தேசிய விளையாட்டு நாள்

From Wikipedia, the free encyclopedia

தேசிய விளையாட்டு நாள்
Remove ads

இந்திய தேசிய விளையாட்டு நாள் (Indian National Sports Day), இந்தியாவின் சிறந்த ஹாக்கி வீரராக திகழ்ந்த தியான் சந்த்தைப் பெருமைப்படுத்தும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளான ஆகத்து 29 இல் கொண்டாடப்படுகிறது. இந்நாளின் முக்கிய நோக்கமானது நாட்டு மக்களிடம் ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிப்பதாகும். தேசிய விளையாட்டு நாளில் குடியரசுத் தலைவரால், விளையாட்டுகளில் சாதனை படைத்த வீரர்களுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா, அருச்சுனா, மற்றும் துரோணாச்சார்யா போன்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்படுகின்றன. 2012 இல் முதன் முதலாக இந்திய அரசு, தியான் சந்த் பிறந்த நாளான ஆகத்து 29 ஆம் நாளை, தேசிய விளையாட்டு நாளாக அறிவித்தது.[1][2][3]

Thumb
2008 இந்தியன் பிரீமியர் லீக்கில் சென்னை சூப்பர் கிங்சு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே நடைபெற்ற இருபது-20 மட்டைப்பந்து போட்டி
Remove ads

ஈரான் தேசிய விளையாட்டு நாள்

ஈரானில், அக்டோபர் 17 ஆம் திகதி உடற்கல்வி மற்றும் விளையாட்டு நாள் என்றும், அக்டோபர் 17 முதல் 23 வரையிலான ஒரு வாரம் உடற்கல்வி மற்றும் விளையாட்டு வாரம் என்றும் அழைக்கப்படுகிறது. மக்களின் தனிப்பட்ட மற்றும் சமூக வாழ்க்கையில் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை முன்வைப்பதே முக்கிய குறிக்கோள் என அந்நாட்டின் அரசியலமைப்பின் பிரிவு III இல் இது வலியுறுத்தப்பட்டுள்ளது.[4]

கத்தார் தேசிய விளையாட்டு நாள்

கத்தார் நாட்டில் தேசிய விளையாட்டு நாள் ஆண்டுதோறும் பெப்ரவரி மாதத்தின் இரண்டாம் செவ்வாய்க் கிழமையில் கொண்டாடப்படுகிறது. இந்நாள் ஒரு பொது விடுமுறை நாளும் ஆகும்.[5] முதலாவது தேசிய விளையாட்டு நாள் 2012 ஆம் ஆண்டில் கொண்டாடப்பட்டது.[6][7]

பகுரைன் தேசிய விளையாட்டு நாள்

சவூதி அரேபியாவின் ரியாத்தில் நடைபெற்ற தேசிய ஜி.சி.சி (Gulf Cooperation Council) ஒலிம்பிக் குழுவின் உயர் தலைவர்கள் கூட்டத்தில் பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் அனைத்து வளைகுடா ஒத்துழைப்பு மன்ற (ஜி.சி.சி) நாடுகளிலும் தேசிய விளையாட்டு நாளைக் கொண்டாட முடிவு செய்ததன் அடிப்படையில், பகுரைன் இராச்சியம் பிப்ரவரி 13, 2017 அன்று பகுரைன் விளையாட்டு நாளை ஏற்பாடு செய்தது. இந்த முடிவுக்கு பிரதமர் இளவரசர் கலீபா பின் சல்மான் அல் கலீபா பச்சைக்கொடி காட்டி, தொண்டுப் பணிகள் மற்றும் இளைஞர் விவகாரங்களுக்கான மன்னரின் பிரதிநிதியும், இளைஞர் மற்றும் விளையாட்டுக்கான உச்ச மன்றத்தின் தலைவரும், பகுரைன் ஒலிம்பிக்கு குழுவின் தலைவருமான சேக் நாசர் பின் அமாத் அல் கலீபாவின் ஆதரவைப் பெற்றார். பகுரைன் விளையாட்டு நாளை ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும் ஒரு தேசிய நிகழ்வாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது மற்றும் பகுரைன் சமூகத்தின் அனைத்து பிரிவுகளையும் உள்ளடக்கியது. இந்த நிகழ்வு பகுரைன் ஒலிம்பிக் குழுவின் கவனத்தை ஈர்த்துள்ளது, இது ஒலிம்பிக்கின் உன்னத கொள்கைகளை செயல்படுத்த முயல்கிறது. இந்த கொள்கைகள் நாட்டின் அனைத்து துறைகளுக்கும் திறந்த விளையாட்டு தினத்தை நடத்துவதன் மூலம் சமூகங்களிடையே பொது சுகாதாரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளன, இது மக்களை உடற்பயிற்சி செய்ய ஊக்குவிக்கும் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையாக விளையாட்டு கலாச்சாரத்தை வளர்க்க ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாகும்.[8]

சப்பான் தேசிய விளையாட்டு நாள்

யப்பான், ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் இரண்டாவது திங்களன்று, "சுகாதாரம் மற்றும் விளையாட்டு நாள்" (体育の日 Tai-iku no Hi?) என இருநாட்களை ஒரே நாளில் கொண்டாடுகிறது. இதன் நோக்கம் ஒரு ஆரோக்கியமான மனம், உடல், உறுதி மற்றும் ஒரு செயலில் வாழ்க்கையை, விளையாட்டு என்பது ஊக்கமளிப்பதாகும். சப்பான் தேசிய விளையாட்டு நாள், 1964 இல் தோக்கியோ ஒலிம்பிக் தொடக்க நாளில் குறிக்கப்பட்டு, 1966 ஆம் ஆண்டு முதல் விடுமுறையுடன் அனுசரிக்கப்பட்டு வருகிறது. மேலும், ஆசியாவில் நடைபெற்ற முதலாவது ஒலிம்பிக்கின் நினைவாக, ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 10 இல் தேசிய விடுமுறை அறிவிக்கப்படுகிறது.2000ஆம் ஆண்டில், யப்பான் பொது விடுமுறையளித்து 'மகிழ்வான திங்கள்' முறையை செயல்படுத்தியது.[9]

Remove ads

மலேசிய தேசிய விளையாட்டு நாள்

மலேசியா தேசிய விளையாட்டு நாள் (மலாய்: அரி சுகன் நெகரா (Hari Sukan Negara) எனும் இந்நாளை, 2015ஆம் ஆண்டுமுதல், அக்டோபர் மாதம் இரண்டாவது சனிக்கிழமையில் ஆண்டுதோறும் நடைபெறுகிறது. தேசிய விளையாட்டு நாள், தன் மக்களிடம் ஒரு ஆரோக்கியமான வாழ்க்கையை ஊக்குவிக்கும் முக்கிய நோக்கமாக கொண்ட விடுமுறையாகும் என மலேசியா அறிவித்தது.[10]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads