பூவே உனக்காக (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பூவே உனக்காக என்பது சன் தொலைக்காட்சியில் 10 ஆகஸ்ட் 2020 முதல் 18 சூன் 2022 ஆம் ஆண்டு வரை ஒளிபரப்பான காதல் தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இந்த தொடரில் ராதிகா பிரீத்தி, வர்ஷினி அர்சா மற்றும் முகமது அஸீம் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்க, இயக்குநர் தங்கபாண்டியன் என்பவர் இயக்கியுள்ளார்.[1] இத்தொடர் 18 சூன் 2022 அன்று 572 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
கதை சுருக்கம்
பூவரசி (ராதிகா பிரீத்தி) மற்றும் கீர்த்தி (ஜோவிதா லிவிங்ஸ்டன் ஜோன்ஸ்) இருவரும் சிறந்த நண்பர்கள். மேலும் இருவரும் நண்பர்களாக எப்போதும் நிலைத்திருப்பார்கள் என்று நம்புகிறார்கள். பூவரசி தனது தாயிடம் யாரையும் காதலிக்க மாட்டேன் என்று உறுதியளிக்கிறாள். அதே தருணம் அவளுக்கு விரும்பாத திருமணத்தை அவளின் தாய் நடத்த ஏட்பாடுகள் செய்யப்படுகின்றது. இவளின் கனவில் ஒரு மர்ம மனிதனைப் பற்றி கனவு காண்கிறாள். அவன் பெய ர் கதிர் (அருண்), ஒரு பணக்கார மற்றும் அழகான இளைஞன், கீர்த்தியை முதல் பார்வையில் காதலிக்கிறான். ஆனால் விதியின் சதியால் பூவரசியை கதிர் திருமணம் செய்கின்றான். திடீரென கீர்த்தி இறக்க கதிர் மற்றும் பூவரசியின் வாழ்வில் நடக்கப்படும் மாற்றங்களை இந்த தொடர் விளக்குகின்றது.
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- ராதிகா பிரீத்தி (2020-2022) → வர்ஷினி அர்சா (2022) - பூவரசி
- கீர்த்தியின் சிறந்த நண்பி, கதிரின் மனைவி, இரத்தினவள்ளி மற்றும் செந்தமிழ்செல்வனின் மகள்.
- அருண் (2020- ஜூன் 2021) → முகமது அஸீம் (2021-2022) - கதிர் சிவநாராயணன்
- கீர்த்தியின் முன்னாள் காதலர், பூவரசியின் கணவர், கார்த்தியின் சிறந்த நண்பர்.
- அஷ்வின் தத்தா, பூவரசியின் மெய்க்காப்பாளர் (ஒரு மனிதன் இரட்டை கதாபாத்திரம்)
- சாயா சிங் - ரஞ்சனா சொக்கலிங்கம் (2021-2022)
துணை கதாபாத்திரம்
- தேவப்பிரியா - மகேஸ்வரி
- அருண் ராஜன் - மாரித்துறை
- சுதா (2020 - மே 2021) → கிருபா கிருஷ்ணமூர்த்தி - ராஜலட்சுமி (மே 2021-2022)
- சுபத்திரா - பத்மாவதி
- ஜெயலட்சுமி - ஜெயந்தி
- ராஜ்காந்த் - நாகராஜ் (2020-2022)
- தஷ்வந்த் - குணசேகர் (2020-2022)
- சியாம் - முத்துவேல் (2020-2022)
முந்தைய கதாபாத்திரங்கள்
- ஜோவித்தா[2][3] - கீர்த்தி (2020 - மார்ச் 2021) தொடரில் இறந்துவிட்டார்
- ஸ்ரீனிஸ் அரவிந்த் - கார்த்திக் (ஜூன் 2021 – ஆகஸ்ட் 2021) தொடரில் இறந்துவிட்டார்
- ஆமணி - ரத்னவள்ளி (2020 - மார்ச் 2021) தொடரில் இறந்துவிட்டார்
- அருன் குமார் ராஜன் - செல்வன் (2020 - ஜூன் 2021)
- விக்னேஷ் - சக்திவேல் (2020 - ஜூன் 2021)
- ரேகா நாயர் - தங்கம் (2020 - ஜூன் 2021)
- ஸ்ரீலேகா ராஜேந்திரன் - மாரியம்மா (2020 - ஜூன் 2021)
- ஸ்ரீதேவி அசோக் - தனலட்சுமி (2020 - மே 2021)
- சுராஜ் நாயுடு - கேசவன் (2020 - 2021)
- அஜய் ரத்தினம் - சிவநாராயன் (2020)
- ஜி.எம்.குமார் - சங்கரலிங்கம் (2020 - 2021)
- உஷா எலிசபெத் - கற்பகம் (2020) தொடரில் இறந்துவிட்டார்
- பிரேமலதா - லட்சுமி (2021)
- சுதா - ராஜலட்சுமி சிவநாராயணன்
Remove ads
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
இந்த தொடர் முதலில் கல்யாண வீடு என்ற தொடரின் ஒளிபரப்பு நேரத்திற்கு பதிலாக 10 ஆகத்து 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை சனி இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது. பின்னர் 16 நவம்பர் 2020 முதல் 28 நவம்பர் 2020 வரை இரவு 7:30 மணி முதல் 8:30 மணி வரை 1 மணித்தியாலம் ஒளிபரப்பாகி, நவம்பர் 30, 2020 முதல் இரவு 8 மணிக்கும் நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பானது, பின்னர் 18 அக்டோபர் 2021 முதல் இரவு 10 மணிக்கு நேரம் மாற்றப்பட்டு ஒளிபரப்பாகி, 7 பிப்ரவரி 2022 முதல் இரவு 10:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் சன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணையம் அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர் போன்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads