வெண் மருது
தாவர இனம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
வெண் மருது, ஆற்று மருது, நீர் மருது, அல்லது வெள்ளை மருது[1] (Terminalia arjuna) என்பது டெர்மினாலியா பேரினத்தைச் சேர்ந்த ஒரு மரமாகும். இது பொதுவாக ஆங்கிலத்தில் arjuna[2] அல்லது arjun tree என்று அழைக்கப்படுகிறது.[3] இது பாரம்பரிய மருத்துவ தாவரமாகப் பயன்படுத்தப்படுகிறது.[4]
இதன் இலை, பழம், விதை, பட்டை ஆகியவை மருத்துவப் பயனுடையவை. திருவிடைமருதூர், திருஇடையாறு ஆகிய திருத்தலங்களில் மருதம் தலமரமாக விளங்குகின்றது.[5][6]
வயலும் வயல் சார்ந்த நிலமான மருத திணைக்குரிய மரமாக வெண் மருது உள்ளது என அறிஞர்கள் சிலர் கருதுகின்றனர் சிலர் அது பூமருது என்றும் கருதுகின்றனர்.[7]
Remove ads
விளக்கம்
வெண்மருது சுமார் 20-25 மீட்டர் உயரம் வரை வளரும். பக்கவேர்கள் திரண்ட தண்டையுடைய இந்த மரம் உச்சியில் ஒரு அகன்று விரிந்து இருக்கும். அதிலிருந்து கிளைகள் கீழ்நோக்கி தொங்கியபடி இருக்கும். இது நீள்மான கூம்புவடிவ இலைகளைக் கொண்டுள்ளது. இலைகளின் மேல் பச்சையாகவும் அடியில் பழுப்பு நிறத்திலும் இருக்கும். சாம்பல் நிற வழுவழுப்பான பட்டைகளையும் உடைய ஓங்கி வளரும் பெரிய இலையுதிர் மரமாகும். இதன் பட்டை சதைப்பற்றாக இருக்கும். இது மார்ச் மற்றும் சூன் மாதங்களுக்கு இடையில் ஈட்டிபோன்ற நீண்ட காம்பில் பசுமை கலந்த நிறிய வெள்ளை மலர்கள் பூக்கும். காய்கள் 2.5 முதல் 5 செ.மீ. அளவில் நட்சத்திர வடிவல் செப்டம்பர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு இடையில் தோன்றும்.[2][3]
இந்த மரம் எந்த பெரியதாக எந்த நோய்களாலோ அல்லது பூச்சிகளாலோ பாதிக்கப்படுவதில்லை, ஆனால் இது பாலிஸ்டிக்டஸ் அஃபினிஸ் காரணமாக ஃபிலாக்டினியா டெர்மினேல் மற்றும் அழுகல் நோயால் பாதிக்கப்படுகிறது.[8]
Remove ads
பரவலும் வாழ்விடமும்
வெண்மருது இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் காணப்படுகிறது. பொதுவாக உத்தரப் பிரதேசம், பீகார், மகாராட்டிரம், மத்தியப் பிரதேசம், மேற்கு வங்காளம், ஒடிசா, தெற்கு, மத்திய இந்தியா, பாக்கித்தான், இலங்கை, வங்காளதேசம் ஆகிய இடங்களில் ஆற்றங்கரைகளில் அல்லது வறண்ட ஆற்றுப் படுகைகளுக்கு அருகில் காணப்படுகிறது.[2][9] இது மலேசியா, இந்தோனேசியா, கென்யா ஆகிய நாடுகளிலும் வளர்க்கப்படுகிறது.[8]
முக்கியத்துவம்
பட்டு உற்பத்தி
வெண்மருது வணிக முக்கியத்துவம் வாய்ந்த காட்டுப் பட்டான டசர் பட்டை உற்பத்தி செய்யும் அந்தேரியா பாஃபியா அந்துப்பூச்சி இதன் இலைகளை உண்ணும் இனங்களில் ஒன்றாகும்.[10]
காட்சியகம்
- அடிமரம்
- இலைகள்
- மேல் மரம்
- மஞ்சரி
- மகரந்தத் துகள்கள்
- உலர்ந்த காய்
- பட்டை
மேற்கோள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
