நினைவுக் கோயில்
பண்டைய எகிப்த்தில் மனர்களின் கல்லறையை அடிப்படையாக கொண்ட கோயில்கள் From Wikipedia, the free encyclopedia
Remove ads
நினைவுக் கோயில் (Memorial temples) பண்டைய எகிப்தை புது எகிப்திய இராச்சியக் காலத்திலிருந்து இறந்த பார்வோனை புதைக்கும் மன்னர்களின் சமவெளியின் கல்லறைக்கு அருகில் இறந்த பார்வோனின் நினைவாக எழுப்பப்படும் நினைவுக் கோயில் ஆகும். இக்கல்லறைக் கோயில், பார்வோன்களின் இறப்பிற்குப்பின் அவர்களை வழிபாடு செய்ய வேண்டி அமைக்கப்பட்டது.

வரலாறு

பழைய எகிப்து இராச்சியம் (கிமு 2686 – கிமு 2181) மற்றும் மத்தியகால எகிப்து இராச்சியத்தின் (கிமு 2055 – கிமு 1650) காலத்தில் தான் இறந்த பார்வோன்களின் சடலங்களை அடக்கம் செய்த பிரமிடுகளுக்கு மிக அண்மையில், பார்வோன்களின் இறப்பிற்குப்பின் அவர்களை இறைவழிபாடு செய்ய தனியாக நினைவுக் கோயில்கள் நிறுவும் வழக்கம் ஏற்பட்டது. புது எகிப்து இராச்சியக் காலத்தில் (கிமு 1550 – கிமு 1077) பார்வோன்களின் சடலங்கள் மன்னர்களின் சமவெளியில் அடக்கம் செய்யப்பட்டதுடன், அவர்களது நினைவுக் கோயில்கள் தனியாக வேறிடத்தில் நிறுவப்பட்டன. எகிப்தியர்கள் இந்த நினைவுக் கோயிலை பார்வோன்களின் மில்லியன் கணக்கான ஆண்டுகளின் மாளிகைகள் என அழைத்தனர்.[1]
தீபை நகரத்தில் நடைபெறும் ஒபெத் திருவிழாவின் போது, பண்டைய எகிப்தியக் கடவுளான அமூனின் படகை நிறுத்தும் இடமாகவும் இந்த நினைவுக் கோயில்கள் பயன்படுத்தப்பட்டது. முதல் நினைவுக் கோயில் புது எகிப்து இராச்சியத்தை ஆண்ட எகிப்தின் பதினெட்டாம் வம்ச பார்வோன் முதலாம் அமென்கோதேப்பிற்கான (கிமு 1525–1504) நினைவுக் கோயில் பண்டைய தேர் எல் பகாரி நகரத்தில் நிறுவப்பட்டது. இது எகிப்தின் பதினொன்றாம் வம்ச மன்னர் இரண்டாம் மெண்டுகொதேப்பின் கல்லறைக் கோயில் அருகே உள்ளது.[2]
19ஆம் வம்ச பார்வோன் முதலாம் சேத்தியின் நினவுக் கோயில் அபிதோஸ் நகரத்தில் உள்ளது.[3] இரண்டாம் ராமேசஸ் ராமேசியம் என்ற அவரது நினைவுக் கோயிலைக் கட்டினார்.[4]20-ஆம் வம்ச பார்வோன் மூன்றாம் ராமேசஸ் தனது நினைவுக் கோயிலை மெடிநெத் அபு நகரத்தில் கட்டினார்.[5]
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads