பௌத்தநாத்து
நேபாள நாட்டில் உள்ள நினைவுத் தூண் From Wikipedia, the free encyclopedia
Remove ads
பௌத்தநாத்து (நேபாளி: बौद्धनाथ) (Baudhanath), நேபாள நாட்டில் திபெத்திய பௌத்தர்களின் பெரிய கோள வடிவ விகாரையில் அமைந்த 36 மீட்டர் உயரமான நினைவுத் தூண் ஆகும். பௌத்தநாத்து கி பி நான்காம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. பௌத்தநாத்து மடாலயம், நேபாள நாட்டின் காத்மாண்டு சமவெளியில் தேசியத் தலைநகரான காட்மாண்டூ நகரத்தின் கிழக்கில், ஏழு கிலோ மீட்டர் தொலைவில் இமயமலையில் அமைந்துள்ளது.[1]வானளாவிய உயரத்தில் காணப்படும், இப்பழைமையான பௌத்தநாத்து மடாலயத்தின் நினைவுத்தூண் உலகின் பெரியதாகும். பௌத்தநாத்து மடாலயத்தை, உலக தொல்லியற்களங்களில் ஒன்றாக ஐக்கிய நாடுகள் அவையின், யுனேஸ்கே நிறுவனம், 1979இல் அறிவித்துள்ளது.[2]


Remove ads
அமைவிடம்
காட்மாண்டு நகரத்தின் வடகிழக்கே ஏழு கிலோ மீட்டர் தொலைவில், இமயமலை அடிவாரத்தில் அமைந்துள்ளது.[3]
வரலாறு
லிச்சாவி குடியரசின் மன்னர் சிவதேவன் (கி பி 590-604) காலத்தில் பௌத்தநாத்து மடாலயத்தை நிறுவியதாக கோபாலாராஜவம்சாவளி (கோபு) கூறுகிறார். நேபாள மன்னர் மானதேவன் (கி பி 464-505) ஆட்சி காலத்தில் கட்டியதாகவும் கூறப்படுகிறது.[4][5] கி பி 15ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அல்லது 16வது நூற்றாண்டில் முற்பகுதியில் இவ்விடத்தில் நடந்த அகழ்வராய்ச்சியில், கண்டெடுக்கப்பட்ட மன்னர் அம்சுவர்மாவின் (கி பி 605-621) எலும்புகள் தோண்டி எடுக்கும் போது, இப்பௌத்தநாதர் மடாலயம் கண்டெடுக்கப்பட்டதாக, திபெத்திய ஆதாரங்கள் ஆதாரங்கள் கூறுகிறது.[6] திபெத்திய பேரரசர், திர்சோங் டெட்சான் (ஆட்சி காலம்: 755 - 797) ஆட்சி காலத்தில் இப்பௌத்த மடாலயத்தை நிறுவியதாக கருதப்படுகிறது.[7]
Remove ads
2015 நேபாள நிலநடுக்கம்


2015 நேபாள நிலநடுக்கத்தில் பௌத்தநாத்து மடாலயத்தின் மேற்கூறையின் நினைவுத் தூண் முற்றிலும் சேதமடைந்தது. தற்போது சேதமடைந்த மேற்கூறையும், தூணையும் சீரமைக்கும் பணி நடந்து வருகிறது.
பௌத்தநாத் படத்தொகுப்பு
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads