பண்டார் மலேசியா உத்தாரா எம்ஆர்டி நிலையம்

பண்டார் மலேசியா திட்டத்தில் ஒரு விரைவுப் போக்குவரத்து நிலையம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பண்டார் மலேசியா உத்தாரா எம்ஆர்டி நிலையம் (ஆங்கிலம்: Bandar Malaysia Utara MRT Station; மலாய்: Stesen MRT Bandar Malaysia Utara) என்பது மலேசியா, கோலாலம்பூர், சாலாக் செலாத்தான், பண்டார் மலேசியா திட்டத்தின் கீழ் 12 புத்ராஜெயா வழித்தட கட்டுமானத்தில் உள்ள ஒரு விரைவுப் போக்குவரத்து (MRT) தொடருந்து நிலையம் ஆகும்.

விரைவான உண்மைகள் PY25 பண்டார் மலேசியா உத்தாரா, பொது தகவல்கள் ...

இந்த நிலையம் கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு தொடருந்து சேவையின் வடக்கு முனையமாகவும்; கோலாலம்பூர் மாநகரத்திற்கு தெற்கே உள்ள சாலாக் செலாத்தான், பண்டார் மலேசியா புறநகர்ப் பகுதிகளுக்கு சேவை செய்யும் நிலையமாகவும் கட்டமைக்கப்பட்டு உள்ளது.

Remove ads

இடம் மற்றும் கட்டுமானம்

எதிர்காலக் கட்டமைப்புத் திட்டத்தில் உள்ள இந்த நிலையம் சிம்பாங் வானூர்தி நிலையம் அமைந்திருந்த முன்னாள் இடத்தில்; E2  மலேசிய வடக்கு-தெற்கு விரைவுச்சாலையின் தெற்கு வழித்தடம்; மற்றும் இசுதானா சாலை (பெசுராயா சாலையின் ஒரு பகுதி) சந்திக்கும் இடத்திற்கு அருகில் உள்ளது.[1]

பண்டார் மலேசியா வளர்ச்சிக்காக சுங்கை பீசி பகுதியில் ஒதுக்கப்பட்ட இரண்டு எம்ஆர்டி நிலையங்களில் இந்த நிலையமும் ஒன்றாகும்; மற்றொன்று  PY26  பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையம்.[2]

புத்ராஜெயா வழித்தடம் மார்ச் 16, 2023-இல் நிறைவடைந்து செயல்படத் தொடங்கியது. இருப்பினும் பண்டார் மலேசியா திட்டம் ஒத்திவைக்கப் பட்டதாலும், கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு தொடருந்து திட்டம் தற்காலிகமாக நிறுத்தப் பட்டதாலும், இந்த PY25  பண்டார் மலேசியா உத்தாரா எம்ஆர்டி நிலையமும்;  PY26  பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையமும் திறப்புவிழா நிகழ்வில் சேர்க்கப்படவில்லை.

Remove ads

பண்டார் மலேசியா

பண்டார் மலேசியாவின் வடக்குப் பகுதிக்கும்; தெற்கே பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையம் ஆகியவற்றுக்கு இந்த நிலையம் சேவை செய்யும். மேலும் சுங்கை பீசி இராணுவ வானூர்தி நிலையம் அமைந்துள்ள இடத்தில் பண்டார் மலேசியா மேம்பாட்டுப் பகுதிகளுடன் இந்த நிலையமும் இணைத்துக் கட்டப்படுகிறது.[3]

எம்ஆர்டி புத்ராஜெயா வழித்தட நிலையம்

புத்ராஜெயா வழித்தடத்தின் பண்டார் மலேசியாவின் இரண்டு தொடருந்து நிலையங்களும் தற்போதைய சேவைப் பரிமாணத்தில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில் கோலாலம்பூர்–சிங்கப்பூர் அதிவிரைவு தொடருந்து திட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.[3]

இந்த பண்டார் மலேசியா உத்தாரா நிலையம், அருகிலுள்ள  PY26  பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையத்துடன் சேர்த்து, எதிர்கால நிரப்பு நிலையங்களாகக் கருதப்படுகின்றன.  PY24  சான் சோவ் லின் நிலையம் மற்றும்  PY27  கூச்சாய் எம்ஆர்டி நிலையம் ஆகிய நிலையங்களுக்கு இடையே இயங்கும் தொடருந்துகள் பண்டார் மலேசியா வழியாகச் செல்லும்; ஆனால்  PY26  பண்டார் மலேசியா செலாத்தான் எம்ஆர்டி நிலையத்த்தில் நிற்பது இல்லை.[4]

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads