நாயக்கர் (பட்டம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாயக்கர் பட்டம் (Nayak, Naik and Nayaka) மத்தியகால இந்திய வரலாற்றில் குறிப்பாக விஜயநகரப் பேரரசு மற்றும் மராத்தியப் பேரரசு ஆட்சிக் காலத்தில் குறிப்பிட்ட பிரதேசத்தை ஆளும் ஆளுநர்களை நாயக் அல்லது நாயக்கர்கள் என அழைக்கப்பட்டனர்.[1] [2][3] மேலும் நாயக்கர் எனும் சொல் இந்தியாவில் வாழும் பல இந்துச் சமூகங்களின் குலப்பெயராகவும் உள்ளது.
தென்னிந்தியாவில் விஜயநகரப் பேரரசின் வீழ்ச்சிக்குப் பிறகு தஞ்சை நாயக்கர்கள், மதுரை நாயக்கர்கள், செஞ்சி நாயக்கர்கள், காளஹஸ்தி நாயக்கர்கள், சித்திரதுர்க நாயக்கர்கள் மற்றும் கண்டி நாயக்கர்கள் போன்ற சுதந்திர நாயக்க வம்சங்கள் நிறுவப்பட்டது. [4]
ஆந்திரா, தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டில், நாயுடு மற்றும் நாயக்கர், நாயக்கர் போன்ற குடும்பப்பெயர்களின் பிற பதிப்புகள் பீதர் வால்மீகி, காப்பு, பலிஜா, கொல்லா, தெலகா மற்றும் முக்கியமாக கம்மாவைச் சேர்ந்த மக்களால் பயன்படுத்தப்படுகின்றன. தமிழ்நாட்டில் தெற்கில், தெலுங்கு சாதியினரான பலிஜா, கொல்லா மற்றும் கம்மாக்கள் நாயக்கர் பட்டத்தை பயன்படுத்துகின்றனர்.[5]கர்நாடகாவின் முஸ்லீம் சித்தி சமூகத்தினர், பிஜப்பூர் மன்னர்களிடமிருந்து பெற்ற பட்டப்பெயரான நாயக்கர் என்ற குடும்பப்பெயரைப் பயன்படுத்துகின்றனர். [6] கர்நாடகாவில் இது முன்பு வோக்கலிகா சமூகத்தின் சில தலைவர்களால் பயன்படுத்தப்பட்டது. மகாராஷ்டிராவில் நாயக் மற்றும் நாயக் குடும்பப்பெயர் சத்திரிய மராட்டியர்கள், பிரபு குலத்தின் 4 உட்பிரிவின் பிராமண சமூகத்தினர்[7] மற்றும் தேசஸ்த் பிராமணர் சமூகங்களால் பயன்படுத்தப்படுகிறது.[8]
ஒடிசாவில், "நாயக்" என்ற பட்டப் பெயர் சத்திரியச் சமூகத்தினர் பயன்படுத்துகிறார்கள். தமிழ்நாட்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் உள்ள வன்னியர் சாதியைச் சேர்ந்தவர்கள் நாயக்கர் என்ற பட்டப்பெயரைப் பயன்படுத்துகின்றனர். [9] தமிழ்நாட்டில் ஜக்கம்மா குலத்தைச் சேர்ந்தவர்கள் நாயக்கர் எனும் சாதிப் பெயர் தாங்கி உள்ளனர்.[10] தஞ்சாவூர் மாவட்டம் உள்ளிட்ட பகுதிகளில் வாழும் துளுவ வெள்ளாளர்கள் நாயக்கர் பட்டம் தாங்கி உள்ளன. ஈசநாட்டு கள்ளர்கள் தஞ்சாவூர், புதுக்கோட்டை பகுதியில் நாயக்கர் பட்டம் பயன்படுத்துகின்றனர். அதில் குறிப்பிடதக்கவர்கள் அய்யம்பேட்டை சாவடி நாயக்கர் ஜமீன் ஆவார்கள். ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் நாயக் எனும் பழங்குடி மக்கள் நாயக்கர் குடும்பப்பெயர் கொண்டுள்ளனர். மேலும் பழங்குடி சமூகங்களான லம்பாடிகள், சுகாலி அல்லது பஞ்சாரா உள்ளிட்ட பழங்குடி சாதியினர் நாயக்கர் எனும் குடும்பப் பெயர் கொண்டுள்ளனர். கவுட சாரஸ்வத் பிராமணர் மற்றும் ராஜபூர் சரஸ்வத் பிராமணர்கள் சமூகத்தில் நாயக் என்பது ஒரு முக்கிய குடும்பப்பெயர் ஆகும்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads