நீடாமங்கலம் சந்திப்பு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நீடாமங்கலம் சந்திப்பு (Nidamangalam Junction railway station)(நிலையத்தின் குறியீடு: NMJ) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் நீடாமங்கலத்தில் அமைந்துள்ள ஒரு தொடருந்து சந்திப்பு நிலையமாகும்.[1]
இந்த நிலையம் தென்னக இரயில்வே மண்டலத்தின் திருச்சிராப்பள்ளி தொடருந்து பிரிவின் ஒரு பகுதியாகும். மேலும் இந்த நகரத்தை மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நாட்டின் பிற பகுதிகளுக்கும் இணைக்கிறது.
Remove ads
இடம் மற்றும் தளவமைப்பு
தொடருந்து நிலையம் தேசிய நெடுஞ்சாலை 83இல் நீடாமங்கலத்தில் அமைந்துள்ளது. இதன் அருகில் உள்ள வானூர்தி நிலைய 80 கிலோமீட்டர்கள் (50 mi) தூரத்தில் அமைந்துள்ளது திருச்சிராப்பள்ளி விமானநிலையமாகும்.
பாதைகள்
இந்த நிலையத்திலிருந்து சென்னை எழும்பூர் தொடருந்து நிலையம், தஞ்சாவூர் சந்திப்பு, திருச்சிராப்பள்ளி சந்திப்பு, நாகப்பட்டினம் சந்திப்பு, காரைக்கால் சந்திப்பு, காரைக்குடி சந்திப்பு, மயிலாடுதுறை சந்திப்பு, திருவாரூர் சந்திப்பு, இராமேசுவரம் போன்ற இடங்களை இணைக்கிறது.[2]
- அகலப் பாதை-ஒருவழிப்பாதை நாகப்பட்டினம் சந்திப்பு கொரடாச்சேரி வழியாக .
- சாலியமங்கலம் வழியாகத் தஞ்சாவூர் நோக்கி அகலப் பாதை
- மன்னார்குடியை நோக்கி அகலப் பாதை-ஒருவழிப் பாதை
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads