காத்மாண்டு மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
காத்மாண்டு மாவட்டம் (Kathmandu District) (நேபாளி: काठमाडौं जिल्लाⓘ; மத்திய நேபாளத்தின், பாக்மதி மாநிலத்தில் உள்ள 13 மாவட்டங்களில் ஒன்றாகும். காத்மாண்டு மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம், காட்மாண்டு ஒரு மாநகராட்சியும், நேபாள நாட்டின் தலைநகரமும் ஆகும். இம்மாவட்டத்தின் பிற நகரங்கள் தோகா மற்றும் பூதநீலகண்டம் ஆகும்.

395 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட காத்மாண்டு மாவட்டத்தின், 2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, மக்கள் தொகை 17,44,240 ஆகும்.[1] இம்மாவட்டத்தில் புகழ் பெற்ற சுற்றுலாத் தலங்களும், இந்து மற்றும் பௌத்தக் கோயில்களும் கொண்டது.
Remove ads
புவியியல்
காத்மாண்டு மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 1262 மீட்டர் முதல் 2732 மீட்டர் உயரம் வரை பரவியுள்ளது. காத்மாண்டு சமவெளியில் அமைந்த மூன்று மாவட்டங்களில் காத்மாண்டு மாவட்டமும் ஒன்றாகும். பிற இரண்டு மாவட்டங்கள், பக்தபூர் மாவட்டம் மற்றும் லலித்பூர் மாவட்டங்கள் ஆகும்.
மாவட்ட எல்லைகள்
- கிழக்கு: பக்தபூர் மாவட்டம் மற்றும் காப்ரேபலாஞ்சோக் மாவட்டம்
- மேற்கு: தாதிங் மாவட்டம் மற்றும் நுவாகோட் மாவட்டம்
- வடக்கு: நுவாகோட் மாவட்டம் மற்றும் சிந்துபால்சோக் மாவட்டம்
- தெற்கு: லலித்பூர் மாவட்டம் மற்றும் மக்வான்பூர் மாவட்டம்
Remove ads
நிலவியியல் மற்றும் தட்ப வெப்பம்
காத்மாண்டுவின் கோடை கால வெப்ப நிலை (சூன் – சூலை) 32° செல்சியஸ் வரையிலும், குளிர்கால வெப்ப நிலை (டிசம்பர் – சனவரி). -2° செல்சியஸ் ஆகவும் உள்ளது. இம்மாவட்டத்தின் சராசரி ஆண்டு மழைப்பொழிவு 176.4 மில்லி மீட்டராகும்.
Remove ads
பண்பாடு
காத்மாண்டு மாவட்டத்தில் பல்வேறு இன மக்கள், மொழிகள், பண்பாடு, சமயங்கள் கொண்ட வாழும் மாவட்டம் ஆகும். நேவார் மக்கள் அதிகம் வாழும் மாவட்டம் ஆகும். சமசுகிருத மொழி தாக்கம் கொண்ட நேபாள் பாஷா மற்றும் நேபாள மொழியும் அதிகம் பேசப்படும் மொழிகளில் ஒன்றாகும். நேபாளத் திருவிழாக்களுடன், இந்தியா மற்றும் திபெத் நாட்டின், இந்து சமய - பௌத்த சமயத் திருவிழாக்களும் இங்கு கொண்டாடப்படுகிறது.
பொருளாதாரம்
சுற்றுலாத் துறை காத்மாண்டு மாவட்டத்தின் முக்கிய வருவாய் ஆகும். உலகப் பாரம்பரியம் மிக்க புகழ் வாய்ந்த இந்து மற்று பௌத்தக் கோயில்களான பசுபதிநாத் கோவில், சுயம்புநாதர் கோயில், பௌத்தநாத், புத்தநீல்கந்தா போன்ற ஆன்மிகத் தலங்கள் இங்குள்ளன.
நிர்வாகம்

காத்மாண்டு மாவட்டம் ஒரு மாநகராட்சியும் பத்து நகராட்சிகளையும் கொண்டுள்ளது.[3] அவைகளின் விவரம்:
- பூதநீலகண்டம் நகராட்சி
- சந்திரகிரி நகராட்சி
- தட்சினகாளி நகராட்சி
- கோகர்ணேஸ்வரர் நகராட்சி
- காகேஸ்வரி மனோகரா நகராட்சி
- காட்மாண்டு மாநகராட்சி
- கீர்த்திபூர் நகராட்சி
- நாகார்ஜுன் நகராட்சி
- சங்கர்பூர் நகராட்சி
- தாரகேஷ்வர் நகராட்சி
- தோகா நகராட்சி
மக்கள் தொகையியல்
காத்மாண்டு மாவட்ட மக்கள் தொகையான 17,44,240-இல் ஆண்கள் 9,13,001 ஆகவும் மற்றும் பெண்கள் 8,31,239 ஆகவும் உள்ளனர். 4,36,355 குடியிருப்பு வீடுகள் உள்ளது.[4]
ஆன்மிக சுற்றுலாத் தலங்கள்
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads