கல்யாண வீடு (தொலைக்காட்சித் தொடர்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
கல்யாண வீடு என்பது சன் தொலைக்காட்சியில் ஏப்ரல் 16, 2018 முதல் 13 நவம்பர் 2020 ஆம் ஆண்டு வரை திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பான குடும்ப கதைக்களத்தை கொண்ட தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும்.[1][2]
இந்த தொடரை மெட்டி ஒலி மற்றும் நாதஸ்வரம் புகழ் திருமுருகன் கதை எழுதி, இயக்கி மற்றும் நடித்து வருகின்றார், இவருடன் சேர்ந்து பிரபல இயக்குநரும் நடிகருமான ஆர். சுந்தர்ராஜன், புதுமுக நடிகைகள் அஞ்சனா மற்றும் கன்னிகா ரவி முதன்மை காதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த தொடர் 13 நவம்பர் 2020 ஆம் ஆண்டு 684 அத்தியாங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- திருமுருகன் - கோபி கிருஷ்ணன்
- ஆர். சுந்தர்ராஜன் - கதிரேசன்
- ஸ்பூர்த்தி கவுடா (12-599) → கன்னிகா ரவி (602-684) - சூர்யா
- அஞ்சனா - சுவேதா
- மௌலி (577-684) - மாணிக்கவாசன்
கோபி கிருஷ்ணன் குடும்பத்தினர்
- பென்ஸி ப்ராங்க்லின் - அனுசியா
- டோனா சங்கர் - ரம்யா
- அங்கிதா - சவிதா
- சங்கவி ஜெயச்சந்திரன் - கலைவாணி
- ஜெயந்தி - சிவகாமி
- பவித்ரா - ரோஜா
ஒளிபரப்பு நேரம் மாற்றம்
இந்த தொடர் முதல் முதலில் ஏப்ரல் 16, 2018 அன்று இரவு 7:30 மணிக்கு ஒளிபரப்பானது. கொரோனாவைரசு காரணத்தால் ஏப்ரல் 3, 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு ஜூலை 27, 2020 முதல் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 8 மணிக்கு புதிய நேரத்தில் ஒளிபரப்பானது.
Remove ads
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடரை சன் தொலைக்காட்சி மற்றும் சன் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் (ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளிலும் ஒளிபரப்பானது.
- இந்த தொடரின் பகுதிகள் சன் தொலைக்காட்சி என்ற யூடியூப் இணையம் அலைவரிசை மற்றும் சன் நெக்ட்ஸ், எம்எக்ஸ் பிளேயர் போன்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
- இலங்கையில் உள்ள தமிழ் தொலைக்காட்சி சேவையான சக்தி தொலைக்காட்சியிலும் ஒளிபரப்பானது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads