்கியது. இது 2014 வரை பல்கலைக்கழகத்தினை நிறுவியதற்கான மொத்த செலவில் 79 சதவீதமாகும். 2018 ஆம் ஆண்டு நிலவரப்படி, பாக்கித்தான் செலுத்த வேண்டிய பெரும்பாலான நிலுவைத் தொகையை செலுத்தியுள்ளது. [8] 2023 ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவைத் தவிர மற்ற அனைத்து உறுப்பு நாடுகளும் நிலுவைத் தொகையைச் செலுத்தத் தவறிவிட்டன. [9]
பல்கலைக்கழகத்தின் முதல் கல்வி அமர்வானது பொருளாதாரம் மற்றும் கணினி அறிவியலில் இரண்டு முதுகலை கல்வித் திட்டங்களுடன் ஆகஸ்ட் 2010 இல் தொடங்கியது. 2023[update] இன் படி ,பயன்பாட்டுக் கணிதம், உயிரி தொழில்நுட்பம், கணினி அறிவியல், பொருளாதாரம், சர்வதேச உறவுகள், சட்ட ஆய்வுகள் மற்றும் சமூகவியல் ஆகியவற்றில் முதுகலை மற்றும் எம்பில்/முனைவர் பட்டங்களை வழங்குகிறது. [10] எட்டு சார்க் உறுப்பு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்கள் கையெழுத்திட்ட அரசுகளுக்கிடையேயான ஒப்பந்தத்தின்படி சார்க் அமைப்பின் அனைத்து உறுப்பு நாடுகளாலும் பல்கலைக்கழகத்தின் பட்டங்கள் அங்கீகரிக்கப்படுகின்றன. [11]
தெற்காசியப் பல்கலைக்கழகத்தில் முக்கியமாக எட்டு சார்க் நாடுகளைச் சேர்ந்த மாணவர்களும் சேர்க்கை பெறுகின்றனர். இருப்பினும், மற்ற கண்டங்களில் இருந்தும் மாணவர்களும் கலந்து கொள்கின்றனர். மாணவர் சேர்க்கைக்கு நாடு வாரியாக ஒதுக்கீடு முறை உள்ளது. ஆண்டுதோறும் எட்டு நாடுகளில் உள்ள பல்வேறு மையங்களில் சேர்க்கைக்கான சோதனைகளை நடத்துகிறது. [12]
Remove ads
வளாகம்

தெற்காசியப் பல்கலைக்கழகத்தின் வளாகம் இந்திரா காந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகம் மற்றும் அசோலா வனவிலங்கு சரணாலயத்திற்கு அருகில் உள்ள மைதான் கர்ஹியில் உள்ளது. 100 கொண்ட இந்த வளாகத்தில் ஆசிரிய கட்டிடங்கள், தங்கும் விடுதிகள், விளையாட்டு மைதானங்கள், குடியிருப்புகள் மற்றும் ஒரு சங்கம் உள்ளது. கட்டுமானம் 2022-23 இல் நிறைவடைந்தது. [13]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads