நேபாள தேசிய சபை

From Wikipedia, the free encyclopedia

நேபாள தேசிய சபை
Remove ads


தேசிய சபை (National Assembly) (राष्ट्रिय सभा), நேபாள அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி 8 மற்றும் 9ல் கூறியவாறு தேசிய சபை நிறுவப்பட்டுள்ளது. [1] தேசிய சபை, ஈரவை முறைமை கொண்ட நேபாள நாடாளுமன்றத்தின் மேலவை ஆகும். மேலவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 59 ஆகும். [2] தேசிய சபைக்கு ஏழு மாநிலங்களிலிருந்து, தலா எட்டு உறுப்பினர்கள் வீதம் 56 உறுப்பினர்கள் தேசிய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதம் உள்ள மூன்று உறுப்பினர்கள், நேபாள அமைச்சரவையின் கருத்தின் அடிப்படையில், நேபாளக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர்.

விரைவான உண்மைகள் நேபாள தேசிய சபை राष्ट्रिय सभा, வகை ...
Remove ads

வரலாறு

முந்தைய தேசிய சபை 15 சனவரி 2007ல் கலைக்கப்பட்டு, ஓரவை கொண்ட இடைக்கால சட்டமன்றம் நிறுவப்பட்டது. பின்னர் அரசியலமைப்புச் சட்டத்தின் படி, 275 உறுப்பினர்களுடன் பிரதிநிதிகள் சபை மற்றும் 59 உறுப்பினர்களுடன் தேசிய சபை என ஈரவை முறைமை கொண்ட நாடாளுமன்றத்தை நிறுவ வழி வகை செய்யப்பட்டுள்ளது.[3]

வாக்காளர்கள்

நேபாளாத்தின் 7 மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், நேபாள உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி மற்றும் துணை மாநகராட்சிகளின் மேயர்கள் மற்றும் துணை மேயர்கள், நகர்புற நகராட்சிகள் மற்றும் கிராமிய நகராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்களே, தேசிய சபையின் 56 உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் வாக்காளர்கள் ஆவார்.[4] மீதம் உள்ள மூன்று உறுப்பினர்கள், அமைச்சரவையின் கருத்தின் அடிப்படையில், நேபாளக் குடியரசுத் தலைவரால் நியமிக்கப்படுவர்.

Remove ads

இட ஒதுக்கீடு

நேபாள அரசியல் அமைப்புச் சட்டம், தேசிய சபை உறுப்பினர்களில் 21 பொதுப் பிரிவினர், 21 பெண்கள், 7 தலித்துகள் மற்றும் 7 மாற்றுத் திறனாளிகள் அல்லது சமயச் சிறுபான்மையினர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது.

பதவிக் காலம்

தேசிய சபை உறுப்பினர்களின் பதவிக் காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, சுழற்சி முறையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் முடிகிறது.

தேசிய சபை உறுப்பினர் தேர்தல், 2018

நேபாள தேசிய சபையின் 59 உறுப்பினர்களில் 56 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 7 பிப்ரவரி 2018 அன்று தேர்தல் நடைபெறுகிறது. தேசிய சபைக்கான 2,056 வாக்காளர்களில், 550 ஏழு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் 1,506 மாநகராட்சி மற்றும் துணை மாநகராட்சிகள், நகர்புற நகராட்சிகள் மற்றும் கிராமிய நகராட்சிகளின் தலைவர்கள் மற்றும் துணைத் தலைவர்கள் ஆவார்.

இத்தேர்தலில் வாக்காளர்கள் வாக்களிக்க, ஏழு நேபாள மாநிலங்களின் தலைநகரங்களில் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களுக்கு பெயருடன் கூடிய தேர்தல் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. [5]

Remove ads

தேர்தல் முடிவுகள்

நேபாள தேசிய சபையின் 56 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க 7 பிப்ரவரி 2018 அன்று நடைபெற்ற தேர்தலில், அரசியல் கட்சி வாரியாக வெற்றி விவரம்[6]:

மேலதிகத் தகவல்கள் அரசியல் கட்சி, உறுப்பினர்கள் ...
Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads