நசீர் அகமது

From Wikipedia, the free encyclopedia

நசீர் அகமது
Remove ads

ஹபீஸ் நசீர் அகமது (Hafis Nazeer Ahamed, பிறப்பு: 16 ஏப்ரல் 1961) என அழைக்கப்படும் அகமது நசீர் செய்னுலாப்தீன் (Agamed Nazeer Zainulabdeen)[1], இலங்கை முசுலிம் அரசியல்வாதியும், நாடாளுமன்ற உறுப்பினரும்,[2] முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சரும் ஆவார்.[3] இவர் 2015, பெப்ரவரி 6 இல் கிழக்கு மாகாணத்தின் 3-ஆவது முதலமைச்சராக சிறீலங்கா முஸ்லிம் காங்கிரசு கட்சியின் சார்பில் தெரிவு செய்யப்பட்டார்.

விரைவான உண்மைகள் அகமது நசீர் செய்னுலாப்தீன்நா.உ, சுற்றுச்சூழல் அமைச்சர் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

நசீர் அகமது முசுலிம் காங்கிரசு கட்சியின் சார்பில் 1994 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.[4]

கெய்ரோ ஜன்சம்சு பல்கலைக்கழகத்திலும், சவூதி அரேபியா பெற்றோலியப் பல்கலைக்கழகத்திலும் கல்வி கற்று மண் பொறியியலில் பட்டம் பெற்றார்.[4] அரசியலில் நுழைந்த நசீர் ஆரம்பத்தில் சிறீலங்கா முசுலிம் காங்கிரசின் வெளிவிவகாரங்களுக்குப் பொறுப்பாளராகப் பணியாற்றினார்.[4] பின்னர் 2005 முதல் 2009 வரையில் அரசுத்தலைவர் மகிந்த ராசபக்சவின் ஆலோசகராகப் பணியாற்றினார்.[4]

Remove ads

அரசியல்

2012, செப்டம்பர் 8 இல் இடம்பெற்ற மாகாணசபைத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முசுலிம் காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்டு 11,401 விருப்பு வாக்குகள் பெற்று மாகாணசபை உறுப்பினரானார்.[1] முசுலிம் காங்கிரசு சார்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற ஒரே ஒரு முசுலிம் காங்கிரசு உறுப்பினர் இவராவார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி 15 இடங்களைக் கைப்பற்றிய நிலையில், சிறீலங்கா முசுலிம் காங்கிரசின் ஆதரவுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.[5] முசுலிம் காங்கிரசுடன் சுதந்திரக் கூட்டணி செய்து கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில் முதல் இரண்டரை ஆண்டுக் காலத்திற்கு சுதந்திரக் கூட்டணியின் உறுப்பினர் நஜீப் அப்துல் மஜீத் முதலமைச்சரானார்.[6][7] முசுலிம் காங்கிரசு மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணி இணைந்த கிழக்கு மாகாண அமைச்சரவையில் நசீர் அகமதுவுக்கு விவசாய, கால்நடை உற்பத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது.

இரண்டரை ஆண்டுகளின் பின்னர் 2015 பெப்ரவரி 6 இல் முசுலிம் காங்கிரசின் ஹாபிஸ் நசீர் அகமது கிழக்கு மாகாணத்தின் 3-ஆவது முதலமைச்சராக நியமிக்கப்பட்டார்.[8] கிழக்கு மாகாணசபை 2017 செப்டம்பர் 30 இல் கலைக்கப்பட்டது.[9]

நசீர் அகமது 2020 நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் முசுலிம் காங்கிரசின் வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்றத்திற்கு முதல் தடவையாகத் தெரிவு செய்யப்பட்டார்.[10][11][12]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads