பானிப்பத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பானிப்பட் (Panipat, ⓘ, இந்தி:पानीपत) என்பது இந்தியாவின் அரியானா மாநிலத்தில் அமைந்துள்ள வரலாற்று ரீதியாக ஒரு பழம்பெரும் நகரமாகும். இது இந்தியத் தலைநகர் டில்லியில் இருந்து 90 கி.மீ. தூரத்தில் உள்ளது. இதனை தேசிய தலைநகர் வலயம் நிர்வகிக்கின்றது. இந்திய வரலாற்றில் இங்கு மூன்று போர்கள் பானிபட்டில் இடம் பெற்றுள்ளது.
Remove ads
வரலாறு
மகாபாரத காலத்தில் பாண்டவர்களினால் உருவாக்கப்பட்ட ஐந்து நகரங்களில் பானிப்பட்டும் ஒன்றாகும். இதன் வரலாற்றுப் பெயர் பாண்டுப்பிரஸ்தம் ஆகும்.
பானிபட் போர்கள்
- முதலாம் பானிபட் போர் 1526 - பாபரின் படைகளுக்கும், தில்லியை ஆண்ட இப்ராகிம் லோடிப் படைகளுக்கும் 21 ஏப்ரல் 1526ல் நடைபெற்றது. போரில் பாபர் வென்று தில்லியில் முகலாய பேரரசை நிறுவினார்.
- இரண்டாம் பானிபட் போர் 1556 - வட இந்தியாவை ஆண்ட தில்லிப் பேரரசர் ஹெமுவின் படைகளுக்கும், அக்பரின் படைகளுக்கிடையே இடையே 5 நவம்பர் 1556இல் பானிபட்டில் போர் நடைபெற்றது[1] போரில் அக்பர் வென்றார்.[2] இப்போரில் அக்பர் வென்று தில்லி முகலாயப் பேரரசர் ஆனார்.
- மூன்றாம் பானிபட் போர் 1761 - மராட்டிய பேரரசின் படைகளுக்கும், அஆப்கானிஸ்தான் மன்னர் அகமது சா அப்தாலிக்கும் இடையில் 14 ஜனவரி 1761ல் நடந்தது. அகமது சா துரானியை, ரோகில்லாக்கள் மற்றும் அவத் நவாப் சுஜா-உத்-தௌ ஆதரித்தனர். இப்போரில் இராசபுத்திரப் படைகளும், சீக்கியப் படைகளும் மராட்டியப் படைகளுக்கு உதவ முன் வரவில்லை. எனவே மராத்தியப் படைகள் தோல்வி கண்டது. பஞ்சாப், ஜம்மு-காஷ்மீர், தில்லிப் பகுதிகளை ஆப்கானியர்களுக்கு விட்டுத்தரப்பட்டது. ஆப்கானியர்களின் வெற்றி இந்திய வரலாற்றில் ஒரு பெரும் திருப்புமுனையாக அமைந்தது. இந்தியாவில் இந்தியாவில் கம்பெனி ஆட்சி வளரக் காரணமாயிற்று.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads