தேரா காசி கான் மாவட்டம்

From Wikipedia, the free encyclopedia

தேரா காசி கான் மாவட்டம்
Remove ads

தேரா காசி கான் மாவட்டம் (Dera Ghazi Khan), பாக்கித்தான் நாட்டில் உள்ள பஞ்சாப் மாகாணத்தின் 41 மாவட்டங்களில் ஒன்றாகும். இதன் நிர்வாகத் தலைமையிடம் தேரா காசி கான் நகரம் ஆகும். தேரா காஜி கான் நகரம், மாகாணத் தலைநகரான லாகூருக்கு தென்மேற்கே 438 கிலோமீட்டர் தொலைவிலும், நாட்டின் தலைநகரான இசுலாமாபாத்துக்கு தென்மேற்கே 639 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது. இம்மாவட்டத்தின் கிழக்கே சிந்து ஆறு பாய்கிறது. இம்மாவட்டத்தின் வடக்கில் சுலைமான் மலையின் கொடுமுடி 10,000 அடிகள் (3,000 m) உயரத்தில் உள்ளது. இம்மாவட்டத்தின் முன்ரோ மலைக்கோட்டை மற்றும் யேக்பாய் மலைவாழிடம் சிறந்த சுற்றுலாத் தளங்களாகும்.

விரைவான உண்மைகள் தேரா காசி கான் மாவட்டம் ضلع ڈيره غازى خانضلع دیرہ غازی خان, நாடு ...
Remove ads

மாவட்ட எல்லைகள்

தேரா காசி மாவட்டத்தின் வடக்கில் தௌன்சா மாவட்டம், கிழக்கில் முசாபர்கர் மாவட்டம், தெற்கில் இராஜன்பூர் மாவட்டம், மேற்கில் பலூசிஸ்தான் மாகாணமும் எல்லைகளாக உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்

2023 பாக்கித்தான் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 292,658 குடியிருப்புகள் கொண்ட இம்மாவட்ட மக்கள் தொகை 23,48,245 ஆகும்.[4]. பாலின விகிதம் 100 பெண்களுக்கு 100.71 ஆண்கள் வீதம் உள்ளனர்.[2][3] சராசரி எழுத்தறிவு 43.98% ஆகும். 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 7,97,634 (34.06%) ஆக உள்ளனர்.[5]நகர்புறங்களில் 649,290 (27.65%) மக்கள் வாழ்கின்றனர்.[2]

சமயம்

இம்மாவட்டத்தில் இசுலாம் 99.62%, இந்து சமயம் உள்ளிட்ட பிற சமயத்தினர் 0.38% உள்ளனர்.[6]

மொழிகள்

இம்மாவட்டத்தில் சராய்கி மொழி 87.90% மக்களும், பலூச்சி மொழி 7.68% மக்களும், உருது மொழியை 3.40% மக்களும் பேசுகின்றனர்.[7]

Thumb
பஞ்சாப் (பாகிஸ்தான்) மாகாணத்தின் மாவட்டங்கள்
Remove ads

மாவட்ட நிர்வாகம்

இம்மாவட்டம் 2 வருவாய் வட்டங்களையும்[8][9], 60 ஒன்றியக் குழுக்களையும் கொண்டுள்ளது.[10]

மேலதிகத் தகவல்கள் வருவாய் வட்டம், பரப்பளவு (km²) ...

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads