மலேசிய இந்திய சட்டமன்ற உறுப்பினர்கள்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மலேசியாவில் 13 மாநிலங்கள் உள்ளன. இந்த மாநிலங்களில் மலேசியாவில் நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் பலர் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

2008-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் 24 இந்தியர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப் பட்டனர். இவர்களில் மலேசிய அரசாங்க உயர்ப் பதவிகளை வகித்தவர்கள்:
- ஜொகூர், மலாக்கா, நெகிரி செம்பிலான், பகாங், சிலாங்கூர் மாநிலங்களில் 5 அமைச்சர்கள்
- பினாங்கு மாநிலத்தின் துணை முதல்வராக பேராசிரியர் ராமசாமி
- பேராக் மாநிலத்தின் முதல் தமிழர் சபாநாயகர் வி. சிவகுமார்[1][2]
- பேராக் மாநிலத்தின் இரண்டாவது தமிழர் சபாநாயகர் டத்தோ ஆர்.கணேசன்
பெரும்பாலான இந்திய வேட்பாளர்கள், இந்தியர்கள் அதிகமாக வாழும் இடங்களில் போட்டியிட்டனர். மலேசியாவில் ஒரு சட்டமன்ற உறுப்பினர் வெற்றி பெற வேண்டுமானால் அவருக்கு மலாயர், சீனர், இந்தியர்(தமிழர்) ஆகிய மூன்று இனத்தவர்களின் வாக்குகள் அவசியம் தேவை.
Remove ads
இந்திய வேட்பாளர்கள்
மலேசியச் சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளில் பலவற்றின் வெற்றித் தோல்விகளை மலேசிய இந்திய வாக்காளர்கள் தான் முடிவு செய்கின்றனர்.
மலேசிய நாடாளுமன்றத்தில் 13 இந்திய உறுப்பினர்கள் உள்ளனர். அவர்களைப் பற்றிய விவரங்களை மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் எனும் பகுதியில் தெரிந்து கொள்ளலாம்.
மலேசிய இந்திய சட்டமன்ற உறுப்பினர்களைப் பற்றிய விவரங்கள்.
கெடா
- கெடா - மணிக்குமார் சுப்பிரமணியம் - புக்கிட் செலாம்பாவ் சட்டமன்றத் தொகுதி - கெஅடிலான் மக்கள் நீதிக் கட்சி
பினாங்கு
- பினாங்கு - தனசேகரன் அத்தரபதி - பாகன் டாலாம் சட்டமன்றத் தொகுதி - ஜனநாயக செயல் கட்சி
- பினாங்கு - பேராசிரியர் இராமசாமி பழனிச்சாமி - பிறை சட்டமன்றத் தொகுதி - ஜனநாயக செயல் கட்சி (மாநிலத் துணை முதல்வர்)
- பினாங்கு - நேதாஜி ராயர் - ஸ்ரீ டெலிமா சட்டமன்றத் தொகுதி - ஜனநாயக செயல் கட்சி
- பினாங்கு - எஸ்.ரவீந்திரன் - பத்து உபான் சட்டமன்றத் தொகுதி - கெஅடிலான் மக்கள் நீதிக் கட்சி (மலேசியா)[3]
பேராக்
- பேராக் - துளசி மனோகரன் - புந்தோங் சட்டமன்றத் தொகுதி - ஜனநாயக செயல் கட்சி
- பேராக் - பவானி வீரையா - மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி - ஜனநாயக செயல் கட்சி
- பேராக் - வசந்தி சின்னசாமி - ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி - மக்கள் நீதிக் கட்சி
- பேராக் - சிவசுப்ரமணியம் - புந்தோங் சட்டமன்றத் தொகுதி - ஜனநாயக செயல் கட்சி
- பேராக் - வி. சிவகுமார் - துரோனோ சட்டமன்றத் தொகுதி - ஜனநாயக செயல் கட்சி
- பேராக் - கேஷ்விந்தர் சிங் - மாலிம் நாவார் சட்டமன்றத் தொகுதி - ஜனநாயக செயல் கட்சி (2010 ஜூன் 15 முதல் சுயேட்சை)
- பேராக் - கேசவன் சுப்ரமணியம் - ஊத்தான் மெலிந்தாங் சட்டமன்றத் தொகுதி - கெஅடிலான் மக்கள் நீதிக்கட்சி
- பேராக் - சிவநேசன் அச்சுலிங்கம் - சுங்கை சட்டமன்றத் தொகுதி - ஜனநாயக செயல் கட்சி
Remove ads
பகாங்
- பகாங் - தேவீந்திரன் மூர்த்தி - சாபாய் சட்டமன்றத் தொகுதி ]] - பாரிசான் நேசனல் ( மாநில அமைச்சர்)
சிலாங்கூர்
- சிலாங்கூர் - முத்தையா மரியப்பிள்ளை - புக்கிட் மெலாவாத்தி சட்டமன்றத் தொகுதி - கெஅடிலான் மக்கள் நீதிக்கட்சி
- சிலாங்கூர் - மனோகரன் மலையாளம் - கோத்தா ஆலாம் சா சட்டமன்றத் தொகுதி - ஜனநாயக செயல் கட்சி
- சிலாங்கூர் - ஜெயக்குமார் சேவியர் - ஸ்ரீ அண்டலாஸ் சட்டமன்றத் தொகுதி - கெஅடிலான் மக்கள் நீதிக்கட்சி (மாநில அமைச்சர்)
நெகிரி செம்பிலான்
- நெகிரி செம்பிலான் - வி.எஸ்.மோகன் - ஜெராம் பாடாங் சட்டமன்றத் தொகுதி - பாரிசான் நேஷனல் (அமைச்சர்)
- நெகிரி செம்பிலான் - எம்.கே.ஆறுமுகம் - ரகாங் சட்டமன்றத் தொகுதி - ஜனநாயக செயல் கட்சி
- நெகிரி செம்பிலான் - பி.குணசேகரன் - செனவாங் சட்டமன்றத் தொகுதி - ஜனநாயக செயல் கட்சி
- நெகிரி செம்பிலான் - ரவி முனுசாமி - போர்டிக்சன் சட்டமன்றத் தொகுதி - கெஅடிலான் மக்கள் நீதிக்கட்சி
- நெகிரி செம்பிலான் - வீரப்பன் சுப்பிரமணியம் - ரெப்பா சட்டமன்றத் தொகுதி - ஜனநாயக செயல் கட்சி
Remove ads
மலாக்கா
- மலாக்கா - டத்தோ ஆர். பெருமாள் - அசகான் சட்டமன்றத் தொகுதி - பாரிசான் நேசனல் (மாநிலத் தகவல், போக்குவரத்துத் துறை அமைச்சர்)
ஜொகூர்
- ஜொகூர் - டத்தோ அசோகன் முனியாண்டி - காம்பிர் சட்டமன்றத் தொகுதி - பாரிசான் நேசனல் (மாநில அமைச்சர்)
- ஜொகூர் - வித்தியானந்தன் ராமநாதன் - காகாங் சட்டமன்றத் தொகுதி - பாரிசான் நேசனல்
- ஜொகூர் - முருகேஸ்வரி தனராஜன் - தெங்கோரா சட்டமன்றத் தொகுதி - பாரிசான் நேசனல்
- ஜொகூர் - முனுசாமி மாரிமுத்து - பெர்மாஸ் சட்டமன்றத் தொகுதி - பாரிசான் நேசனல்
மேற்கோள்கள்
மேலும் காண்க
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads