பண்டார் மலேசியா
கலப்பு-பயன்பாட்டு போக்குவரத்து மேம்பாட்டுத் திட்டம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டார் மலேசியா (ஆங்கிலம், மலாய்: Bandar Malaysia) என்பது மலேசியா, கோலாலம்பூர் மாநகரில் ஒரு கலப்பு-பயன்பாட்டு போக்குவரத்து சார்ந்த மேம்பாட்டுத் திட்டம் (Transit-oriented development) ஆகும். தற்போதைய சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையத் தளத்தில், இந்த 20 ஆண்டுகாலத் திட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது.[1][2]


இந்த பண்டார் மலேசியா திட்டம், கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு தொடருந்து (Kuala Lumpur–Singapore high-speed rail) சேவையின் வழியாக சிங்கப்பூர் தீவை இணைக்கும் மையப் போக்குவரத்து மையமாக இயங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இந்தத் திட்டத்தின் மூலமாக கிள்ளான் பள்ளத்தாக்கு பெரும் விரைவு போக்குவரத்து, கேடிஎம் கொமுட்டர், விரைவுத் தொடருந்து இணைப்பு, மற்றும் 12 பிற நெடுஞ்சாலைகளும் இணைக்கப்பட உள்ளன. இதன் மொத்த வளர்ச்சி மதிப்பு (Gross value added) RM 140 பில்லியனுக்கும் அதிகமாக மதிப்பிடப்பட்டுள்ளது.[3]
இந்த மேம்பாட்டுத் திட்டம் 2020-இல் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாகத் தாமதமானது.[4][3] IWH-CREC நிறுவனம், மலேசிய அரசுக்கு செலுத்த வேண்டிய RM 1.24 பில்லியன் கடன் தொகையைக் கட்டிய பிறகு, இந்தத் திட்டம் 2021-இல் மீண்டும் தொடங்கப்பட்டது. ஆனாலும் பின்னர் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.
Remove ads
பின்னணி
மே 28, 2011 அன்று, பண்டார் மலேசியா திட்டம், மலேசியாவின் 6-ஆவது பிரதமர், நஜீப் ரசாக் அவர்களால் பொது-தனியார் கூட்டாண்மைத் தன்மையுடன் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் மொத்த மேம்பாட்டு மதிப்பு RM 150 பில்லியன் என மதிப்பிடப்பட்டது.[2][5]
இந்தத் திட்டத்திற்கு ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம் (1MDB) முழு நிதி ஆதரவு வழங்கப்பட்டது. இந்த மேம்பாட்டின் மூலம், சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையத் தளத்தில் உள்ள தற்போதைய அரச மலேசிய வான்படை தளம், நெகிரி செம்பிலானில் உள்ள பண்டார் செரி செண்டாயான் (Bandar Sri Sendayan) நகருக்கு RM 2.7 பில்லியனுக்கு மாற்றப்பட இருந்தது. பண்டார் மலேசியா கட்டுமானச் செலவுத் தொகையில் RM 1.1 பில்லியன் மலேசிய அரசாங்கத்தால் நிதியளிக்கப்பட்டது; மீதமுள்ள தொகை ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனத்தால் (1MDB) நிதியளிக்கப்பட்டது.[2]
Remove ads
ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம்
திசம்பர் 2015-இல், ஒரே மலேசியா மேம்பாட்டு நிறுவனம், பண்டார் மலேசியாவின் 60% பங்குகளை IWH-CREC கூட்டமைப்பிற்கு RM 7.41 பில்லியனுக்கு விற்றது. இந்தக் கூட்டமைப்பில் டான் ஸ்ரீ லிம் காங் கூ என்பவரின் இசுகந்தர் வாட்டர்பிரண்ட் நிறுவனம் (Iskandar Waterfront Holdings Bhd); மற்றும் சீனாவின் சீனா தொடருந்து குழுமம் (China Railway Group Limited) ஆகியவை அடங்கும். இருப்பினும், மலேசிய நிதி அமைச்சு அறிவித்த கட்டணக் கடமைகளை நிறைவேற்றத் தவறியதால், இந்த உடன்படிக்கை மே 3, 2016 அன்று முறிந்தது.[2][6]
மே 2017 இல், நஜீப் ரசாக், சீனா, பெய்ஜிங்கிற்குப் பயணம் செய்தார். பெய்ஜிங்கில் நடந்த ஒரு கூட்டு மாநாட்டில், வாண்டா டாலியன் குழுமம் (Wanda Dalian Group) பண்டார் மலேசியாவில் பங்கேற்க ஆழ்ந்த ஆர்வத்தை வெளிப்படுத்தியது. ஆனாலும் சில மாதங்களுக்குப் பிறகு அதன் ஆர்வத்தை கைவிட்டது.[7][8][9] இருப்பினும் பற்பல சிக்கல்களுக்குப் பின்னர் இந்தத் திட்டம் தற்காலைகமாக ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.[6][10][11]
Remove ads
முன்மொழியப்பட்ட பரிமாற்று நிலையங்கள்
- 12 எம்ஆர்டி சுங்கை பூலோ-செர்டாங்-புத்ராஜெயா வழித்தடம்: எதிர்காலத்தில் இரண்டு நிலையங்கள்:
- 7 கேஎல்ஐஏ போக்குவரத்து (திட்டத்தில்)
- HSR கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு தொடருந்து (திட்டத்தில்)
- ETS கேடிஎம் இடிஎஸ் (திட்டத்தில்)
- 1 கேடிஎம் கொமுட்டர் சிரம்பான் வழித்தடம் (திட்டத்தில்)
- B2 விரைவுப் பேருந்து (கிடப்பில்)
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads