தேசிய நெடுஞ்சாலை 216 (இந்தியா)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தேசிய நெடுஞ்சாலை 216 (தே. நெ. 216) (முன்பு தே. நெ. 214, தே. நெ. 215) என்பது இந்திய மாநிலமான ஆந்திராவில் உள்ள ஒரு தேசிய நெடுஞ்சாலை ஆகும். பழைய தேசிய நெடுஞ்சாலைகள் 214-ம் 214அவும் இணைக்கப்பட்டு தேசிய நெடுஞ்சாலை 216 என மறுபெயரிடப்பட்டன. இது கத்திப்பூடியில் தேசிய நெடுஞ்சாலை 16-ன் சந்திப்பிலிருந்து தொடங்கி காக்கிநாடா, அமலாபுரம், திகமர்ரு (பாலகோல்லு) நரசாபுரம், மச்சிலிப்பட்டணம், ரேப்பல்லே, செருகுப்பள்ளி, பாபட்லா, சிராலா வழியாகச் சென்று மீண்டும் தேசிய நெடுஞ்சாலை 16ஐ ஒங்கோலில் இணைக்கிறது.[1][2] விசாகப்பட்டினம்-காக்கிநாடா பெட்ரோ ரசாயன வழித்தடம், நெடுஞ்சாலையில் முன்மொழியப்பட்ட திட்டமாகும்.
Remove ads
வழித்தடம்
இந்த நெடுஞ்சாலையின் மொத்த நீளம் 391.3 கிலோமீட்டர்கள் ஆகும்.[2]/ இது ஆந்திராவின் காக்கிநாடா, கோணசீமா, கிழக்கு கோதாவரி, மேற்கு கோதாவரி. கிருஷ்ணா, பாபட்லா, பிரகாசம் மாவட்டங்கள் வழியாகச் செல்கிறது.
தேசிய நெடுஞ்சாலை 216, தேசிய நெடுஞ்சாலை 16-லிருந்து கத்திப்பூடி கிராமத்தில் தொடங்கி, கொல்லப்பிரோலு, பிதாபுரம், காக்கிநாடா, யானம், மம்மிதிவாரம், அமலாபுரம், ராஜோல், திகமர்ரு (பாலகோல்லு) , நரசாபுரம், பெடானா, மச்சிலிப்பட்ணம், ரேப்பல்லே, செருகுப்பள்ளி, பாபட்லா, சிராலா போன்ற நகரங்கள் வழியாகச் சென்று, ஓங்கோலில் உள்ள தேசிய நெடுஞ்சாலை16-உடன் இணைக்கிறது.
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads