பசுபதிநாதர்

From Wikipedia, the free encyclopedia

பசுபதிநாதர்
Remove ads

பசுபதி அல்லது பசுபதிநாதர் (Pashupati) (சமஸ்கிருதம் Paśupati) இந்து சமயத்தில் சிவனின் தொல்வடிவாக கருதப்படுகிறது. சமஸ்கிருத மொழியில் பசுபதி என்பதற்கு பசு என்பதற்கு விலங்குகள் என்றும்," உயிர்" என்றும், பதி என்பதற்கு தலைவர் என்றும் பொருளாகும். மேலும் தமிழில் பசு என்பது இனவேறுபாடு இல்லாமல் அனைத்து வித உயிர்களையும் குறிக்ககூடியது. இதனை சைவ சித்தாந்தத்தின் முப்பொருள் உண்மை பற்றிய விளக்கமும் தெளிவு படுத்துகிறது. எனவே பசுபதி எனில் விலங்குகளின் தலைவர் என்றும் அனைத்து உயிர்களினதும் தலைவர் எனப்பொருள் ஆகும். பசுபதிநாதர் இந்துக்கள் குறிப்பாக சைவர்களின் நடுவில் இந்தியா மற்றும் நேபாளத்தில் போற்றி வணங்கப்படுகிறது. பசுபதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட புகழ்பெற்ற பசுபதிநாத் கோவில் நேபாளத்தில் காட்மாண்டுக்கு அருகே அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் பசுபதிநாதர், அதிபதி ...
Remove ads

பெயர்க் காரணம்

வேதகால இலக்கியங்கள் உருத்திரனை பசுபதி அல்லது "விலங்குகளின் தலைவர்" என்று போற்றப்படுகிறார்.[1] பின்னர் உருத்திரன் எனும் பசுபதியை சிவன் எனும் அடைமொழியுடன் குறிப்பிட்டனர்.[2] இருக்கு வேதத்தில், பசூப (paśupa) எனும் சொல் கால்நடைகளை பராமரிப்புக்கான தெய்வமான பூசணைக் குறிக்கிறது.

கடவுள்

சிவபெருமானின் பல வடிவங்களில் ஒன்று பசுபதிநாதர் ஆவார். இவர் திருமூர்த்திகளில் ஒருவராவர். மேலும் பார்வதியின் துணைவர் ஆவார்.

சைவ சித்தாந்தத்தில் பசுபதிநாதரின் ஐந்து முகங்கள், சத்தியோசாதம், வாமதேவம், தற்புருடம், அகோரம் மற்றும் ஈசானம் ஆகிய சிவவடிவங்களை உருவகப்படுத்துகிறது. இம்முகங்கள் மேற்கு, வடக்கு, கிழக்கு, தெற்கு மற்றும் ஆகாயம் ஆகியவற்றை நோக்குகிறது. மேலும் இந்த ஐந்து முகங்கள் ஆகாயம், ஒளி, காற்று, நீர், பூமி எனும் ஐம்பூதங்களின் பிரதிநிதிகளாக தொடர்புறுத்தப்படுகிறது.[3]

Remove ads

நேபாளம்

Thumb
பசுபதிநாத் கோவில், நேபாளம்

உலகிலுள்ள மிகப்பெரிய இந்துக் கோவில்களுள் ஒன்று. நேபாளத் தலைநகரான காத்மாண்டுவின் கிழக்குப் பகுதியில் ஓடும் பாக்மதி ஆற்றின் கரையிலுள்ள இக்கோவில் பசுபதிநாதருக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும்.

இக்கோயிலில் வழிபடப்படும் பசுபதிநாதர், நேபாளம் இந்து நாடாக இருந்து மதச்சார்பற்ற நாடாக மாறும் வரை அந்நாட்டின் தேசியக் கடவுளாக இருந்து வந்தார். இக்கோயில் யுனெஸ்கோவின் உலகப் பாரம்பரியச் சின்னங்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.[4]

இந்தியா

Thumb
பசுபதிநாதரின் இலிங்க உருவம், மண்டோசோர் கோயில், மண்டோசோர், மத்தியப் பிரதேசம்

மத்தியப் பிரதேசத்தில் சிவானா ஆற்றின் கரையில் அமைந்த மண்டோசோரில் மிகவும் பழைமையான கோயிலில் பசுபதிநாதரின் எட்டு முகங்கள் கொண்ட இலிங்க சிற்பம் உள்ளது.[5]

இதனையும் காண்க

அடிக்குறிப்புகள்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads