உடையார் அரச குலம்

From Wikipedia, the free encyclopedia

உடையார் அரச குலம்
Remove ads

வாடியார் (Wadiyar) என அழைக்கப்படும் உடையார் அரச மரபை யதுராய உடையார் என்பவர் கி பி 1399-இல் நிறுவினார். உடையார் அரச குலத்தினர் 1399 முதல் 1761 முடியவும், பின்னர் 1799 முதல் 1947 முடிய மைசூர் இராச்சியத்தை ஆண்டனர். இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் மைசூர் இராச்சியம் கர்நாடகா மாநிலத்துடன் இணைக்கப்பட்டது.

மேலதிகத் தகவல்கள் மைசூர் அரசர்கள் ...
Thumb
உடையார் வம்சத்தின் மைசூர் அரண்மனை
Thumb
மூன்றாம் கிருட்டிணராச உடையார் (1799–1868) வெளியிட்ட தங்க நாணயத்தில் சிவன் - பார்வதி உருவம், பின் பக்கத்தில் ஸ்ரீகிருஷ்ணராஜு என தேவநாகரியில் குறிக்கப்பட்டள்ளது.
Remove ads

பெயர்க்காரணம்

கன்னட மொழியில் உடையார் என்பதற்கு தலைவர் அல்லது "இறைவன்" எனப் பொருளாகும். வரலாற்று பதிவுகள் அரச வம்சத்தின் குடும்ப உறுப்பினர்களைக் குறிப்பிடும்போது வோடியார் என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றன; இது நவீன கன்னட ஒலிபெயர்ப்பில், ″ஒடியார் என்றும் பயன்படுத்தப்படுகிறது.

வரலாறு

தொன்மத்தின் படி, உடையார்கள் தங்கள் வம்சாவளியை பகவான் கிருஷ்ணனின் யது குலம் அல்லது (யாதவர்) என்று கூறிகொள்கின்றனர். இருப்பினும், வரலாற்றாசிரியர்களான ஷியாம் பிரசாத், நோபுஹிரோ ஓட்டா, டேவிட் லீமிங், ஆயா இகேகேம் ஆகியோர் உடையார்கள் உள்ளூர் நிலப்பிரபுத்துவ பிரபுக்கள் என்று கூறுகின்றனர், அவர்கள் புராணத்தின்படி தங்களை புகழ்பெற்ற சந்திர வம்சத்தின் நேரடி சந்ததியினர் என்று கூறிக்கொள்ள முயன்றனர்.</ref>[1][2] இவர்கள் துவாரகையிலிருந்து வந்தனர், மேலும் இந்த இடத்தின் இயற்கை அழகைக் கண்டு மைசூரிலேயே தங்குமிடமாக மாற்றிக் கொண்டனர். [3] இந்த வம்சத்தை 1399 ஆம் ஆண்டில் யதுராயர் நிறுவினார். அவர் 1423 வரை விஜயநகர சாம்ராஜ்யத்தின் கீழ் மைசூர் இராச்சியத்தை 1423 முடிய ஆண்டார். யதுராய உடையாருக்குப் பிறகு, மைசூர் இராச்சியம் உடையார் ஆட்சியாளர்களால் பல வெற்றிகளைப் பெற்றது. ஆரம்ப காலத்தில் இந்த இராச்சியம் மிகவும் சிறியதாக இருந்தது, இது விஜயநகர பேரரசின் ஒரு பகுதியாக இருந்தது. யதுராயருக்குப் பின்வந்த உடையார் வம்ச மன்னர்கள் 1565-ஆண்டில் விஜயநகரப் பேரரசு வீழ்ச்சி அடையும் வரை, விஜயநகரப் பேரரசுக்கு கப்பம் கட்டும் குறுநில மன்னர்களாக மைசூரை ஆண்டனர். இவர்கள் மைசூர் பகுதியை 600 ஆண்டுகள் ஆண்டனர்.[4] 1565-க்குப் பின்னர் மைசூர் உடையார் மன்னர்கள் தன்னாட்சி உரிமையுடன் மைசூர் இராச்சியத்தை 1799 வரை ஆண்டனர்.

மூன்றாம் கிருட்டிணராச உடையார் (1799-1868) ஆட்சியின் போது, இப்பகுதி பிரித்தானியப் பேரரசுவின் கட்டுப்பாட்டின் கீழ் வந்தது. அவரது வாரிசுகள் தங்கள் அரச பெயரின் ஆங்கில எழுத்துப்பிழையை வாடியார் என்பதை, பகதூர் என்று மாற்றிக் கொண்டனர். வம்சத்தின் கடைசி இரண்டு மன்னர்கள், நான்காம் கிருட்டிணராச உடையார் மற்றும் ஜெயச்சாமராஜா உடையார், பிரித்தானியப் பேரரசுவின் அரசாட்சியை ஏற்றுக்கொண்டனர்.

Remove ads

விரிவாக்கம்

1565-இல் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பின்னர் முதலாம் இராச உடையார் (1578-1617) மைசூர் இராச்சியத்தின் எல்லைகளை விரிவுப் படுத்தினார். 1610-இல் இராச்சியத்தின் தலைநகரை மைசூரிலிருந்து பாதுகாப்பு காரணங்களால் காவேரி ஆற்றுத் தீவுப் பகுதியான ஸ்ரீரங்கப்பட்டணத்திற்கு மாற்றினார். முதலாம் நரசராச உடையார் (1638-1659) ஆட்சிக் காலத்தில் மைசூர் இராச்சியம் தமிழ்நாட்டின் திருச்சிராப்பள்ளி வரை விரிவு படுத்தப்பட்டது. சிக்க தேவராச உடையார் (1673-1704) ஆட்சிக் காலத்தில் மைசூர் இராச்சியம் உச்ச கட்டத்தை அடைந்தது. சிக்க தேவராச உடையார் ஆட்சிக் காலத்தில் நாட்டின் நிர்வாகத்தில் பல சீர்திருத்தங்கள் கொண்டு வந்தார். நாட்டின் நிர்வாகம் 18 துறைகளின் கீழ் கொண்டு வந்தார். பொருத்தமான வரி விதிப்பு முறைகள் கொண்டு வரப்பட்டது.

1760 முதல் 1799 முடிய மைசூர் இராச்சியத்தின் அரசாட்சி, தலைமைப் படைத்தலைவராக இருந்த ஐதர் அலி மற்றும் அவரது மகன் திப்பு சுல்தான் கையில் சென்றது. இவர்கள் பிரித்தானியாவின் இந்தியப் பேரரசை எதிர்த்தனர். 1799-இல் ஸ்ரீரங்கப்பட்டினத்தில் நடந்த போரில், பிரித்தானியர்கள் திப்பு சுல்தானைக் கொன்று, உடையார் வம்ச மன்னர்களிடம் மைசூர் இராச்சியம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது.

பிரித்தானிய இந்திய ஆட்சியில்

மூன்றாம் கிருட்டிணராச உடையார் (1796-1868) காலத்தில், உடையார்களின் மைசூர் இராச்சியம், துணைப்படைத் திட்டத்தின் படி, பிரித்தானியா இந்தியப் பேரரசுக்கு ஆண்டு தோறும் கப்பம் செலுத்தும் நாடாக மாறியது.

இந்திய விடுதலைக்குப் பின்னர்

மைசூர் மன்னர் ஜெயச்சாமராஜா உடையார் (1940-1950) ஆட்சிக் காலத்தில், 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், உடையார்களின் மைசூர் இராச்சியம் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட போதிலும், 1956 முடிய மைசூர் உடையார் வம்ச மன்னர்களை மைசூர் மகாராஜா என்றே இந்திய அரசால் அழைக்கப்பட்டனர். 1 நவம்பர் 1956-இல் இந்தியாவை மொழி வாரி மாநிலங்களாகப் [5] பிரிக்கப்பட்ட போது, மைசூர் இராச்சியம் கர்நாடகா மாநிலத்தின் பகுதியாக இணைக்கப்பட்டது.

1956 முதல் 1964 முடிய உடையார் வம்ச மன்னர்கள் கர்நாடகா மாநிலத்தின் ஆளுநர்களாக செயல்பட்டனர். பிற சுதேச சமஸ்தான மன்னர்களைப் போன்று உடையார் வம்ச மன்னர்களும் இந்திய நடுவண் அரசிடமிருந்து மன்னர் மானியம் பெற்றனர். 1971-இல் இந்தியப் பிரதமர் இந்திராகாந்தி கொண்டு வந்த மன்னர் மானிய ஒழிப்புச் சட்டப்படி, அனைத்து 560 சுதேச சமஸ்தான மன்னர்களுக்கு மன்னர் மானியம் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டது. [6]

இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக பல்லாண்டு பதவி வகித்த ஸ்ரீகண்டதத்த நரசிம்மராஜ உடையாருக்குப் (1974-2013) பின்னர் 2015-ஆம் ஆண்டு முதல் யதுவீர் கிருட்டிணதத்த சாமாரச உடையார் மைசூர் மன்னராக பட்டம் வகித்து வருகிறார்.

Remove ads

தசரா விழாவில்

மைசூரு தசரா பண்டிகையின் போது, மைசூர் அரண்மனையை அலங்கரித்து, மன்னர் தர்பாரில் அமர்ந்து மக்களுக்கு காட்சியளிப்பார்கள்.

படத்தொகுப்பு

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads