கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு தொடருந்து

மலேசியாவின் கோலாலம்பூர்; சிங்கப்பூரின் கிழக்கு ஜூரோங் பகுதியை இணைக்கும் அதிவிரைவு தொடருந்து From Wikipedia, the free encyclopedia

கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு தொடருந்து
Remove ads

கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு தொடருந்து (ஆங்கிலம்: Kuala Lumpur–Singapore High-Speed Rail; மலாய்: Kereta Api Berkelajuan Tinggi Kuala Lumpur–Singapura) என்பது மலேசியாவின் கோலாலம்பூர் மாநகரையும்; சிங்கப்பூரின் கிழக்கு ஜூரோங் பகுதியையும் இணைக்கும் ஓர் அதிவிரைவு தொடருந்து சேவையைக் குறிப்பிடுவதாகும். தற்போது நிலுவையில் உள்ள இந்தத் திட்டத்தைப் பற்றி, மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் அவர்களால் செப்டம்பர் 2010-இல் முதன்முதலாக அறிவிக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு தொடருந்து Kuala Lumpur–Singapore High-Speed Rail, கண்ணோட்டம் ...

பிப்ரவரி 2013-இல், அப்போதைய சிங்கப்பூரின் பிரதமர் லீ சியன் லூங், இந்தக் கூட்டுத் திட்டத்திற்கு முறையாக ஒப்புதல வழங்கினார். தொடக்கத்தில் இந்தத் திட்டம் 2026-ஆம் ஆண்டில் நிறைவடையும் என்று திட்டமிடப்பட்டது. இருப்பினும், மலேசியாவில் ஏற்பட்ட அரசியல் ஏற்றத்தாழ்வுகளினால் இந்தத் திட்டம் தற்காலைகமாகக் கைவிடப்பட்டது. 2018 மலேசிய பொதுத் தேர்தலில் அப்போதைய மலேசியப் பிரதமர் நஜீப் ரசாக் தோற்கடிக்கப்பட்டார். அவருக்குப் பின் வந்த மகாதீர் முகமது இந்தத் திட்டம் கைவிடப்படும் என்று தொடக்கத்தில் அறிவித்தார்.[1][2]

2018 சூன் 12-ஆம் தேதி, ​​மகாதீர் முகமது, ஜப்பானுக்கு பணயம் செய்தபோது, அதிக செலவுகளின் காரணமாக அந்தத் திட்டம் கைவிடப்படவில்லை; மாறாக ஒத்திவைக்கப்பட்டது என்று தெளிவுபடுத்தினார்.[3] திட்டச் செயல்பாடுகள் மீண்டும் சனவரி 2031-இல் தொடங்கும் என்று 2018 செப்டம்பர் 5-ஆம் தேதி இரு அரசாங்கங்களும் கூட்டாக அறிவித்தன. [3]

Remove ads

மலேசிய அரசியல் நெருக்கடி

மலேசிய அரசியல் நெருக்கடி 2020-2022-க்குப் பின்னர் முகிதீன் யாசின் தலைமையிலான பெரிக்காத்தான் நேசனல் (Perikatan Nasional) அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு தொடருந்து திட்டத்தை மீளாய்வு செய்வதற்காக முகிதீன் அரசாங்கத்திற்கு 2020-ஆம் ஆண்டின் இறுதி வரை கூடுதலான நீட்டிப்பு காலம் வழங்கப்பட்டது. ஆனால் எந்த ஓர் இறுதியான உடன்பாடும் எடுக்கப்படவில்லை; மேலும் சனவரி 1, 2021-இல் வெளியிடப்பட்ட ஒரு கூட்டு அறிக்கையில் அந்தத் திட்டம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது.[4]

இதன் விளைவாக, மலேசிய அரசாங்கம், சிங்கப்பூர் அரசாங்கத்திற்கு S$ 102 மில்லியன் சிங்கப்பூர் டாலரை இழப்பீட்டை வழங்கியது. அதன் பின்னர், இரண்டு ஆண்டுகள் உறுதியற்ற நிலைமை தொடர்ந்தது. சூலை 2023-இல், அன்வார் இப்ராகிம் அமைச்சரவையின் புதிய அரசாங்கம் அந்தத் திட்டத்தை மீண்டும் தொடக்கியது.[5][6]

Remove ads

வழித்தடம்

முன்மொழியப்பட்ட கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு வழித்தடம் 350 கிமீ (217 மைல்) நீளம் கொண்டது. இது கோலாலம்பூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான 3 மணி நேர பயண நேரத்தை ஏறக்குறைய 90 நிமிடங்களுக்குள் குறைக்கும்; தொடருந்துகள் மணிக்கு 320 கிமீ (200 மைல்) வேகத்தில் பயணிக்கும்.

இந்த வழித்தடம் கோலாலம்பூரில் உள்ள பண்டார் மலேசியாவில் தொடங்குவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. சிரம்பான், மலாக்கா நகரம், மூவார் மற்றும் பத்து பகாட் நகரம் ஆகிய நகரங்கள் வழியாகச் செல்லும் இந்த வழித்தடம், இறுதியாக சிங்கப்பூரில் உள்ள ஜூரோங் கிழக்கில் முடிவடையும்.

வழித்தட நகரங்கள்

முதல் திட்ட காலவரிசை

2021-இல், கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு வழித்தடம், மலேசிய அரசாங்கத்தால் ஒத்திவைக்கப்படுவதற்கு முன்:

  • 19 சூலை 2016: கேஎல்–சிங்கப்பூர் தொடருந்து (எச்எஸ்ஆர்) (HSR) திட்டத்திற்கான புரிந்துணர்வு உடன்படிக்கை
  • ஆகத்து 2016: சிங்கப்பூர் தரப்பில் முன்கூட்டிய பொறியியல் துறை ஆய்வுப் பணிக்களுக்கான அழைப்பு; கூட்டு மேம்பாட்டு பங்குதாரருக்கான சிங்கப்பூர்–மலேசியா கூட்டு ஒப்பந்தம்
  • 13 திசம்பர் 2016': இருதரப்பு உடன்படிக்கை
  • 2017 இன் பிற்பகுதி: தொடருந்து மற்றும் தொடருந்து சொத்துக்களை மேற்பார்வையிடும் தனியார் நிறுவனத்திற்கான பொதுப் பணிகள் மற்றும் ஒப்பந்த அழைப்பு
  • 2018–2025: கட்டுமானம்
  • 2023 இன் பிற்பகுதி: பன்னாட்டு மற்றும் உள்நாட்டு தொடருந்து இயக்குநர்களுக்கான ஒப்பந்த அழைப்பு
  • 2024–2026: சோதனை மற்றும் செயல்படுத்தல்[7]
Remove ads

தொடருந்து மற்றும் இயக்கம்

கோலாலம்பூர்-சிங்கப்பூர் அதிவிரைவு தொடருந்து விரைவுச் சேவை, கோலாலம்பூர் நகர மையத்தின் புறநகரில் உள்ள பண்டார் மலேசியாவிலிருந்து சிங்கப்பூரின் ஜூரோங் கிழக்கு வரை ஒவ்வொரு 30 நிமிடங்களுக்கு ஒரு முறை இயங்கும் என்று மை எச்எஸ்ஆர் (MyHSR) நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த இடைவிடாத விரைவுச் சேவை 90 நிமிடங்களில் கோலாலம்பூரில் இருந்து சிங்கப்பூரை அடையும். மேலும் பண்டார் மலேசியா நிலையத்தில் ஏறும் பயணிகள்; தொடருந்தில் ஏறுவதற்கு முன்னர், சிங்கப்பூர் குடிநுழைவு விண்ணப்பங்களை பண்டார் மலேசியாவிலேயே நிறைவு செய்து சரிபார்த்துக் கொள்ளலாம்.[8]

திட்ட விவரங்கள்

  • வழித்தட நீளம் 350 கிலோமீட்டர்கள் (220 மைல்கள்)
  • பயண நேரம் 90 நிமிடங்கள்
  • கட்டுமான செலவு (நஜீப் அரசு 2014) MYR 72 பில்லியன் (US$15.8 பில்லியன்)[9][10][11]
  • கட்டுமானச் செலவு (மகாதீர் அரசு 2018) MYR 110 பில்லியன் (US$24.1 பில்லியன்)
  • நிபுணர்கள் மதிப்பீடு MYR 40 பில்லியன் (US$8.8 பில்லியன்).[12]
  • புதிய சிறப்பு வழித்தடம்; புதிய தொடருந்துகள்; மணிக்கு குறைந்த வேகம் 270 கிமீ (170 மைல்); கூடுதல் வேகம் 330 கிமீ (200 மைல்).[13]
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads