தேசிய நெடுஞ்சாலை 83 (இந்தியா)

From Wikipedia, the free encyclopedia

தேசிய நெடுஞ்சாலை 83 (இந்தியா)
Remove ads

தேசிய நெடுஞ்சாலை 83 (National Highway 83 (India)) என்பது இந்தியாவின் முதன்மையான தேசிய நெடுஞ்சாலை ஆகும்.[1] தே. நெ. 83 கிழக்கு-மேற்கு திசையில், முழுக்க முழுக்க இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ளது.[2][3] பொள்ளாச்சி முதல் திண்டுக்கல் வரையிலான நான்கு வழிச்சாலைக்கு 2018-ல் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் வழித்தடத் தகவல்கள், நீளம்: ...

முன்பு இந்த தேசிய நெடுஞ்சாலை 209 என்று பெயரிடப்பட்டிருந்தது.[4][5]

Remove ads

வழித்தடம்

Thumb
இந்தியாவில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளின் திட்ட வரைபடம்

தே. நெ. 83 கோயம்புத்தூர், பொள்ளாச்சி, உடுமலைப்பேட்டை, பழனி, ஒட்டன்சத்திரம், திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், நீடாமங்கலம், திருவாரூர் மற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் நாகப்பட்டினத்தை இணைக்கிறது.[6]

சந்திப்புகள்

தே.நெ. 544 முனையம் கோயம்புத்தூர் அருகில்
தே.நெ. 44 திண்டுக்கல் அருகில்
தே.நெ. 183 திண்டுக்கல் அருகில்
தே.நெ. 383 திண்டுக்கல் அருகில்
தே.நெ. 38 திருச்சிராப்பள்ளி அருகில்
தே.நெ. 336 திருச்சிராப்பள்ளி அருகில்
தே.நெ. 36 தஞ்சாவூர் அருகில்


விரிவாக்கம்

  • தேசிய நெடுஞ்சாலை 83ன் கோயம்புத்தூர் - பொள்ளாச்சி 27கி.மீ நீளமுள்ள பாதை 656.51 கோடி மதிப்பினில் நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்பட்டது.[7] 01 திசம்பர் 2016 அன்று ஆரம்பிக்கப்பட்டு 24 ஜீன் 2020 அன்று முடிக்கப்பட்டது.[8][9][10][11]
  • தேசிய நெடுஞ்சாலை 83ன் தஞ்சாவூர் - நாகப்பட்டினம் இடையேயுள்ள 65.37கி.மீ நீளமுள்ள பாதையானது 340.63கோடி மதிப்பினில் பக்கச்சாலையுடன் கூடிய இருவழிச் சாலையாக மேம்படுத்தப்படுகின்றது. முன்பு இந்த பாதையானது தே.நெ 67 என்று பெயரிடப்பட்டிருந்தது.[12][13]

தமிழ்நாட்டிற்குள்ளே செல்லும் தே.நெ 83ஆனது 131.9 கி.மீ நீளமுள்ள பொள்ளாச்சி - திண்டுக்கல் பிரிவு ரூ 3649 கோடி மதிப்பினில் மூன்று கட்டங்களாக நான்கு வழிச்சாலையாக மேம்படுத்தப்படுகின்றது.[14][15][16] [17][18][19][20][21]

  • ஒட்டன்சத்திரம் - பழனி சாலையின் 25கி.மீ நீளத்தில் 17.175கி.மீ நீளமுள்ள தேசிய நெடுஞ்சாலை 164.68 கோடி மதிப்பினில் மேம்படுத்தப்படுகின்றது. பழனி முருக பக்தர்களுக்கென தனி நடைபாதை, கழிப்பறை வசதி, குடிநீர் வசதியுடன் மேம்படுத்தப்படுகின்றது.[22]
மேலதிகத் தகவல்கள் வரிசை எண், திட்டம் ...
  • 28 பிப்ரவரி 2024 அன்று, பிரதமர் நரேந்திர மோதி தேசிய நெடுஞ்சாலை 83ன் பிரிவான ஒட்டன்சத்திரம் - மடத்துகுளம் நான்கு வழிச் சாலையை நாட்டிற்கு அர்பணித்தார், மேலும் தஞ்சாவூர் - நாகப்பட்டினம் இடையே உள்ள 65கி.மீ நீளத்திற்கு புதுப்பிக்கப்பட்ட பக்கச் சாலை வசதிகளுடன் கூடிய இருவழிச் சாலையையும் நாட்டிற்கு அர்பணித்தார்.[24][25][26][27]
  • தேசிய நெடுஞ்சாலை 83ன் தஞ்சாவூர் - நாகப்பட்டினம் பிரிவின் கீழ் திருவாரூர் அருகே 14.2கி.மீ நீளத்திற்கு 470கோடி மதிப்பினில் சுற்றுச்சாலை அமைக்கப்படவிருக்கிறது.[28]

நன்மைகள்

  • பொள்ளாச்சி கோயம்புத்தூர் நான்கு வழிச்சாலை பொள்ளாச்சி தொழிற்பேட்டையை இணைக்கும் வண்ணமாக கட்டமைக்கப்பட்டுள்ளது.
  • நான்கு வழிச்சாலையின் மூலமாக ஒட்டன்சத்திரம் - மடத்துக்குளம் இடையேயுள்ள பிரயாண நேரமானது ஒரு மணி நேரத்திலிருந்து முப்பது நிமிடங்களாக குறைந்தது. பழனி முருகன் கோவில் செல்லுவதற்கு எளிமையான பயணத்தை உறுதிசெய்கின்றது.[29]
  • தஞ்சாவூர் டெல்டா விவசாய உற்பத்தி பொருட்கள் திருச்சி, கோவை, மதுரை போன்ற பெரிய சந்தைகளுக்கு எடுத்துசெல்வது எளிதாகின்றது.
Remove ads

மேலும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

சான்றுகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads