பாக்கியலட்சுமி (தொலைக்காட்சித் தொடர்)

2020 தமிழ்த் தொலைக்காட்சித் தொடர் From Wikipedia, the free encyclopedia

Remove ads

பாக்கியலட்சுமி என்பது 27 ஜூலை 2020 முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகும் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2] இது ஸ்டார் ஜல்சா என்ற தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'ஸ்ரீமோயி' என்ற பெங்காலி மொழித் தொடரின் மறு ஆக்கம் ஆகும்.

விரைவான உண்மைகள் பாக்கியலட்சுமி, வகை ...

இந்த தொடரை 'டேவிட்' என்பவர் இயக்க, சுசித்ரா என்பவர் பாக்கியலட்சுமி என்ற முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இவருடன் வேலு லட்சுமணன், சதிஷ், நேகா மேனன் போன்ற பலர் நடிக்கிறார்கள்.

Remove ads

கதைச்சுருக்கம்

இந்த தொடரின் கதை என்ற இல்லத்தரசி என்பவர் அம்மாவாக, மனைவியாக, மருமகளாக போன்ற பல பொறுப்புகளில் வகிக்கின்றார். ஆனால் அவர் படும் பாடுகள் என்ன சில சமயம் பிள்ளைகள், கணவர், மாமியார், மாமனார் இல்லத்தரசியை எப்படி அவமதிக்கிறார்கள். பாக்கியலட்சுமி எல்லாவற்றையும் எப்படி அனுசரித்துப் போகிறாள். ஒரு கட்டத்தில் அவளின் சுயமரியாதையை எப்படி போராடி மீட்டெடுத்தாள் என்பது தான் கதை.

நடிகர்கள்

முதன்மை கதாபாத்திரம்

  • சுசித்ரா - பாக்கியலட்சுமி கோபிநாத்
  • விஷால் - எழிலன் கோபிநாத்
  • சதிஷ் - கோபிநாத் (பாகியலட்சுமியின் கணவன்)
  • நந்திதா ஜெனிபர் - ராதிகா (கோபிநாத்தின் முன்னாள் காதலி)

துணை கதாபாத்திரம்

  • வேலு லட்சுமணன் - செழியன் (பாகியலட்சுமியின் மகன்)
  • நேகா மேனன் - இனியா (பாகியலட்சுமியின் மகள்)
  • ரோசரி - ராமமூர்த்தி (கோபிநாத்தின் தந்தை)
  • ராஜலட்சுமி - ஈஸ்வரி ராமமூர்த்தி
  • பிரியா - கற்பகம் (பாக்யலட்சுமியின் தாய்)
  • திவ்யா கணேஷ் - ஜென்னிபர் ஜோசப் (செழியனின் காதலி)
  • மனோகரன் - ஜோசப் (ஜெனியின் தந்தை)
  • மீனா செல்லமுர்த்தி - செல்வி
  • மீனாட்சி - ரேகா
Remove ads

நடிகர்களின் தேர்வு

இந்த தொடரில் பாக்கியலட்சுமி என்ற கதாபாத்திரம் மூலம் மலையாள நடிகை சுசித்ரா என்பவர் தமிழ் தொலைக்காட்சி துறைக்கு அறிமுகமாகிறார். இவருக்கு ஜோடியாக மகாராணி, கல்யாணப்பரிசு 2 போன்ற தொடர்களில் நடித்த 'சதிஷ்' நடிக்கின்றார். இவர்களின் பிள்ளைகளாக கடைக்குட்டி சிங்கம் என்ற தொடரில் நடித்த 'வேலு லட்சுமணன்' மற்றும் 'விஷால்' என்பவர்கள் நடிக்கின்றார்கள். வாணி ராணி தொடர் புகழ் 'நேகா மேனன்' இதில் பள்ளி மனைவியாக நடிக்கின்றார்.

நேரம் மாற்றம்

இந்த தொடர் முதலில் 16 மார்ச் 2020 ஆம் ஆண்டு முதல் மணிக்கு ஒளிபரப்ப திட்டமிடப்பட்டது. கொரோனாவைரசு காரணத்தால் 27 ஜூலை 2020 முதல் திங்கள் முதல் சனி வரை மாலை 6:30 மணிக்கு ஒளிபரப்பானது. இந்த தொடர் மக்களை மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த காரணத்தால் 5 அக்டோபர் 2020 முதல் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகிவருகின்றது.

மதிப்பீடுகள்

கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, மிகக் குறைந்த மதிப்பீடுகள் ...

சர்வதேச ஒளிபரப்பு

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads