பொண்ணுக்கு தங்க மனசு (தொலைக்காட்சித் தொடர்)
2018 தமிழ்த் தொலைக்காட்சித் தொடர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பொண்ணுக்கு தங்க மனசு என்பது ஆகஸ்ட் 20 ஆம் திகதி முதல் விஜய் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 8 மணிக்கு ஒளிபரப்பாகி, 24 ஜூன் 2019 ஆம் ஆண்டு முதல் திங்கள் முதல் சனி வரை பிற்பகல் 1:30 மணிக்கு ஒளிபரப்பான தொலைக்காட்சி நாடகத் தொடர் ஆகும். இத்தொடர் மலையாள மொழியில் பெரும் வெற்றி பெற்ற ‘ஸ்திரீதனம்’ எனும் தொடரின் மறு ஆக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த தொடர் பணக்கார வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் நடுத்தர குடுப்பத்தை சேர்ந்த திவ்யாவின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் கதை. ஹாரிசன் இயக்கும் இத்தொடருக்கு மார்ட்டின் ஜோ என்பவர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த தொடர் 12 திசம்பர் 2020 அன்று 559 அத்தியாயங்களுடன் நிறைவு பெற்றது.
Remove ads
கதைச்சுருக்கம்
நடுத்தர குடுப்பத்தை சேர்ந்த திவ்யா எனும் பெண், பிரசாந்த் என்ற பணக்கார வீட்டு பையனை விரும்புகிறாள். அந்த பணக்கார வீட்டுக்கு மருமகளாகச் சொல்லுகிறாள். பணம்தான் வாழ்க்கை என்று வாழ்பவர் பிரசாந்தின் தாயான சேதுலட்சுமி, தன் மகனை ஒரு பணக்கார பெண்ணுக்குதான் கட்டித் தரவேண்டும் என்ற எண்ணத்துடன் இருக்கிறார். அதனால் திவ்யா போன்ற நடுத்தர வீட்டு பெண் மற்றும் அவள் மூலமாக வரும் வரதட்சணையில் அவருக்கு திருப்தி இல்லை. அந்த பணக்கார வீட்டுக்கு மருமகளாகச் செல்லும் திவ்யாவின் வாழ்க்கை என்ன ஆகிறது என்பதுதான் தொடர்.[1]
Remove ads
நடிகர்கள்
முதன்மை கதாபாத்திரம்
- ராதிகா (பகுதி:1-102) → விந்துஜா விக்ரமன் (பகுதி:107-559) - திவ்யா
- அஸ்வின் - பிரசாந்த்
- சிரிஷா (பகுதி:1-62) → சித்ரா ஷெனோ (பகுதி:63-559) - சேதுலட்சுமி லட்சுமணன் (எதிர்மறை கதாபாத்திரம்)
துணை கதாபாத்திரங்கள்
- கே.எஸ். ஜி. வெங்கடேஷ் - ராமநாதன் (திவ்யாவின் தந்தை)
- ரஜினி முரளி - மஞ்சுளா ராமநாதன் (திவ்யாவின் அம்மா)
- வினீஜா விஜய் - வித்யா (திவ்யாவின் தங்கை)
- --- - லட்சுமணன் (சேதுலட்சுமியின் கணவன் மற்றும் பிரசாந்த் தந்தையார்)
- தேவி சந்தனா - சரதா லக்ஷ்மன் (லக்ஷ்மணனின் 2வது மனைவி)
- --- - கார்த்திகா (லட்சுமணனின் மகள்)
- விகாஷ் சம்பத் - கார்த்திக் லட்சுமணன் (சேதுவின் மூன்றாவது மகன்)
- நியாஸ் கான் - வசந்த லட்சுமணன் (சேதுவின் இரண்டாவது மகன்)
- தேஜஸ்வினி சேகர் (1-356) → சுவாதி தாரா - வேணி வசந்த் (வசந்தின் மனைவி) (எதிர்மறை கதாபாத்திரம்)
- சுஜா வாஸன் - சுபா (சேதுலட்சுமியின் மகள்)
- கோட்டயம் ரஷீத் - சுகுமாரன் (வேணியின் தந்தையார்)
- யுவராணி (1-120) → ஜெனிபர் ஆண்டனி - சாந்தி (வேணியின் தாய்)
- மகாலட்சுமி - மயூரி
- பிரதீபா முத்து -
- மது மோகன் -
Remove ads
நடிகர்களின் தேர்வு
முதலில் திவ்யா என்ற கதாபாத்திரத்தில் ராதிகா நடித்தார், அத்தியாயம் 107 முதல் அவருக்கு பதிலாக விந்துஜா விக்ரமன் திவ்யாவாக நடித்துள்ளார். அழகு தொடரில் நடித்த நடிகர் அஸ்வின், பிரசாந்தாக நடிக்க, இத்தொடரின் முக்கியக் கதாபாத்திரமான சேதுலட்சுமியாக நடிகை சிரிஷா (முன்னர்) சித்ரா ஷெனோ (தற்பொழுது) நடித்துள்ளார்கள்.[2]
நேர அட்டவணை
இந்த தொடர் 20 ஆகத்து 2018 ஆம் ஆண்டு முதல் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடருக்கு பதிலாக இரவு 8 மணிக்கு ஒளிபரப்பானது. பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடருக்காக இந்த தொடர் ஜூன் 24 2019ஆம் ஆண்டு முதல் மதியம் 1:30 மணிக்கு மாற்றப்பட்டது. 5 நாட்கள் மட்டும் ஒளிபரப்பான இந்த தொடர் பின்னர் 6 நாட்களுக்கு ஒளிபரப்பானது. பின்னர் கொரோனாவைரசு காரணத்தால் 27 மார்ச் 2020 முதல் தற்காலிகமாக நிறுத்தப்பட்டு 27 ஜூலை 2020 முதல் மீண்டும் அதே நேரத்தில் நேரத்தில் ஒளிபரப்பாகி 12 திசம்பர் 2020 முதல் நிறைவு பெற்றது.
Remove ads
மதிப்பீடுகள்
கீழேயுள்ள அட்டவணையில் நீல எண்கள் மிகக் குறைந்த மதிப்பீடுகளையும் சிவப்பு எண்கள் மிக உயர்ந்த மதிப்பீடுகளைக் குறிக்கும்.
சர்வதேச ஒளிபரப்பு
- இந்த தொடர் விஜய் தொலைக்காட்சி மற்றும் விஜய் தொலைக்காட்சி எச்டி (உயர் வரையறு தொலைக்காட்சி) மூலம் உலகம் முழுதுவதும் ((ஆசியா: இலங்கை, தென்கிழக்காசியா), ஐரோப்பா, அமெரிக்காக்கள், மத்திய கிழக்கு நாடுகள்) போன்ற நாடுகளில் பார்க்க முடியும்.
- இந்த தொடரின் அத்தியாயங்கள் ஹாட் ஸ்டார் என்ற இணைய மூலமாகவும் பார்க்க முடியும்.
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads