நல்லங்கு

கவச உடலமைப்பை உடைய விலங்கு From Wikipedia, the free encyclopedia

நல்லங்கு
Remove ads

நல்லங்கு (Armadillo) என்பது ஓர் உயிரினமாகும். ஆர்மடில்லோ என்ற எசுப்பானியச் சொல்லுக்கு, கவசம் உடைய சிற்றுயிரி என்பது பொருளாகும். இந்த உயிரினத்தின் உடல் அமைப்பைக் கொண்டு, இதனைக் கவச உடலிகள் பிரிவில் சேர்த்துள்ளனர். கவச உடல் அமைப்புடைய விலங்குகளுக்கு, தமிழில் அழுங்கு[1] என்று பெயர். நல்லங்கை ஆங்கிலத்தில் ஆர்மடில்லோ என்பர்.[2]

விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, குடும்பங்கள் ...
Remove ads

வகைப்பாடு

Thumb
ஒன்பது பட்டைகளைக் கொண்ட நல்லங்கு. (Dasypus novemcinctus)
Thumb
வெள்ளியிலான நல்லங்கு.
Thumb
புல் தரையிலாடும் நல்லங்கு.

இவை வகைப்பாட்டியலின்படி, கவச உடலிகள் என்ற வரிசையில் அடங்குகிறது. இவ்வரிசையில், இன்றுள்ள ஒரே ஒரு குடும்பம்[கு 2] நல்லங்குகள் ஆகும். இக்குடும்பத்தில், 10 பேரினங்களும், 20 சிற்றினங்களும் உள்ளன. தொல்லுயிரியல் ஆய்வில், மேலும் இரண்டு குடும்பங்கள் இருந்துள்ளதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. அப்புதைப்படிவங்களைக் கொண்டு, சில கோடி ஆண்டுகளுக்கு முன்பிருந்த சூழ்நிலைகளை, இன்றைய சூழலோடு ஒப்பிட்டு ஆராய முடிகிறது.

இனங்கள்

Thumb
இளஞ்சிவப்பு தேவதை நல்லங்கு

வரிசை: கவச உடலிகள்

  • குடும்பம்Pampatheriidae: pampatheres (இவை தொல்விலங்கினம். இன்றில்லை)
    • பேரினம் †Machlydotherium
    • பேரினம் †Kraglievichia
    • பேரினம் †Vassallia
    • பேரினம் †Plaina
    • பேரினம் †Scirrotherium
    • பேரினம் †Pampatherium
    • பேரினம் †Holmesina
  • குடும்பம்Glyptodontidae: glyptodonts (இவை தொல்விலங்கினம். இன்றில்லை)
    • பேரினம் †Doedicurus
    • பேரினம் †Glyptodon
    • பேரினம் †Glyptotherium
    • பேரினம் †Hoplophorus
    • பேரினம் †Panochthus
    • பேரினம் †Parapropalaehoplophorus
    • பேரினம் †Plaxhaplous
  • Incertae sedis: †Pachyarmatherium
  • குடும்பம் Dasypodidae: நல்லங்குகள் (இவைமட்டுமே இன்று உள்ளன)
    • உட்குடும்பம் Dasypodinae
      • பேரினம் Dasypus
        Thumb
        Tatus அ கினிவிலங்கு
        • நவபட்டை நல்லங்கு நீள்மூக்கு நல்லங்கு, Dasypus novemcinctus
        • எழுபட்டை நல்லங்கு, Dasypus septemcinctus
        • நீள்மூக்கு தென்நல்லங்கு, Dasypus hybridus
        • நீள்மூக்கு சமவெளிநல்லங்கு, Dasypus sabanicola
        • நீள்மூக்கு சீர்நல்லங்கு, Dasypus kappleri
        • நீள்மூக்கு முடிநல்லங்கு, Dasypus pilosus
        • Yepes's mulita, Dasypus yepesi
        • †கண்கவர் நல்லங்கு, Dasypus bellus
      • பேரினம்
        • Stegotherium
    • உட்குடும்பம் Euphractinae
      • பேரினம் Calyptophractus
        • நல்தேவதை நல்லங்கு, Calyptophractus retusus
      • பேரினம் Chaetophractus
        • புதர்முடி நல்லங்கு, Chaetophractus vellerosus
        • நீள்முடி நல்லங்கு, Chaetophractus villosus
        • ஆந்தீசின்முடி நல்லங்கு, Chaetophractus nationi
      • பேரினம் †Peltephilus
        • †கொம்புநல்லங்கு, Peltephilus ferox
      • பேரினம் Chlamyphorus, Chlamyphorus truncatusImage:Chaetophractus vellerosus3.jpg|thumb|right|புதர்முடி நல்லங்கு
        • இளஞ்சிவப்பு தேவதை நல்லங்கு, Chlamyphorus truncatus
      • பேரினம் Euphractus
        • அறுபட்டை நல்லங்கு, Euphractus sexcinctus
      • பேரினம் Zaedyus
        • Pichi, Zaedyus pichiy
    • உட்குடும்பம் Tolypeutinae
      • பேரினம் †Kuntinaru[3]
      • பேரினம் Cabassous
        • மொட்டைவால் வடநல்லங்கு, Cabassous centralis
        • மொட்டைவால் சாகோன்நல்லங்கு, Cabassous chacoensis
        • மொட்டைவால் தென்நல்லங்கு, Cabassous unicinctus
        • மொட்டைவால் சீர்நல்லங்கு, Cabassous tatouay
      • பேரினம் Priodontes
        • பெரும் நல்லங்கு, Priodontes maximus
      • பேரினம் Tolypeutes
        • முப்பட்டை தென்நல்லங்கு, Tolypeutes matacus
        • முப்ட்டை பிரேசில்நல்லங்கு, Tolypeutes tricinctus

† தொல்விலங்கினம்

Remove ads

வாழிடம்

இவற்றின் தாயகம் அமெரிக்கக் கண்டம் ஆகும். அங்கு இவ்வுயிரினங்கள் பல்வேறு வாழிடங்களில் வாழ்கின்றன. இக்கண்டத்தின், பல நாடுகளில் பலவிதமான நல்லங்குகள் விரவி வாழ்கின்றன.

அமெரிக்க நாட்டில், 9 கவசப்பட்டைகளை உடைய நல்லங்குகள் அதிகமாக டெக்சஸ் மாநிலத்தில் இருக்கின்றன. இவைகளை வேட்டையாடி உண்ணும், ஊனுண்ணிகள் இல்லாததால் இவைகள் தங்கள் வாழிடங்களை விரிவுபடுத்திவருகின்றன. குறிப்பாக தென் கரொலைனா, புளோரிடா, நெப்ராஸ்கா, இந்தியானா, ஒன்டாரியோ ஆகிய மாநிலங்களில் இவ்வுயிரினங்கள் தங்களது வாழ்விடங்களைப் பெருக்கி வருகின்றன.

உடலமைப்பு

இவ்விலங்குகளில் மூன்று வகைகள் உள்ளன.

  1. குட்டை நல்லங்கு [கு 3] - - 12 முதல் 15 செ.மீ. நீளமுடையது.
  2. நடுத்தர நல்லங்கு [கு 4] – 75 செ.மீ. நீளமுடையது.
  3. மாபெரும் நல்லங்கு - 150 செ.மீ. நீளமுடையது. எடை= 59கிலோ கிராம்

இனப்பெருக்கம்

ஒன்பது பட்டை நல்லங்குகளின் இனப்பெருக்கத்தில், ஒவ்வொரு ஈனுகையின் போதும், ஒரே மரபணு வார்ப்பிலான நான்கு குட்டிகளை ஈனுகின்றன.[4][5][6] ஒவ்வொரு முறையும் தவறாமல் ஒரே கருவணு பிரிந்து நான்கு முளையங்களாக வருவதால் இவற்றின் குட்டிகளை மருத்துவ ஆய்வுகளுக்கும் நடத்தை ஆய்வுகளுக்கும் பயன்படுத்துகிறார்கள். பாலூட்டிகளில் ஒரே கருவணுவிலிருந்து பல முளையங்களை இயல்பான கருக்கட்டலிலேயே தவறாமல் பெறுவது நல்லங்குகளில் மட்டுமே முடியும். அதுவும் இயல்பில் தாசிப்பசு(Dasypus) பேரினத்தில் மட்டுமே இவ்வாறு நிகழ்கிறது.சில சிற்றனங்கள், 1-8 வரையிலான வேறுபட்ட சிறுகுட்டிகளை, ஈனும் இயல்புயுடையதாக இருக்கின்றன.

இவ்விலங்குகளைத் தவிர இப்பண்பு சில குளவிகள், தட்டைப்புழுக்கள், பல நீர்வாழ் முதுகெலும்பிலிகள் போன்ற பாலூட்டியல்லாத விலங்குகளில் மட்டுமே காணப்படுகிறது.[5]

Remove ads

நல்லங்குகளும் மாந்தரும்

மனிதர்களையும், சிலவகைக் குரங்குகளையும், முயல்களையும், எலிகளையும் தவிர வெகுசில விலங்குகளுக்கே தொழு நோய் வருகிறது. அதிலும் இவற்றின் உடல்வெப்பம் குறைவு என்பதால் தொழு நோயை உண்டாக்கும் மைக்கோபேக்டீரியம் இலெப்பிரே[கு 5] கிருமிகள் இவற்றின் உடலில் நன்கு வளர்கின்றன. இவற்றின் உடல் வெப்பமான 93 °F மனித உடல் வெப்பத்தை ஒத்தது. அதனால் தொழு நோயைப் பற்றிய ஆய்வுகளில் நல்லங்குகளைப் பயன்படுத்துகின்றனர். இவ்விலங்குகளைக் கையாள்வதன்மூலமோ, இவற்றை உண்பதாலோ தொழு நோய் கண்ட விலங்கிடமிருந்து நோய் பற்றிக் கொள்ள வாய்ப்புண்டு. அமெரிக்காவின் டெக்சாசு, இலூசியானா மாநிலங்களில் இவை தொழுநோய்க் காவிகளாகவும் (கடத்திகளாகவும்) தேக்கிகளாகவும் அறியப்பட்டுள்ளன.[7] அமெரிக்கக் கண்டத்தில் தொழு நோய் முன்பு இல்லை என்பதால் முதன் முதலாக வெளியில் இருந்து புலம்பெயர்ந்த ஐரோப்பிய மக்களிடம் இருந்து தொழு நோய் இவ்விலங்குகளுக்குத் தொற்றியிருக்கக் கூடும்.[7][8] இவை சாகாசு நோயின் தேக்கிகளாகவும் உள்ளன.[9]

Thumb
நல்லங்கு முதுகு ஓட்டைக் கொண்டு செய்த சரங்கோ இசைக்கருவி

அச்சத்தில் எம்பிக் குதிக்கும் பண்பினால் இவை சாலைகளில் அடிக்கடி வண்டிகளில் அடிபட்டு இறக்கின்றன.

ஆண்டீய மலைப் பழங்குடியினர் இவற்றின் புறமுதுகில் உள்ள ஓட்டுக்கூட்டைப் பயன்படுத்திச் சரங்கோ எனும் இசைக்கருவியைச் செய்கின்றனர்.

குறிப்புகள்

  1. Dasypodidae
  2. குட்டை நல்லங்கு - Chlamyphorus truncatus
  3. நடுத்தர நல்லங்கு - Dasypus பேரினம்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads