இசுமாயில் சப்ரி அமைச்சரவை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
இசுமாயில் சப்ரி அமைச்சரவை அல்லது மலேசியாவின் 22-ஆவது அமைச்சரவை (மலாய்: Kabinet Ismail Sabri; ஆங்கிலம்: Ismail Sabri Cabinet; சீனம்: 沙比里内阁); என்பது மலேசியப் பிரதமர் இசுமாயில் சப்ரி யாகோப் தலைமையிலான மலேசியாவின் 22-ஆவது அமைச்சரவை ஆகும்.[1]
2021 ஆகத்து 21-ஆம் தேதி, மலேசியாவின் 9-ஆவது பிரதமராக டத்தோ ஸ்ரீ இசுமாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob) நியமிக்கப்பட்ட பின்னர், 2021 ஆகத்து 30-ஆம் தேதி, இந்த 22-ஆவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.[2]. இந்த அமைச்சரவை மலேசிய குடும்ப அமைச்சரவை (Malaysian Family Cabinet) என்றும் அழைக்கப்படுகிறது.[3][4]
Remove ads
பொது
இந்த அமைச்சரவையின் நிர்வாகம் 4 முக்கிய அரசியல் கூட்டணிகளை ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்டது.
- பாரிசான் (Barisan Nasional) 4 கட்சிகள்.[5]
- பெரிக்காத்தான் (Perikatan Nasional) 5 கட்சிகள்.[6]
- சரவாக் கூட்டணி (Gabungan Parti Sarawak) 4 கட்சிகள்.[7]
- சபா கூட்டணி (Parti Bersatu Sabah)[8].
டத்தோ ஸ்ரீ இசுமாயில் சப்ரியின் அமைச்சரவைக்கு சுயேச்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆதரவு அளித்துள்ளனர்.[9][10]
வரலாறு
மார்ச் 1, 2020-இல், பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி (Parti Pribumi Bersatu Malaysia) (BERSATU) வெளியேறியது. அதன் பின்னர் மக்கள் நீதிக் கட்சியின் (Parti Keadilan Rakyat) (PKR) துணைத் தலைவர் அஸ்மின் அலியின் (Azmin Ali) தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியில் இருந்து வெளியேறினர். இவற்றைத் தொடர்ந்து மகாதீர் பின் முகமது தன் பிரதமர் பதவியைத் துறப்பு செய்தார்.
மலேசியாவின் மாமன்னர், யாங் டி பெர்துவான் அகோங் (Yang di-Pertuan Agong) சுல்தான் அப்துல்லா (Abdullah of Pahang), பின்னர் மலேசிய நாடாளுமன்றத்தின் அனைத்து உறுப்பினர்கள்; மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களைச் சந்தித்தார்.
முகிதீன் யாசின் நிர்வாகம்
இறுதியில் எட்டாவது பிரதமராக பெர்சத்துவின் (BERSATU) தலைவரான முகைதின் யாசினை மலேசியாவின் மாமன்னர் நியமித்தார். அதன் பின்னர் முகிதீன் யாசின் ஒரு கூட்டணி அரசாங்கத்தை அமைத்தார். அதற்கு பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி அரசாங்கம் (Coalition Government of Perikatan Nasional) என்று பெயர் வைக்கப்பட்டது. முகிதீன் யாசின் நாட்டின் எட்டாவது பிரதமரானார்.
தொடர்ந்து 2021 சனவரியில் மலேசியா அவசரகால நிலையை (2021 Malaysian State of Emergency) அறிவித்தது. மலேசியாவில் மோசம் அடைந்து வந்த கோவிட்-19 பெருந்தொற்று (COVID-19 Pandemic in Malaysia), 2021-ஆம் ஆண்டின் மத்தியில் பெரிக்காத்தான் நேசனல் கூட்டணியை மேலும் சீர்குலைத்தது.[11][12]
பெரும்பான்மை ஆதரவை இழந்த பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி அரசாங்கம், அதை மீண்டும் பெறுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டது. இருப்பினும் பொதுவான நல்ல ஒரு முடிவைக் காண முடியவில்லை. அனைத்து முயற்சிகளும் தோல்வி அடைந்ததால், பிரதமர் முகிதீன் யாசின் அமைச்சரவை (Muhyiddin Cabinet) 16 ஆகத்து 2021-இல் பதவி துறப்பு செய்தது.[13][14]
இசுமாயில் சப்ரி அமைச்சரவை
நான்கு நாட்களுக்குப் பிறகு, 2021 ஆகத்து 20-ஆம் தேதி, தேசிய ஐக்கிய மலாய்க்காரர்கள் அமைப்பு எனும் அம்னோவின் (UMNO) துணைத் தலைவர் இசுமாயில் சப்ரி யாகோப் (Ismail Sabri Yaakob); மலேசியாவின் மாமன்னர், யாங் டி பெர்துவான் அகோங் அவர்களால் பிரதமராக நியமிக்கப்பட்டார். அந்தக் கட்டத்தில் இசுமாயில் சப்ரி யாகோப் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவைப் பெற்று இருந்தார்.[15][16]
இசுமாயில் சப்ரியின் அரசாங்கம் பாக்காத்தான் ஹரப்பான் கூட்டணியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (Memorandum of Understanding) கையெழுத்திட்டது. அந்த ஒப்பந்தம் அப்போதைக்கு ஒரு வலுவான அரசியல் உறுதிபாட்டிற்கான (Political Stability) முயற்சியாகும்.[17]
துணைப் பிரதமர் பதவியில் வெற்றிடம்
2021 ஆகத்து 27-ஆம் தேதி, இசுமாயில் சப்ரி 32 அமைச்சர்கள் மற்றும் 38 துணை அமைச்சர்கள் கொண்ட தன் அமைச்சரவையை அறிவித்தார். துணைப் பிரதமர் பதவி காலியாக இருந்தது. மாறாக, அத்தகைய தேவை ஏற்பட்டால், பிரதமர் இசுமாயில் சப்ரி இல்லாத நேரத்தில், மூத்த அமைச்சர்கள் பிரதமருக்காகப் பிரதிநிதித்துவம் செய்வார்கள் என்று அறிவிக்கப்பட்டது.
Remove ads
அமைச்சரவை
பாரிசான் (13) பெரிக்காத்தான் (12) சரவாக் கூட்டணி (4) சபா மக்கள் கூட்டணி (2) பங்சா (1)
Remove ads
மேலும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads