தேசிய நெடுஞ்சாலை 1
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 1 (தேநெ 1)(National Highway 1 -India) என்பது இந்தியாவில் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஒன்றிய பிரதேசங்களுக்கு இடையே செல்கிறது.[1][2] இது தேசிய நெடுஞ்சாலை 1எ (இந்தியா) மற்றும் தேசிய நெடுஞ்சாலை 1டி (இந்தியா) பழைய பகுதிகளைக் கொண்டுள்ளது.[2] இந்தியாவின் வடக்கு கிழக்கு-மேற்கு நெடுஞ்சாலை என்பதைக் குறிக்கிறது.

Remove ads
பாதை விளக்கம்

தேசிய நெடுஞ்சாலை 1 ஊரியிலிருந்து பாரமுல்லா, சிறிநகர், சோனாமார்க், சோஜி லா கணவாய், திராஸ், கார்கில் மற்றும் லே செல்கிறது. இந்த பாதை உயரமான மலைப்பாதைகள் வழியாகச் செல்கிறது. பெரும்பாலான சாலைகள் மலைப்பகுதிகளில் உள்ளன. இந்த தேசிய நெடுஞ்சாலை லடாக் பகுதியின் உயிர்நாடியாகும். ஒரு மாற்றுப் பாதை, லே-மணாலி நெடுஞ்சாலை உள்ளது. ஆனால் அது இன்னும் உயரமான மலைப்பாதையாகும். தெநெ 1 இந்தியா-பாக்கித்தான் எல்லைக்கு அருகில் செல்கிறது.
Remove ads
போக்குவரத்து
சம்மு மற்றும் காஷ்மீர் மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் இந்த வழித்தடத்தில் ஸ்ரீநகர் மற்றும் லே இடையே வழக்கமான சொகுசு மற்றும் சாதாரண பேருந்து சேவைகளை கார்கிலில் ஓர் இரவு பயணமாக வழங்குகிறது. பயணத்திற்கு ஸ்ரீநகரில் மகிழ்வுந்துகளும் கிடைக்கின்றன.
மேலும் பார்க்கவும்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads