ஈசநாட்டு கள்ளர்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

ஈசநாட்டுக்கள்ளர் (Esanattu Kallar) அல்லது ஈசங்க நாட்டுக்‌கள்ளர்‌ எனப்படுவோர் தமிழகத்தில் உள்ள கள்ளர் சமூகத்தின் கிளைப்பிரிவுகளில் உள்ள ஓர் இனக்குழுவினர் ஆவர். இவர்களும் தேவர் அல்லது முக்குலத்தோர்களின் ஒரு பிரிவினர் ஆவர்.

தமிழகத்தில் உள்ள கள்ளர் இனத்தவர்களுள், அவரவரின் வேறுபட்ட இடங்களுக்கு ஏற்ப பல பிரிவுகளாக உள்ளனர்.  அதில் ஈசநாட்டுக்கள்ளர்‌, பிறமலைக்கள்ளர்‌, கிளைவழி கள்ளர்கள், நாட்டார்கள்ளர்‌ அல்லது அம்பலக்கள்ளர் மற்றும் கள்ளர் குலத்‌ தொண்டைமான்‌ என்பன முக்கிய பிரிவுகளாகும்.[1][2]

Remove ads

சொற்பிறப்பு

எட்கர் தர்ஸ்டன் அவர்களின் தென்னிந்தியக் குலங்களும் குடிகளும் என்ற நூலில், 1891 கணக்கெடுப்பின்படி கள்ளர்களின்‌ உட்பிரிவுகள்‌ எண்ணிக்கையில்‌ மிகப்‌ பலவாகப்‌ பதியப்பட்டுள்ளன. அதில் விசங்குநாடு கள்ளர் என்பது  ஈசங்க நாடக மருவி வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. [3]

1874 ஆம் ஆண்டு எழுதப்பட்ட சாணார் குல மரபு என்ற நூலில்  ஈந்து விருகூடித்துக்கு ஈச்ச விருகூடிம் என நூல்களில்ப் பெயர். ஈந்து மரத்தில் இருந்து மதுவிறக்கி குடிப்பதால் ஈந்த நாட்டு கள்ளர் மருவி ஈசநாட்டு கள்ளர் ஆனதாக ஈசநாட்டு கள்ளரை பற்றி குறிப்பிடுகிறார்.[4]

Remove ads

வரலாறு

ஈசங்க நாட்டுக்‌ கள்ளர்கள்‌ சோழமன்னர்களின்‌ பங்காளிகள்‌ எனவும்‌ தமது முன்னோர்களாக கரிகாலனையும்‌ கூறிக்‌கொள்‌கின்றனர்‌ என்று கொழுமம் குமரலிங்கம் ஐவர்மலை நூலில் குறிப்பிடுகிறார்.[5]

இவர்கள்‌ குலத்தில்‌ ஆதிகாலத்‌தில்‌ தேர்ந்தெடுக்கப்பட்ட பெரிய தனக்காரர்கள்‌ தலைவராவர்‌. ஆண்‌ குழந்தைகளுக்கு மதிப்பு அதிகம்‌. தேவர், வாண்டையார், சேதுராயர்‌, மழவராயர், காளிங்கராயர், சோழகர்‌, களத்தில்‌வென்றார்‌, பல்லவராயர், தொண்டைமான், நாட்டார், பழுவேட்டரையர், சோழங்கதேவர், அதிகமான், ஈழத்தரையர், கொல்லத்தரையர், கடாரங்கொண்டார்,விஜயதேவர், மண்ணையார், மாளுசுத்தியார், முதலியார், வன்னியர், வல்லத்தரையர், போன்ற பட்டங்கள் பல நூறுகள் உள்ளது. ஆண்களுக்கு அவர்கள்‌ சொந்தப்‌ பட்டங்களில் திருமணம்‌ நடத்துவதில்லை. மற்ற பட்டங்களில் சேர்ந்தவர்களில்‌ பெண்‌ எடுப்பர்‌. திருமணத்தில்‌ குலத்தலைவன்‌ சொற்படி நடக்க வேண்டும்‌ என்ற அவசியம்‌ இல்லை. பொதுவாக இவர்கள்‌ சைவ மற்றும் வைணவ சம்பிரதாயம்‌ உடையவர்‌கள். எனவே அதிகப்படியாகப்‌ பிற சமூகத்துடன்‌ தொடர்பு கொள்வதில்லை. இவர்களில்‌ பெண்கள்‌ காதணி மற்றும்‌ பல அணிகள்‌ அதிகம்‌ அணிகின்றனர்‌. காது வளர்த்தல்‌ என்ற ஒரு முறையில்‌ காதில்‌ நீண்ட துவாரம்‌ செய்து அவற்றில்‌ வளையம்‌ போன்ற ஒரு பகுதி தோளைத்‌ தொடும்‌ அளவுக்குப்‌ போடுவர்‌. [5]

தஞ்சாவூர் ராவ்சாகிப் மு. ஆபிரகாம் பண்டிதர் அவர்களால்  கி.பி. 1917 ஆம் ஆண்டு எழுதப்பட்ட கருணாமிர்த சாகரம் என்ற  ஆய்வு நூலில், ஈசங்க நாட்டுக்‌ கள்ளர்கள்‌ பற்றி பூர்வம் சோழராஜ்யத்தை ஆண்டுகொண்டு வந்தவம்சத்தவர்கள் நாளதுவரையும் சோழர், சோழதேவர், சோழங்கத்தேவர், விஜயர், விஜயதேவர், முடிகொண்டான் என்றபெயர்களுடன் ஜமீன்தாராகவும் சிலர் பெருத்த சமுசாரிகளாகவும் மிருக்கிறார்களென்பதை சோழநாட்டில் வாழ்கின்றனர். பூர்வ சோழராஜாக்கள் அடிக்கடி பாண்டியராஜ்யத்தை ஜெயித்து சொந்தப்படுத்திக்கொண்ட காலத்தில் பாண்டியராஜவம்சத்தவர் ஆண்டுகொண்டிருந்த பல சிறுகோட்டைகளையும் ஊர்களையும் தாங்கள் பிடித்துக்கொண்டு பாண்டியராஜ்யத்திலும் பரவினார்களென்று தோன்றுகிறது. இவர்களும் ஒருவருக்கொருவர் பொறாமையினால் ஒற்றுமை இழந்து குறைந்தநிலைக்கு வந்தார்கள். சேரராஜ்யம்ஒன்றுமாத்திரம் இவ்வாபத்துகளுக்கெல்லாம் தப்பி முன்போலவே ஆண்டுவந்தராஜாக்களில் கரிகால்சோழனையே முதல்வனாகச் சொல்லவதுண்டு என்கிறார்.[6]

"சோழன்" என்ற பட்டம் ஈசங்க நாட்டுக்‌ கள்ளர்களில் ஒரு பிரிவினரால் இன்னும் சுமக்கப்படுகிறது. எனவே, அந்த குலத்தைச் சேர்ந்த ஒருவரின் உண்மையான பெயர் வீர என்றால், அவரது முழுப் பெயர் வீர சோழன். அந்த குலத்தை சேர்ந்தவர்களை தஞ்சை பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். [7]

Remove ads

இவர்களில்சிற்றரசர்கள்

இவர்களில் சிற்றரசர்கள்‌புதுக்கோட்டை தொண்டைமான், அறந்தாங்கி தொண்டைமான் மற்றும் புதுக்கோட்டை பல்லவராயர் மன்னர்கள் இருந்தனர். இருக்குவேள் அரசர்கள் அல்லது இருக்குவேளிர் (பொ.பி. 435 - 765) என்பவர்கள் தமிழ்நாட்டில் இருந்த குறுநில அரச வம்சத்துள் ஒரு வம்சத்தவராவர். இவர் களப்பிரர் காலத்தில் அவர்களின் கீழும், பல்லவர் காலத்தில் அவர்களின் கீழும், சோழர் காலத்தில் அவர்களுக்கு கீழுமிருந்து அரசாண்டவர்கள். இவர்கள் கொடும்பாளூர் என்னும் நகரை தலைநகராகக் கொண்டு அரசாண்டனர். இக்கொடும்பாளூர் சங்ககாலத்தில் மிழலைக் கூற்றம் என்று அழைக்கப்பட்டுள்ளது. இவர்கள் கள்ளர் மரபினை சேர்ந்தவர்களாக, க. அ. நீலகண்ட சாத்திரி அவரகள் தன்னுடைய ஆய்வில் குறிப்பிடுகிறார்.[1] இருக்குவேளிர்‌ யதுவம்சகேது எனப்‌ பட்டம்‌ புனைந்தவர்களாயினும்‌ அவர்கள்‌ கள்ளர்‌ மரபிற்குரியவர்கள்‌ என்பதைத்‌ திருப்பழனக்‌ கல்வெட்டு மூலம்‌ திரு. வே. மகாதேவன்‌ எடுத்துக்‌ காட்டியுள்ளார்‌. “இருங்கோவேள்‌' என்ற பட்டம்‌ தஞ்சை, திருச்சி, புதுக்கோட்டை பகுதிகளில்‌ வாழும்‌ கள்ளர்‌ இனமக்களின்‌ ஒரு பிரிவினரின்‌ பட்டப்‌ பெயராக இன்றளவும்‌ உள்ளது[8]

ஈசநாட்டு கள்ளர் பிரிவு ஜமீன்கள்

தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டம் பகுதியில் இருந்த ஈசநாட்டு கள்ளர் மரபினரின் ஜமீன்கள்

  1. பாப்பா நாடு சமீன் - விஜயதேவர்,
  2. கந்தர்வகோட்டை ஜமீன் - அச்சுதப்பண்டாரத்தார்,
  3. பாளையவனம் ஜமீன் - வணங்கமுடிப் பண்டாரத்தார்,
  4. சிங்கவனம் ஜமீன் - மெய்க்கன் கோபாலர்,
  5. புனல்வாசல் ஜமீன் - மழவராய பண்டாரத்தார்,
  6. நெடுவாசல் ஜமீன் பன்றிகொண்டார்,
  7. பாதரங்கோட்டை ஜமீன் - சிங்கப்புலியார்,
  8. கல்லாகோட்டை ஜமீன் - சிங்கப்புலியார்,
  9. சில்லத்தூர் ஜமீன் - பணிபூண்டார்,
  10. மதுக்கூர் ஜமீன் - கோபாலர்,
  11. சேந்தங்குடி ஜமீன் - வணங்காமுடி வகுவடையார்,
  12. அய்யம்பேட்டை சாவடி ஜமீன் - நாயக்கர்,
  13. உக்கடை ஜமீன் - தேவர்,
  14. பூண்டி ஜமீன் - வாண்டையார்.[9][10]
Remove ads

குறிப்பிடத்தக்க நபர்கள்

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads