பதினைந்தாவது தமிழ்நாடு சட்டமன்றம்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

தமிழ்நாட்டின் பதினைந்தாவது சட்டமன்றம் என்பது 23 மே 2016 அன்று அமைக்கப்பட்டு,06 மே 2021 வரை இயங்கிவந்த சட்டமன்றக் காலத்தைக் குறிக்கும்.

ஜெயலலிதா தலைமையிலான அரசு

பதினைந்தாவது தமிழக சட்டமன்றத்துக்குமே, மே 2016இல் 232 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. தஞ்சாவூர், அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு தேர்தலை வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதை காரணம் காட்டி தேர்தல் ஆணையம் நிறுத்தியது. 134 தொகுதிகளில் வென்ற அதிமுகவின் சார்பில் செயலலிதா மே 23 அன்று முதல்வர் ஆனார். அவருடன் 28 பேர் அமைச்சர்கள் பதவியேற்றனர்.[1] அதிமுக 134 தொகுதிகளிலும் திமுக கூட்டணி 98 இடங்களிலும் வென்றது, அதிமுக 40.8% வாக்குகளையும் திமுக கூட்டணி 39.7% வாக்குகளையும் பெற்றன.[2] நவம்பர் 19, 2016 அன்று தஞ்சாவூர் அரவக்குறிச்சி தொகுதிகளுக்கு சட்டமன்ற தேர்தலும் சட்டமன்ற உறுப்பினர் சீனிவேல் மறைந்ததால் திருப்பரங்குன்றத்துக்கு இடைத்தேர்தலும் வாக்கு எண்ணிக்கை நவம்பர் 22 அன்றும் நடந்தது[3] மூன்று தொகுதிகளிலும் அதிமுக வென்றது[4] முதலமைச்சர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக செப்டம்பர் 22 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முதலமைச்சர் ஜெயலலிதா 5 டிசம்பர் 2016 அன்று காலமானார்.[5]

Remove ads

பன்னீர்செல்வம் தலைமையிலான அரசு

ஜெயலலிதா மறைந்த நாளின் இரவினையடுத்து, டிசம்பர் 6 அதிகாலை 2 மணி அளவில் ஓ. பன்னீர்செல்வம் முதல்வராக பதவியேற்றார்.[6] செயலலிதா அமைச்சரவையில் இருந்த 31பேரும் இவருடன் பதவியேற்றார்கள்[7]

அதிமுக கட்சியின் பொதுச் செயலாளராக வி. கே. சசிகலா பதவியேற்றார்.[8]முதல்வர் பன்னீர் செல்வம் தன் பதவியை துறந்தார்[9] பன்னீர் செல்வம் பதவி விலகல் கடிதத்தை ஆளுநர் ஏற்றுக்கொண்டார்[10] பன்னீரின் பதவி விலகலைத் தொடர்ந்து அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்களின் தலைவராக சசிகலா பிப்ரவரி 5 அன்று தேர்ந்தெடுக்கப்பட்டார்[11]

Remove ads

அதிமுக உட்கட்சி பூசலும், அரசியல் சிக்கலும்

7 பிப்ரவரி 2017 அன்று செய்தியாளர்களை சந்தித்த பொறுப்பு முதல்வர் பன்னீர்செல்வம், தன்னை கட்டாயப்படுத்தியதால் பதவி விலகல் கடிதத்தை தான் அளித்ததாக தெரிவித்தார்.[12]இதனைத் தொடர்ந்து, அதிமுகவின் பொருளாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டதாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி. கே. சசிகலா அறிவித்தார். அதிமுகவின் சட்டமன்ற உறுப்பினர்கள் 5 பேர் பன்னீர்செல்வத்தை சந்தித்து தமது ஆதரவைத் தெரிவித்தனர். மீதமுள்ள உறுப்பினர்கள் தமக்கு ஆதரவளிப்பதாக சசிகலா அறிவித்தார்.

ஆளூநர் வித்தியாசாகர் ராவ் பிப்ரவரி 9, 2017 அன்று மாலை சென்னைக்கு வந்தார். 9 டிசம்பர் 2017 அன்று தமிழக ஆளுனரை பன்னீர்செல்வமும் சசிகலாவும் சந்தித்து, தங்கள் தரப்பிற்கு இருக்கும் ஆதரவுகள் குறித்து பேசினர்.[13] ஆளுநரை சந்தித்த போது சசிகலா முதல்வர் பதவி கோரிக்கையையும் அதற்கு சான்றாக தம்மை அதிமுக சட்டப்பேரவை தலைவராக தேர்ந்தெடுத்த ச. உ கள் கையைழுத்து போட்ட கடிதத்தையும் அளித்தார்.[14]

கிழக்குக் கடற்கரைச் சாலையில் அமைந்துள்ள கடற்கரை உல்லாச விடுதியொன்றில் சுமார் 130 சட்டமன்ற உறுப்பினர்களை சசிகலா தரப்பினர் சிறைபிடித்து வைத்துள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டது.[15] அதிமுக அமைச்சரும் சசிகலா தரப்பில் இருந்தவருமான மாபா பாண்டியராசன் பன்னீர் தரப்பிற்கு மாறினார். அமைச்சர் ஒருவர் பன்னீர் தரப்பிற்கு வருவது இதுவே முதல்முறையாகும்.[16] அதிமுக அவைத்தலைவர் மசூதனன் சசி தரப்புக்கிருந்த தன் ஆதரவை பன்னீர் தரப்புக்கு ஆதரவாக மாறினார்[17] மகோரா காலத்து அமைச்சர் பொன்னையன் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்தார். சசிகலா தரப்பு 120 சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களை ஆதரிப்பதாக கூறுகிறது[18] சோழவந்தான் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் (ச. உ) மாணிக்கம் என்பவர் தான் பன்னீர் தரப்பிற்கு ஆதரவு தெரிவித்த முதல் ச. உ ஆவார்.[19] சட்டதலைமை அலுவலர் ஒரு வாரத்திற்குள் தனக்கு ஆதரவு உள்ளது என்பதை முதல்வர் பதவி கோருபவர்களை சபையில் நிருபிக்க சொல்லும்படி கூற ஆளுநருக்கு ஆலோசனை கூறியுள்ளார்[20] ச. உ கள் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ளதாக கூறி தொடரப்பட்ட வழக்கில் தமிழக தலைமை அரசு வழக்கறிஞர் 119 ச.உ கள் வருவாய் துறை அதிகாரிகளிடமும் காவல் துறை அதிகாரிகளிடம் தாங்கள் அடைத்து வைக்கப்படவில்லை என்று உறுதிமொழி ஆவணத்தில் தெரிவித்துள்ளதாக கூறினார்.[21] செவ்வாய் கிழமை (நவம்பர் 14) அன்று உச்ச நீதிமன்றம் செயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு கூறியதும் கூவத்தூரிலிருந்து அனைத்து ச. உ களும் மகிழ்ச்சியாக வெளியேறுவார்கள் என்று சசிகலா கூறினார்.[22] அதிமுகவுடன் கூட்டணியில் இருந்த மக்கள் சமத்துவ கட்சியின் சரத்குமார் மனித நேய மக்கள் கட்சியின் தமீம் அன்சாரி ஆகியோர் பன்னீருக்கு ஆதரவு தெரிவித்தனர். மதுரை தெற்கு தொகுதி ச. உ சரவணன் சசிகலா தரப்பின் பிடியிலிருந்து தப்பி வந்ததாக கூறினார்.[23][24]

13 பிப்ரவரி வரை பன்னீர்செல்வம், ஒரு அமைச்சர் உள்ளிட்ட 8 சட்டமன்ற உறுப்பினர்கள் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர். 10 மக்களவை உறுப்பினர்கள், 2 மாநிலங்களவை உறுப்பினர்கள் என மொத்தமாக 12 பேர் பன்னீர்செல்வம் அணியில் இருந்தனர்.

14 பிப்ரவரி அன்று வெளியான சசிகலா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு தீர்ப்பில் சசிகலா உள்ளிட்ட 3 பேரை குற்றவாளியென உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து எடப்பாடி கே. பழனிச்சாமி அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார் [25]. பழனிச்சாமி ஆளுநரை சந்தித்து தன் ஆதரவு ச. உ களின் பட்டியலை கொடுத்து ஆட்சியமைக்க தன்னை அழைக்குமாறு கடிதம் கொடுத்தார்.[26] ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவருக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் (நாடாளுமன்ற உறுப்பினர்களை விடுத்து) அனைவரும் அடிப்படை உறுப்பினர் தகுதியிலிருந்து நீக்கப்பட்டதாக சசிகலா அறிவித்தார். பன்னீர் செல்வமும் எடப்பாடி பழனிச்சாமியும் மீண்டும் ஆளுநரை சந்தித்து சட்டப்பேரவையை கூட்டவேண்டும் என்றார்கள்[27]

Remove ads

கே. பழனிசாமி தலைமையிலான அரசு

16 பிப்ரவரி 2017 அன்று கே. பழனிசாமி முதல்வராக பதவியேற்றார். 15 நாட்களுக்குள் பெரும்பான்மையை நிருபிக்கும்படி ஆளுநர் கூறினார்.

நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தின் மீதான வெற்றி

18 பிப்ரவரி 2017 அன்று பழனிசாமி பெரும்பான்மையை நிருபிக்க சட்டமன்றத்தைக் கூட்டினார்.[28] காலை 11 மணிக்கு சட்டப்பேரவை தொடங்கியதும், நம்பிக்கை வாக்கெடுப்பு தீர்மானத்தை முதல்வர் முன்மொழிந்தார். ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்று பன்னீர்செல்வம் அணி, திமுக, காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகள் வலியுறுத்தின. வேறொரு நாளில் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தவேண்டும் எனவும் கோரப்பட்டது. ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் எனும் கோரிக்கையை ஏற்க முடியாது என்றும், வாக்கெடுப்பு முறை எனது தனிப்பட்ட முடிவென்பதால் தனது உரிமையில் யாரும் தலையிடக் கூடாது என்றும் பேரவைத் தலைவர் தனபால் பேசினார். இதனையடுத்து திமுக உறுப்பினர்கள் மேஜை மீது ஏறி நின்று வாக்குவாதம் செய்தல், இருக்கைகளை தட்டுதல், காகிதங்களைக் கிழித்தெறிதல் என அமளி செய்தனர். பேரவைத் தலைவர் மைக் உடைக்கப்பட்டது. அவரது இருக்கை சேதப்படுத்தப்பட்டது. பேரவை செயலாளர் ஜமாலுதீன் இருக்கையும் உடைக்கப்பட்டது. இந்த பலத்த அமளிக்கு இடையிலும், எடப்பாடி பழனிசாமி அணியில் உள்ள சட்டப்பேரவை உறுப்பினர்கள் மட்டும் அமைதியுடன் இருந்தனர். இதனால் பேரவையில் இருந்து சபாநாயகர் வெளியேறியதோடு, சட்டப்பேரவைக் கூட்டத்தை 1 மணி வரை ஒத்திவைத்தார். அவை மீண்டும் கூடியபோது மீண்டும் அமளி ஏற்பட்டு, திமுக உறுப்பினர்களை வெளியேற்றுமாறு அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவு பிறப்பித்தார். திமுக உறுப்பினர்களை வெளியேற்றப்பட்டதையடுத்து, காங்கிரசு உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.[29]

அதன்பிறகு வாக்கெடுப்பு நடந்தது. 122 வாக்குகள் பெற்று பழனிச்சாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றதாக சபாநாயகர் தனபால் அறிவித்தார். பன்னீர்செல்வம் அணியினைச் சேர்ந்த 11 பேர் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர்.[30]

அமைச்சரவை

மேலதிகத் தகவல்கள் துறை, அமைச்சர் ...
Remove ads

மேற்கோள்கள்

உசாத்துணை

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads