பத்ராவதி (மகாராஷ்டிரம்)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

இந்திய மாநிலமான மகாராட்டிராவின் சந்திரப்பூர் மாவட்டத்தில் உள்ள பத்ராவதி (Bhadravati) (முந்தைய பெயர் பந்தக்) (Bhandak), நகரம் நகராட்சி மன்றமும், பத்ராவதி வருவாய் வட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் பத்ராவதி, நாடு ...

சந்திராப்பூர் மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் சந்திரப்பூர் நகரத்திலிருந்து 26 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்த பத்ராவதியில் வெடிமருந்து தொழிற்சாலையும், இரும்புச் சுரங்கங்களும் அமைந்துள்ளது.

Remove ads

போக்குவரத்து வசதிகள்

சந்திரப்பூர் – நாக்பூர் நெடுஞ்சாலையில் அமைந்த பத்ராவதி நகரம் பேருந்துகளால் மாநிலத்தின் மற்ற நகரங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஐந்து நடைமேடைகள் கொண்ட பத்ராவதி நகரத்தின் பந்தக் தொடருந்து நிலையம் நாட்டின் முக்கிய நகரங்களை இணைக்கிறது. [1]

மக்கள் தொகையியல்

2011ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, பத்ராவதி நகரத்தின் மொத்த மக்கள் தொகை 60,565 ஆகும். மொத்த மக்கள் தொகையில் 31,451 ஆண்களும், 29,114 பெண்களும் உள்ளனர். பாலின விகிதம் ஆயிரம் ஆண்களுக்கு 926 பெண்கள் உள்ளனர். எழுத்தறிவு விகிதம் 89.26% ஆகும். ஆறு வயதிற்குட்பட்ட குழந்தைகள் மொத்த மக்கள் தொகையில் 10.26% ஆக உள்ளனர்.[2]

ஆன்மிகத் தலங்கள்

சமணசமயத் தீர்த்தங்கரரான பார்சுவநாதரின் பழமையான கோயில் உள்ளது.[3]

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads