மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்

From Wikipedia, the free encyclopedia

மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள்
Remove ads

மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் (ஆங்கிலம்: Ethnic Indians in the Dewan Rakyat) என்பது மலேசிய நாடாளுமன்றம் நிறுவப்பட்டதில் இருந்து மலேசிய நாடாளுமன்ற மக்களவையில் உறுப்பினர்களாகச் சேவை செய்த இந்தியர்களைக் குறிப்பிடுவதாகும்.

விரைவான உண்மைகள்
Thumb
நாடாளுமன்றத்திற்கு வெற்றி பெற்ற கட்சிகளின் விழுக்காட்டுப் பட்டியல்.
Thumb
மலேசிய இந்திய காங்கிரசு.

2022-ஆம் ஆண்டு வரை, மலேசியாவில் 15 பொதுத்தேர்தல்கள் நடைபெற்று உள்ளன. இந்தத் தேர்தல்களில் வெற்றி பெற்று இதுவரையில் 68 இந்தியர்கள் நாடாளுமன்றத்தில் இடம்பெற்று உள்ளனர்.

மலேசியப் பொதுத் தேர்தல், 2022-இல் 11 இந்தியர்கள் வெற்றி பெற்றனர். மலேசிய நாடாளுமன்றத்தில் 4.95% (விழுக்காடு) ஆகும்.

Remove ads

மலேசிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்களின் பட்டியல்

1955-ஆம் ஆண்டு தொடங்கி 2023-ஆம் ஆண்டு வரையில், மலேசிய நாடாளுமன்றத்தின் மக்களவையில் உறுப்பினர்களாக பணியாற்றிய மலேசிய இந்தியர் இனத்தவர்களின் முழுமையான பட்டியல் கீழே வழங்கப்பட்டு உள்ளது.

இந்தப் பட்டியலில் கடந்த காலத்தில் பணியாற்றிய இந்திய இனத்தைச் சார்ந்த மக்களவை உறுப்பினர்கள்; மற்றும் தற்போது தொடர்ந்து பணியாற்றி வரும் இந்திய இனத்தைச் சார்ந்த மக்களவை உறுப்பினர்களும் அடங்குவர்.[1][2]

மேலதிகத் தகவல்கள் கட்சி, உறுப்பினர் ...
Remove ads

நாடாளுமன்ற பெண் உறுப்பினர்கள்

இதுவரை மூன்று இந்தியப் பெண்மணிகள் மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களாகத் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

  1. ஜி. லீலாவதி (G. Leelavathi) - 1995 - காப்பார் மக்களவை தொகுதி
  2. கோமளா தேவி (P. Komala Devi) - 1999 - காப்பார் மக்களவை தொகுதி
  3. கஸ்தூரி ராணி பட்டு (Kasthuriraani Patto) - 2018 - பத்து காவான் மக்களவை தொகுதி

பினாங்கு, பத்து காவான் நாடாளுமன்றத் தொகுதியில் 33,553 வாக்குகள் பெரும்பான்மையில் கஸ்தூரி பட்டு வெற்றி பெற்றார். ஏறக்குறைய 62 விழுக்காட்டினர் சீனர்கள் வாழும் பத்து காவான் மக்களவை தொகுதியில், ஓர் இளம் தமிழ்ப் பெண் வெற்றி பெற்றது ஓர் அரசியல் சாதனையாக அறியப்படுகிறது.[3]

பிரபாகரன் பரமேசுவரன்

மலேசிய அரசியல் வரலாற்றில் மிக இளம் வயதில் மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட இளைஞர் பிரபாகரன் பரமேசுவரன் அவர்களும் ஓர் இந்திய இனத்தவராகும். மலேசிய நாடாளுமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்படும் போது அவருக்கு வயது 22.[4]

பத்து மக்களவை தொகுதியில், பாக்காத்தான் அரப்பான்; மக்கள் நீதிக் கட்சியின் சார்பில் போட்டியிட்ட பிரபாகரன் பரமேசுவரன் 22,241 வாக்குகள் (52.46%) பெரும்பான்மையில் வெற்றி பெற்றார். இவரை எதிர்த்து 9 பேர் போட்டியிட்டார்கள்.

மலேசியப் பொதுத் தேர்தல் 2022

மலேசியாவின் பொதுத் தேர்தல் ஒவ்வோர் ஐந்து ஆண்டுகளுக்கும் ஒரு முறை நடைபெறுகிறது. கடைசியாக 15-ஆவது பொதுத் தேர்தல் 2022-ஆம் ஆண்டு நவம்பர் 19-ஆம் தேதி நடைபெற்றது. மலேசியாவின் 13 மாநிலங்களில் நாடாளுமன்றத் தேர்தலும், சட்டமன்றத் தேர்தலும் ஒரே சமயத்தில் நடைபெறும். சில கட்டங்களில் இரு தேர்தல்களும் இரு வெவ்வேறு காலத்தில் நடைபெறுவதும் உண்டு.

மலேசிய நாடாளுமன்றத்தின் (Parliament of Malaysia) மக்களவையின் (Dewan Rakyat) அனைத்து 222 தொகுதிகளிலும் இந்தத் தேர்தல் நடைபெறுகின்றது.[5]

Remove ads

அரசியல் கூட்டணிகள்

மலேசியாவில் பொதுத் தேர்தலின் போது மாநிலச் சட்டமன்றங்களின் தேர்தலும் சேர்ந்து நடத்தப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை சில மாநிலங்களில் மாநிலச் சட்டமன்றங்களின் தேர்தல் நடத்தப்படுவது இல்லை.

பாக்காத்தான் அரப்பான்; பெரிக்காத்தான் நேசனல் அரசாங்கத்தின் கீழ் உள்ள மாநிலங்கள், அவற்றின் முழு பதவிக் காலத்தை முடிக்க விரும்புவதாகக் கூறியுள்ளன.

2022 அக்டோபர் 19-ஆம் தேதிக்குள், பாக்காத்தான் அரப்பான் தலைமையிலான பினாங்கு, சிலாங்கூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலங்களும்; பெரிக்காத்தான் நேசனல் தலைமையிலான கெடா, கிளாந்தான், திராங்கானு மாநிலங்களும்; தங்கள் மாநிலச் சட்டமன்றங்களைக் கலைக்கப் போவது இல்லை என்று உறுதி செய்துள்ளன.[6]

இந்திய வேட்பாளர்கள் (2022 வரையில்)

கெடா

பினாங்கு

பேராக்

பகாங்

சிலாங்கூர்

நெகிரி செம்பிலான்

ஜொகூர்

Remove ads

கருத்துப் பொதுமை

குலசேகரன் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர். மலேசியாவின் மூன்று சமூகங்களும் அவரை நம்புகின்றன. ஈப்போவில் 100க்கு 88 விழுக்காடு மக்கள் சீனர்கள். ஒரு தமிழரை நம்பி அவரை வெற்றி பெறச் செய்தனர். அவரை நாடாளுமன்றத்திற்கு அனுப்பி வைத்து பெருமை படுத்துகிறது மலேசியச் சீன சமூகம்.

குலசேகரன் மலேசியத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடி வருகிறார். பல முறை உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டவர். அவர் கைது செய்யப் பட்ட பிறகு மலாய், சீன, இந்திய சமூகத்தவர் கோலாலம்பூர் தலைநகரில் பேரணி வகுத்தனர். அதனால், மலேசிய சட்ட அமைப்பில் சில மாற்றங்கள் செய்யப் பட்டன. குலசேகரன் மலேசிய நாடாளுமன்றத்தில் மிகவும் மதிக்கத்தக்கவர்.


என்று ஓர் இந்திய ஆங்கில நாளிதழ் எழுதி உள்ளது.

Remove ads

மேலவை உறுப்பினர்கள்

மலேசிய நாடாளுமன்ற மேலவையில் மொத்தம் 62 பேர் உள்ளனர். இவர்களை அரசியல் கட்சிகளும் அரசு சாரா நிறுவனங்களும் நியமனம் செய்கின்றன. 2011 ஆம் ஆண்டில் ஏழு இந்தியர்கள் உறுப்பியம் பெற்று உள்ளனர்.

  • டத்தோ பழனிவேல் [7]- மலேசியத் துணை தோட்டத் தொழில்துறை அமைச்சர்
  • கோகிலன் பிள்ளை - மலேசியத் துணை வெளியுறவு அமைச்சர்
  • சந்திரசேகர் சுப்பையா
  • டாக்டர் மாலசிங்கம் முத்துக்குமார்
  • டாக்டர் ராமகிருஷ்ணன் சுப்பையா
  • டத்தோ சுப்பையா பழனியப்பன்
  • டால்ஜிட் சிங் டாலி வால்
Remove ads

மலேசிய அரசியல் கட்சிகள்

பாரிசான் நேசனல்

2022-ஆம் ஆண்டு (பாரிசான் நேசனல்) கூட்டணியின் உறுப்புக் கட்சிகள்

பாக்காத்தான் ஹரப்பான்

2022-ஆம் ஆண்டு மக்கள் கூட்டணி (பாக்காத்தான் ராக்யாட்) கூட்டணியின் உறுப்புக் கட்சிகள்


Remove ads

மேற்கோள்

மேலும் காண்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads