நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்

From Wikipedia, the free encyclopedia

நான்காம் ஆங்கிலேய மைசூர் போர்
Remove ads

நான்காம் ஆங்கிலேய மைசூர் போர் 'Fourth Anglo–Mysore War) மைசூர் இராச்சியத்திற்கு எதிராக பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனம் மற்றும் ஐதராபாத் இராச்சியம் கொண்ட பிணக்குகளால், 1798 – 4 மே 1799 முடிய இப்போர் நடைபெற்றது. [1] இது ஆங்கிலேய-மைசூர்ப் போர்களில் நான்காவதும், இறுதியானதும் ஆகும்.

விரைவான உண்மைகள் நான்காம் ஆங்கிலேய மைசூர் போர், நாள் ...

நான்காம் மைசூர் போரின் முடிவில் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்தின் படையினர் மைசூர் இராச்சியத்தைக் கைப்பற்றினர். சீரங்கப்பட்டிண முற்றுகையின் முடிவில் திப்பு சுல்தான் கொல்லப்பட்டார். திப்பு சுல்தானின் இளைய மகன் பதே அலி நாடு கடத்தப்பட்டார். பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவன ஆட்சியாளர்களால், மைசூர் இராச்சியம் மீண்டும் உடையார்களின் கீழ் கொண்டுவரப்பட்டது.

மைசூர் இராச்சியம், பிரித்தானியர்களின் துணைப்படைத் திட்டத்தை ஏற்றுக்கொண்டு, பிரித்தானியர்களுக்கு ஆண்டுதோறும் கப்பம் கட்டிக் கொண்டு, பிரித்தானியர்களுக்கு அடங்கிய சுதேசி அரசாக மாறியது.

Remove ads

போரின் காரணங்கள்

பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பெனியினர் திப்பு சுல்தானுக்கு எதிராக ஐதராபாத் நிசாம் மற்றும் மராத்திய பேஷ்வாக்களுடன் நல்லுறவு கொண்டிருந்தனர். எனவே திப்பு சுல்தான், பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்துக்கு எதிராக, படைபலத்தை பெருக்க வேண்டி, பிரெஞ்சுக் கிழக்கிந்திய நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்தார். [2] இரண்டாம் ஆங்கிலேய மைசூர் போரில் திப்புசுல்தான் கைது செய்த ஆங்கிலேயப் படைவீரர்களை விடுவிக்க மறுத்தார்.

இதனால் கிழக்கிந்திய நிறுவன நிர்வாகிகள், திப்பு சுல்தானை மைசூர் இராச்சிய மன்னர் பதவியிலிருந்து நீக்கி, மைசூரை மீண்டும் உடையார் வம்சத்திடம் ஒப்படைக்க முடிவு செய்தனர். இப்போரில் ஆங்கிலேயர்களுக்கு உதவிட ஐதராபாத் நிசாம் மற்றும் மராத்திய பேரரசின் பேஷ்வாக்கள் முன்வந்தனர்.

Remove ads

போரின் போக்குகள்

1789ல் பிரித்தானியரகளுக்கு நட்பு இராச்சியமான திருவிதாங்கூர் மீது திப்பு சுல்தான் படையெடுத்தார். எனவே 1790இல் பிரித்தானியக் கிழக்கிந்திய நிறுவனத்தின் தலைமை ஆளுநர் காரன்வாலிஸ், திப்பு சுல்தான் மீது படையெடுத்து மைசூர் அரசை அவரிடமிருந்து கைப்பற்ற ஆங்கிலேயப் படைகளுக்கு ஆணையிட்டார்.

ஆங்கிலேயர்களின் பம்பாய் மாகாணப் படைகள் மற்றும் சென்னை மாகாணப் படைகள் 1799ல் திப்பு சுல்தானின் மைசூர் இராச்சியத்தின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டணத்தை முற்றுகையிட்டது. 1799 மே 4 இல் நடைபெற்ற ஸ்ரீரங்கப்பட்டினப் போரில், ஸ்ரீரங்கப்பட்டின கோட்டைச் சுவர்களை ஆங்கிலேயர்கள் பீரங்கிளால் உடைத்தனர். கோட்டையிலிருந்து தப்பிச் செல்ல வாய்ப்புகள் இருந்தும் இறுதிவரை போரிட்டு திப்பு வீர மரணம் அடைந்தார்.

Remove ads

போரின் முடிவுகள்

போரின் முடிவில் திப்பு சுல்தானின் மகன் பதே அலி நாடு கடத்தப்பட்டார். போரில் திப்பு சுல்தானுக்கு மறைமுகமாக உதவிய ஆற்காடு நவாப் உம்தத் உல் உம்ராவை, ஆங்கிலேயர்கள் பின்னர் நஞ்சு வைத்து கொன்றதாக கருதப்படுகிறது. மைசூர் இராச்சியத்தின் பழைய பகுதிகளான கோயம்புத்தூர் மாவட்டம், வடகன்னட மாவட்டம் மற்றும் தெற்கு கன்னடம் மாவட்டம் ஆகிய பகுதிகளை ஆங்கிலேயர்கள் சென்னை மாகாணத்துடன் இணைத்துக் கொண்டனர். ஐதராபாத் நிசாமும் பேஷ்வாக்களும், திப்பு சுல்தானிடம் தாங்கள் இழந்த பகுதிகளை மீண்டும் தங்கள் இராச்சியத்துடன் இணைத்துக் கொண்டனர். மைசூர் அரசு மீண்டும் உடையார் அரச குலம் வசமானது.

இதனையுக் காண்க

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads