மாங்காடு (புதுக்கோட்டை)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாங்காடு (ஆங்கிலம் :Mangadu), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆலங்குடி வட்டத்தில் அமைந்துள்ள ஒரு ஊராட்சி ஆகும்.
![]() | இக்கட்டுரையைத் தரமுயர்த்த வேண்டியுள்ளது. தொகுத்தலுக்கான உதவிப் பக்கம், நடைக் கையேடு ஆகியவற்றைப் படித்தறிந்து, ஆங்கில விக்கிப்பீடியா தகவலையும் பயன்படுத்தி, இந்தக் கட்டுரையைத் துப்புரவு செய்து உதவலாம். |
Remove ads
மாங்காடு உருவான வரலாறு
மா, பலா, வாழை எனும் முக்கனிகள் சிறந்து விளங்கும் ஊர் இவ்வூர், இவ்வூரின் பெயர் மாங்காடு, மான்கள் அதிகம் வாழ்ந்ததால் மான்காடு என்ற பெயர் மருவி மாங்காடு என வந்தது என்றும், மாமரங்கள் ஊரில் நிறைந்து இருப்பதால் மாங்காடு என்று பெயர் பெற்றது என்றும், ஊர் எங்கும் மயில்கள் நிறைந்து காணப்படுவதால் இவ்வூர் மயில்காடு என்பது மருவி மாங்காடு என பெயர் பெற்றது எனவும் கூறப்படுகிறது.இவூர் தானமை நாட்டுக்கு உட்பட்ட கிராமம்.
மாங்காடு வடகாடு உறவுமுறை
மாங்காடு என்ற கிராமம் ஆதி காலத்தில் உருவானது. இங்கு இரண்டு சகோதரர்கள் இருந்ததாகக் கூறப்படுகிறது. அதில் ஒருவருக்கு மாங்காடு ஒருவருக்கு வடகாடு என்று வகுத்துக்கொண்டனர். இரண்டு ஊர் மக்களும் சகோதரர்களாக இருக்கின்றனர்.
Remove ads
ஆலயம் மற்றும் விழாக்காலங்கள்
அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருத்தலம்
ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் காப்பு கட்டி 10-14 நாட்கள் திருவிழா நடைபெறும். 8ம் நாள் பொங்கல் விழாவும் 9ம் நாள் அருள்மிகு ஸ்ரீ முத்துமாரி அம்மன் வைர தேர்பவனி திருவிழாவும் 10ம் நாள் அம்மன் மஞ்சள் தீர்த்த உற்சவத்திருவிழாவும் வெகுவிமர்சியாக நடைபெறும். உலகத்தரம் வாய்ந்த கண்கவர் வான வேடிக்கையும் அப்போது இதே கிராமங்களைச் சேர்ந்த 4 வகையறாக்களால் பல வெவ்வேறு சினிமா சார்ந்த நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படும். திருமணஞ்சேரி என்ற புகழ்பெற்ற புனித தலம் இவ்வூரிலிருந்து சுமார் 8 கி.மீ. வடக்கில் உள்ளது.
மஞ்சள் தீர்த்த உற்சவத்திருவிழா
அம்மனுக்கு அபிசேக ஆராதனையும் அதனை தொடர்ந்து அம்மன் வீதிஉலா கட்சிகள் நடைபெறும். அதில் அம்மன் அழகிய கோலத்தில் காட்சி அளிக்ப்பார். தேரைச் சுற்றி மஞ்சள் தீர்த்தம் பெரிய அண்டாக்களில் வைக்கப்பட்டு இருக்கும். அதனை தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
Remove ads
அருள்மிகு விடங்கேஸ்வரர் திருத்தலம்'
மாங்காட்டின் தென்மேற்கு மூலையில் அமைந்துள்ள இந்த ஆலயம் 1000 ஆண்டு பழமைவாய்ந்தது. அருள்மிகு வர்த்தனாம்பிகை சமேத, விடங்கேஸ்வரர் திருக்கோயில் பலநூறு ஆண்டுகள் கடந்து மிகவும் பழமை வாய்ந்தது. பாண்டிய மன்னரால் கட்டப்பெற்று சிறப்புற்று விளங்கி வருகிறது. இக்கோயில். இங்கு சிவனும் நவக்கிரகங்களும் முருகன் தெய்வானை, வள்ளியுடனும் வர்த்தநாம்பிகை என பல பரிகார விருப்ப தெய்வங்களும் உள்ளன. இக்கோவிலின் முன்பு குளமும் வயல்வெளிகளும் மிக அழகான காட்சியாக இருக்கின்றன.
இவ்வாலயம் பெரியகுளத்தின் கரையில் அமைந்துள்ளது. இக்குளம் முன் காலத்தில் திருமுத்திகுளம் என்று பெயர் இருந்தது. நாளடைவில் இப்பெயர் மருவி திருமுச்சிகுளம் என்று அழைக்கப்படுகிறது. கோவில் முன் உள்ள குளம் திருக்குளம் என்று அந்த தீர்த்தத்தை கோவிலின் பயன்பாட்டுக்கு பயன்படுகிறது. பருவகால மாறுதலில் பூமியின் சுழற்சியில் உத்திராயண காலத்தில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவலிங்கத்தின் மீது விழுந்து பிரதிபலிப்பது இத்தலத்தின் சிறப்பம்சமாகும். இந்நிகழ்வு நவகிரகங்களில் ஒன்றான சூரியன் சிவபெருமானை பூஜித்த தலம் என்பதற்கு சான்றாக அமைந்துள்ளது.
மேலும் ஐம்பெறும்காப்பியங்களில் முதன்மையான இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்தில் காவேரி பூம்பட்டினத்தில் இருந்து நடைப்பயணமாக மதுரை நோக்கி கவுந்தியடிகள்,கோவலன்,கண்ணகி ஆகிய மூவரும் இவ்வூர் வழியாக வரும்போது இவ்வாலயத்தின் அருகில் வாழ்ந்த அந்தணர் குலத்தைச் சேர்ந்த(மறையோன்) ஒருவர் மதுரை பாண்டிய மன்னரை புகழ்ந்து பாடக்கேட்டு அருகில் சென்ற கோவலன் அவரிடம் சென்று மதுரை மன்னரைப் புகழ்ந்து பாடும் அந்தணரே மதுரைக்குச் செல்லும் வழியாது என கேட்டதாகவும் அந்தணர் அவர்களுக்கு கொடும்பாளூர் வழியாக செல்லலாம் என வழி கூறியதாக சிலப்பதிகாரத்தில் காடுகாண் காதையில் இளங்கோவடிகளின் மாங்காட்டு மறையோன் என்ற வரிகளின் மூலம் குறிப்பிட்டுள்ளார். இதன்மூலம் இங்கு தங்கி இருந்த அந்தணர் சிறப்பும் விளங்குகிறது.
இந்நிகழ்ச்சிகள் மூலம் இத்திருத்தலம் சிலப்பதிகார காலத்திற்கு முற்பட்டது என தெரியவருகிறது.
மத நம்பிக்கை
இப்பகுதி மக்கள் பெரும்பாலும் இந்து சமயத்தையே பின்பற்றுகின்றனர். இருந்தும் இந்து சமய சடங்குகளை குறிப்பாக திருமண சடங்குகளில் பின்பற்றப்படும் புரோகிதர், கோமம், பற்பல பூஜைகள் போன்றவைகளை பின்பற்றுவது இல்லை. அனைத்து மக்களும் முத்தரையர் சமூகத்தை சேர்ந்தவர்கள்.[சான்று தேவை] மேலும் பல சமுதாய மக்கள் எண்ணிக்கையில் குறைவாக காணப்படுகின்றனர்.
மாங்காட்டின் தொழில்
இங்குள்ள மக்கள் அனைவரும் விவசாயத்தையே நம்பி வாழ்கின்றனர். அதுவே அவர்களின் வாழ்வாதாரம். இங்கு முக்கியமாக கடலை, சோளம், வாழை, கரும்பு, பல வகையான மலர்கள் (மல்லிகை, அரும்பு, ரோஜா, முல்லை), பல வகையான காய்கறிகள் (கத்தரிக்காய், புடலங்காய், பாவை, பயறு வகைகள்) போன்ற பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. தற்போது நிலத்தடிநீர் மட்டமானது 250 அடி வரை சென்றுள்ளது. வானம் பார்த்த பூமி்யாக இருந்து வந்த இப்பகுதி தற்போது பச்சை நிறமாக காட்சியளிக்கிறது. நிலத்தடி நீர் மட்ட மாறுபாடானது மழைக் காலங்களில் 12.08 மீட்டர் ஆகவும் கோடை காலங்களில் 24.49 மீட்டர் ஆகவும் உள்ளது.
Remove ads
மாங்காட்டில் ஆழ்குழாய் கிணறுகள்
இந்தவகை கிணறுகள் (1970-1971)ஆம் ஆண்டு காலத்தில் இப்பகுதிக்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முக்கிய காரணம் ongg அனைத்து இடங்களிலும்
இவ்வகையான கிணறு அமைத்து எண்ணெய் வளம் உள்ளதா என்று ஆராய்ச்சி செய்தனர் அதனைத்தொடர்ந்து இப்பகுதில் பூமிக்குஅடியில் நல்ல நிரோட்டம் உள்ளது என்பது தெரிந்தது.
பின்பு ஒவ்வொருவராக இக்கிணறு அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அந்த காலகட்டத்தில் சுமார் 225 அடி கிணறு அமைத்தாலே போதுமானதாக இருந்தது. அதுவே கடந்த சில ஆண்டுகளில் பருவ மழை குறைந்ததும், நீர் நிலைகள்(அரசுக்கு சொந்தமான குளங்கள் கண்மாய்கள் ஆற்று படுகைகள்) சில சமூக விரோதிகளின்
ஆக்கிரமிப்புகளால் நீர் மட்ட மாறுபாடானது தற்போது பல மடங்கு உயர்ந்து 550-1150 அடி கிணறு அமைத்தாலே நீர் எதிர்பார்த்த அளவிற்கு கிடைப்பதில்லை. அதற்கு முன்னர் விட்டுக்கு/கூட்டு குடும்பத்துக்கு ஒரு சாதாரண கிணறு
இருந்தது.அதன் அதிக பட்ச ஆழமானது 100 அடிவரையில் ஆழமும் 3*20 அடிவரையில் அகலமும் கொண்டிருந்தது. இன்று சில கிணறுகளை கூட காண்பது
அரிதாக உள்ளது. இதன் வழியாக காளைமாடுகளை வைத்து(கவலேத்து)நீர் பாசனத்தினை மேற்கொண்டனர். பின்னர் சாதாரண பம்ப் செட் அமைத்து நீர் பாசனம்
செய்து வந்தனர். தற்போது மின்சாரத்தை கொண்டு மின்மோட்டார் பயன்ப்படுத்தப்படுகிறது.
ஒரு ஆழ்குழாய் கிணறு அமைக்க மட்டும் Rs.9999,0000 (>500அடி) செலவாகிறது. பின்னர் அதற்கு தேவையான அளவில் போர்வல் பைப்புகளை இறக்க Rs.1,30,000(333அடி) செலவாகிறது. பின்னர் அதனுள் நிர்முழ்கி மோட்டார் இறக்குவதற்கு Rs.50,000(<10HP)செலவாகிறது. பின்னர் மின்சார உதிரி பாகங்கள் என்ற அடிப்படையில் Rs.70,000(Starter,Wires,Line Wires,Submersible Motar wire)செலவாகிறது.நீர் வரும் பைப் இரும்பு அல்லது PVC-யை பயன்படுத்தலாம். அதற்கு குறைந்தது Rs.30,000-17,000 செலவாகும். இவை அனைத்தும் தோராயமான தொகையே ஆகும். மின்சாரம் இலவசமாக வழங்கப்படுகிறது என்கிறார்கள். அந்த வகையான மின்சார இணைப்பு பலவருடங்கள் காத்திருந்து வாங்க வேண்டும் அதற்கு பல இடங்களை கவனிக்க வேண்டும். அப்படி இல்லையென்றால் செலவு செய்து உடனடியாக (2 மாதத்தில்)வாங்க வேண்டுமாயின் Rs.1,00,000 செலவு செய்ய நேரிடும். ஆக மொத்தம் ஒரு ஆழ்குழாய் கிணறு அமைத்து பாசன வசதி பெற வேண்டிமாயின் இவ்வளவு தொகையினை செலவிட நேர்கிறது. இறுதியில் நீர் மட்டம் இல்லையெனில் இத்தனை அமைப்புகளும் உபயோகமற்றதாக மாறுவது வழக்கமாகவுள்ளது.விவசாயத்தை மட்டுமே நம்பி வாழ்ந்த இப்பகுதியினர் தற்போது பல துறைகளில் முத்திரை பதித்து வருகின்றனர். குறிப்பாக தகவல் தொழில் நுட்பத்துறையில்.
Remove ads
அமைவிடம்
மாங்காடு புதுக்கோட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கான மாநில நெடுஞ்சாலையில் புதுக்கோட்டை நகரத்திலிருந்து சரியாக 31 கி.மீ. தொலைவிலும் பட்டுக்கோட்டையிலிருந்து 29 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. முற்றிலும் சமதளமுடன் கூடிய பகுதி மற்றும் காய்கறி, மரபழவகைகள் உற்பத்தி செய்ய சரியான மண் தன்மைகொண்ட பகுதியாகும்.
அண்டை கிராமங்கள்
மாங்காடு கிராமத்தினை தொடர்ந்து சில கிராமங்கள் உள்ளன. அவைகள் இக்கிராமத்துடன் நெருங்கிய தொடர்புகளைகொண்டுள்ளன. வடகாடு, கொத்தமங்கலம், கீரமங்கலம் ,குளமங்கலம், அனவயல், புள்ளான்விடுதி, மேற்பனைக்காடு போன்ற கிராமங்கள் இக்கிராமத்தினை ஒட்டிய பகுதிகளாகும். இக் கிராமங்களுக்குள்ளேயே திருமணங்கள் செய்துகொள்கிறார்கள். ஒவ்வொரு கிராமத்திற்குள்ளும் சில கட்டமைப்புகளைக் கொண்டுள்ளார்கள் அக்கட்டமைப்பினை பின்பற்றுவதையே கலாச்சாரம், பண்பாடு என்று பெருமையுடன் கூறுவதை இப்பகுதியில் காணலாம்.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads