மாநிலங்களவைத் தேர்தல்கள் 2015
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2015 (2015 Rajya Sabha elections) என்பது இந்திய நாடாளுமன்றத்தின் மேல் சபையான மாநிலங்களவைக்கு எட்டு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக 2015ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தல்களாகும். மேலும் ஐந்து இடைத்தேர்தல்களும் நடத்தப்பட்டன. சம்மு காசுமீர்,[1] கேரளா,[2] மற்றும் பாண்டிச்சேரி ஒன்றிய பிரதேசங்களில் இடங்களை நிரப்ப வழக்கமான தேர்தல்கள் நடத்தப்பட்டன.[3]
Remove ads
சம்மு காசுமீர்
சம்மு காசுமீரில் 7 பிப்ரவரி 2015 [1] தேர்தல் நடைபெற்றது.[1]
Remove ads
கேரளா
கேரளாவில் 16 ஏப்ரல் 2015[2] தேர்தல் நடைபெற இருந்தது. ஆனால், தேர்தல் ஏப்ரல் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.[5]
Remove ads
பாண்டிச்சேரி
பாண்டிச்சேரியில் 28 செப்டம்பர் 2015 அன்று ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.[3]
இடைத்தேர்தல்
கீழ்க்கண்ட இடைத்தேர்தல்களும் 2015ல் நடத்தப்பட்டன.
- மகாராட்டிராவை பிரதிநிதித்துவப்படுத்திய முரளி தியோராவின் மரணம், மேற்கு வங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஸ்ரீஞ்சாய் போஸ் பதவி விலகல் மற்றும் உத்தரகாண்டிலிருந்து மனோரமா டோப்ரியால் சர்மாவின் மரணம் ஆகியவற்றால் ஏற்பட்ட காலியிடத்தை நிரப்ப மார்ச் 20 அன்று இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மூன்று புதிய உறுப்பினர்கள் 2015 மார்ச் 14 அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டனர். காலியாக இருந்த அமர் ஷங்கர் சேபிள் பதவிக்காலம் ஏப்ரல் 2, 2020 வரையிலும், டோலா சென் 18 ஆகத்து 2017 வரையிலும், ராஜ் பப்பர் 25 நவம்பர் 2020 வரையிலும் பதவிக்காலத்திலிருந்தனர்.
- சார்க்கண்ட் மாநிலத்தைப் பிரதிநிதித்துவப்படுத்திய கன்வர் தீப் சிங் பதவி விலகியதால் ஏற்பட்ட காலியிடத்திற்கு சூலை 2-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. பாஜகவின் மொபசர் ஜாவேத் அக்பர் ஜே. எம். எம்-ன் ஹாஜி உசைன் அன்சாரியை தோற்கடித்துத் தேர்தலில் வெற்றி பெற்று சூன் 29, 2016 வரை பதவி வகித்தார்.
- ஒடிசாவை பிரதிநிதித்துவப்படுத்திய கல்பதரு தாசு மரணமடைந்ததால் ஏற்பட்ட காலியிடத்திற்குத் திசம்பர் 14-ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. நரேந்திர குமார் சுவைன் 7 திசம்பர் 2015அன்று போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் 2 ஏப்ரல் 2020 வரை இருந்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads