நந்தா (திரைப்படம்)

பாலா இயக்கத்தில் 2001 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

நந்தா (திரைப்படம்)
Remove ads

நந்தா(Nandha) 2001 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை பாலா எழுதி இயக்கியுள்ளார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.[1] சூர்யா,[2] லைலா, ராஜ்கிரண், கருணாஸ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

விரைவான உண்மைகள் நந்தா, இயக்கம் ...
Remove ads

வகை

நாடகப்படம்

கதை

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

சிறைச்சாலையிலிருந்து வெளிவரும் நந்தா தனது தாயாரையும் தங்கையையும் காண்பதற்கு வீடு செல்கின்றான். ஆனால் அங்கு அவன் தாய் அவன் மீது உள்ள வெறுப்பு காரணமாக அவனிடம் பேச மறுக்கவே,தனது படிப்பினைத் தொடர்வதற்காக நந்தா முயல்கின்றான். அப்பொழுது அவனது செலவுகளை ஏற்றுக்கொள்கின்றார் அவ்வூரின் நன்மதிப்பைப் பெற்ற ஒருவர்.இதற்கிடையில் இலங்கையில் இருந்து அகதியாக வரும் ஒரு பெண்மணியிடம் இவனுக்கு காதல் மலர்கின்றது.அவனைத் தனது பிள்ளை போல வளர்த்தவர் அவரது குடும்ப உறுப்பினர்களாலேயே கொல்லப்பட அவர்களைப் பழி வாங்கத் துடிக்கின்றான் நந்தா.

Remove ads

பாடல்கள்

இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார்.

மேலதிகத் தகவல்கள் எண், பாடல் ...

தயாரிப்பு

இயக்குநர் பாலா ஒரு நேர்காணலில், மலையாளத்தில் மம்மூட்டி நடித்த தனியாவர்தனம் திரைப்படத்தின் உச்சக்கட்ட காட்சியில் நடக்கும் சம்பவத்தின் தாக்கத்தால், அந்த உச்சக்கட்ட காட்சியை வைத்து இப்படத்தின் கதை பின்னோக்கி எழுதப்பட்டது என்றார்.[3]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads