முகிதீன் யாசின் அமைச்சரவை

From Wikipedia, the free encyclopedia

முகிதீன் யாசின் அமைச்சரவை
Remove ads

முகிதீன் யாசின் அமைச்சரவை அல்லது மலேசியாவின் 21-ஆவது அமைச்சரவை (மலாய்: Kabinet Muhyiddin Yassin; ஆங்கிலம்: Muhyiddin Yassin Cabinet; சீனம்: 慕尤丁内阁); என்பது மலேசியப் பிரதமர் முகிதீன் யாசின் தலைமையிலான மலேசியாவின் 21-ஆவது அமைச்சரவை ஆகும்.

விரைவான உண்மைகள் முகிதீன் யாசின் அமைச்சரவைMuhyiddin Cabinet 2020–2021, உருவான நாள் ...

2020 மார்ச் 10-ஆம் தேதி, மலேசியாவின் 8-ஆவது பிரதமராக முகிதீன் யாசின் (Muhyiddin Yassin) நியமிக்கப்பட்ட பின்னர், 2021 ஆகத்து 16-ஆம் தேதி, இந்த 21-ஆவது அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.

இந்த அமைச்சரவையானது பெரிக்காத்தான் நேசனல் அமைச்சரவை என்றும் அறியப்பட்டது. இது பெரிக்காத்தான் நேசனல் கூட்டணிக் கட்சிகள்; பாரிசான் நேசனல் கூட்டணிக் கட்சிகள்; சரவாக் கட்சிகள் கூட்டணியின் உறுப்புக் கட்சிகள்; மற்றும் ஐக்கிய சபா கட்சி கொண்ட 15 அரசியல் கட்சிகளை உள்ளடக்கிய அமைச்சரவை ஆகும்.

Remove ads

பொது

24 பிப்ரவரி 2020 அன்று மகாதீர் பின் முகமது தம் பிரதமர் பதவியைத் துறப்பு செய்தார். அத்துடன் மகாதீர் ஏழாம் அமைச்சரவை முடிவிற்கு வந்தது. அந்த நேரத்தில் முகிதீன் யாசின் மலேசிய உள்துறை அமைச்சராக இருந்தார்.

இந்தக் கட்டத்தில் முகிதீன் யாசின் தம் கட்சியான (பெர்சத்து) கட்சியை பாக்காத்தான் கூட்டணியில் இருந்து வெளியேற்ற முடிவு செய்தார். அந்த நேரத்தில் பிகேஆர் எனும் மக்கள் நீதிக் கட்சியில் இருந்து அசுமின் அலி மற்றும் சுரைடா கமாருதீன் நீக்கப்பட்டனர். அவர்கள் மீது "செரட்டன் நகர்வு" எனும் அரசியல் நிகழ்வைத் தொடங்கியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.

மக்களவை உறுப்பினர்கள் பதவி துறப்பு

இவற்றின் தொடர்ச்சியாக, மக்கள் நீதிக் கட்சியில் அசுமின் அலியுடன் இணைந்து கூட்டாகச் செயல்பட்ட மேலும் ஒன்பது மக்களவை உறுப்பினர்கள் பதவி துறப்பு செய்தனர். இவ்வாறான தொடர் நிகழ்வுகளின் விளைவாக மலேசிய மக்களவையில் பாக்காத்தான் அரப்பான் ஆளும் கூட்டணி, அதற்கான எளிய பெரும்பான்மையை இழந்தது.[1]

இருப்பினும், மலேசிய அரசர் வேண்டுகோளின் பேரில், புதிய பிரதமர் நியமிக்கப்படும் வரையில் மகாதீர் பின் முகமது இடைக்காலப் பிரதமராகத் தொடர்ந்தார்.[2][3][4]

அன்வர் இப்ராகீம்

தலைமைத்துவத்தில் வெற்றிடம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, 2020 பிப்ரவரி 26 மற்றும் 27 ஆம் தேதிகளில் மலேசிய அரசர் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் இசுதானா நெகாரா மலேசியா எனும் தேசிய அரண்மனைக்கு வரவழைத்தார். புதிய பிரதமருக்கான ஆதரவு எத்தனை மக்களவை உறுப்பினர்களிடம் உள்ளது என்பதைக் கேட்டு அறிந்தார்.

தொடக்கத்தில் மகாதீர் மீண்டும் பிரதமராக வேண்டும் என்று பாக்காத்தான் கூட்டணி விரும்பியது. ஆனால் காலப்போக்கில் பிரதமர் பதவிக்கு அன்வர் இப்ராகீம் பெயரைப் பாக்காத்தான் கூட்டணி முன்மொழிந்தது. பிரதமர் பொறுப்பை அன்வாரிடம் ஒப்படைக்கப் போவதாக ஏற்கனவே மகாதீர் வாக்குறுதி அளித்து இருந்தார். அதன் அடிப்படையில் அன்வர் இப்ராகீமின் பெயர் பிரதமர் பதவிக்கு முன்மொழியப்பட்டது.[5]

மலேசிய பேரரசரின் முடிவு

பெர்சத்து, பாரிசான் நேசனல், மலேசிய இசுலாமிய கட்சி, வாரிசான், சரவாக் கட்சிகள் கூட்டணி போன்ற கட்சிகள் மகாதீர் மீண்டும் பிரதமராவதை முழுமையாக ஆதரிக்கவில்லை. இருப்பினும், ஜனநாயக செயல் கட்சி ஆளும் கூட்டணிக்குள் மீண்டும் இணைவதை பாரிசான் நேசனல், மலேசிய இசுலாமிய கட்சி போன்ற கட்சிகள் எதிர்த்தன. அதே வேளையில் அரசியல்வாதிகள் சிலரை துரோகிகள் என்று குற்றம் சாட்டிய மகாதீர்; அவர்கள் மீண்டும் பாக்காத்தான் கூட்டணிக்குள் திரும்பி வருவதையும் எதிர்த்தார்.

28 பிப்ரவரி 2020 அன்று, மலேசியப் பிரதமர் பதவிக்கான வேட்பாளர்கள் மகாதீர் பின் முகமது, அன்வர் இப்ராகீம், முகிதீன் யாசின் அல்லது சுயமாக முன்னிறுத்தப்பட்ட பங் மொக்தார் ராடின் ஆகியோரில்; எவரும் அரசாங்கத்தை அமைக்க மக்களவையில் தனிப் பெரும்பான்மையைப் பெறவில்லை என்று மலேசிய அரசர் அறிவித்தார். எனவே, மறுநாள் மக்களவையில் ஒரு புதிய பிரதமரை முன்மொழிவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் மலேசிய அரசர் மற்றொரு வாய்ப்பை வழங்கினார்.

இதன் விளைவாக, மலேசிய அரசியலமைப்பு சட்ட விதிமுறை 40(2)(a) மற்றும் 43(2)(a)-இன் படி புதிய பிரதமரை நியமிக்க மலேசிய அரசர் முடிவு செய்தார்.[6] 2020 மார்ச் 1 காலை 10.33 மணிக்கு முகிதீன் யாசின் எட்டாவது பிரதமராகப் பதவியேற்றார்.[7]

Remove ads

அமைச்சரவை

2020 மார்ச் 9-ஆம் தேதி, 32 அமைச்சர்கள் மற்றும் 38 துணை அமைச்சர்கள் கொண்ட அமைச்சரவையை முகிதீன் யாசின் அறிவித்தார்.

      பெரிக்காத்தான் (14)       பாரிசான் (9)       சரவாக் கூட்டணி (4)       சுயேச்சை (2)       ஐக்கிய சபா கட்சி (1)[8]

மேலதிகத் தகவல்கள் அமைச்சு, அமைச்சர் ...
Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads