பத்ராவதி (கர்நாடகம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பத்ராவதி (Bhadravati) இந்திய மாநிலமான கர்நாடகாவின் சிமோகா மாவட்டத்தின் சிமோகா வருவாய் வட்டத்தில் உள்ள நகரமாகும். பத்ராவதி நகரம் பெங்களூரிவிலிருந்து 255 கிலோ மீட்டர் தொலைவிலும், மாவட்டத் தலைமையிடமான சிமோகா நகரத்திலிருந்து 20 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.[2] பத்ராவதி நகராட்சி 67.05 சதுர கிலோ மீட்டர் பரப்பளவும், 1,51,102 மக்கள் தொகையும் கொண்டது.[3]
Remove ads
பெயர்க் காரணம்
இந்நகரில் பாயும் பத்ரா ஆற்றின் பெயரால் இந்நகருக்கு பத்ராவதி எனப் பெயர் ஆயிற்று. இந்நகரத்தின் முந்தைய பெயர் பேன்கிபுரா அல்லது பேன்கி பட்டின ஆகும்.[2] ஹோய்சாளர்கள் இந்நகரத்தை தலைநகராகக் கொண்டு ஆண்டனர்.
மக்கள் தொகையியல்
2011ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி பத்ராவதி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 1,51,102 ஆகும். அதில் ஆண்கள் 75,009 ஆகவும்; பெண்கள் 76,093 ஆகவும் உள்ளனர். எழுத்தறிவு 86.36% ஆகவும் உள்ளது. ஆயிரம் ஆண்களுக்கு 1014 பெண்கள் என்ற அளவில் பாலின விகிதம் உள்ளது.[4] [5] ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள், மொத்த மக்கள் தொகையில் 10% அளவில் உள்ளனர்.[6] பத்ராவதி நகரத்தின் முக்கிய மொழி கன்னட மொழி ஆகும்.
போக்குவரத்து
சாலை
தேசிய நெடுஞ்சாலை எண் 206 மற்றும் 13 பத்ராவதி நகரத்தின் வழியாக செல்கிறது. பெங்களூருவிலிருந்து சிமோகா செல்லும் பேருந்துகள் பத்ராவதி நகரத்தில் நின்று செல்கிறது.
தொடருந்து
சிமோகா – பெங்களூர், மைசூர் – சிமோகா, பிரூர் – சிமோகா செல்லும் அனைத்து தொடருந்துகளும், பத்ராவதி தொடருந்து நிலையத்தில் நின்று செல்கிறது.[7]
பொருளாதாரம்
பத்ராவதி நகரத்தில் இரும்புத் தொழிற்சாலையும், காகித தொழிற்சாலையும் உள்ளது.
சுற்றுலாத் தலங்கள்
- இலக்குமி நரசிம்மர் கோயில்
- பத்ரா வனவிலங்குகள் காப்பகம்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads