மாநிலங்களவைத் தேர்தல்கள் 2014
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாநிலங்களவைத் தேர்தல்கள் 2014 என்பது (2014 Rajya Sabha elections) இந்திய நாடாளுமன்றத்தின் மேலவையான மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்காக, 2014ல் மூன்று தேதிகளில் நடைபெற்ற தேர்தல்கள் ஆகும். 16 மாநிலங்களிலிருந்து மாநிலங்களவையின் 245 உறுப்பினர்களில் முறையே 55, 6 மற்றும் 11 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கப் பிப்ரவரி, சூன் மற்றும் நவம்பர் மாதங்களில் தேர்தல்கள் நடத்தப்பட்டன.[1][2][3] இவை மாநில சட்டமன்ற உறுப்பினர்களிடையே ஒற்றை மாற்றத்தக்க வாக்கு அடிப்படையில் திறந்த வாக்குச்சீட்டின் மூலம் (பொது ஆய்வுக்காக) நடத்தப்படுகின்றன. 2014ஆம் ஆண்டு இரட்டை எண்ணிக்கையில் இருப்பதால், மாநில சட்டமன்றத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட 233-ஆசனக் கூறுகளில் சுமார் 30% பேர் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆண்டாகும்.
ஆறு வருடச் சுழற்சியில் இந்த ஆண்டில் 72 இடங்கள் மீண்டும் நிரப்பப்பட்டன (ஆறு ஆண்டுகள் பதவிக்காலம் என்பதால்), 2014-ல் 13 இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.
2020ஆம் ஆண்டு நிலவரப்படி, பாரதிய ஜனதா கட்சி இடங்களை இழந்த ஆண்டு இதுவாகும்.
Remove ads
பிப்ரவரி தேர்தல்
பிப்ரவரி 7, 2014 அன்று 16 மாநில சட்டமன்றங்களிலிருந்து உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல்கள் நடைபெற்றன.[3]
மகாராட்டிரா
19 உறுப்பினர்களைக் கொண்ட மகாராட்டிர மாநிலத்தில் 7 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
ஒடிசா
10 உறுப்பினர்களைக் கொண்ட ஒடிசா மாநிலத்தில் 4 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
தமிழ்நாடு
18 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாட்டிலிருந்து 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
மேற்கு வங்காளம்
16 உறுப்பினர்களைக் கொண்ட மேற்கு வங்காளம் மாநிலத்தில் 5 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
ஆந்திரப் பிரதேசம்
11 உறுப்பினர்களைக் கொண்ட ஆந்திரப்பிரதேச மாநிலத்தில் 6 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
அசாம்
7 உறுப்பினர்களைக் கொண்ட அசாம் மாநிலத்தில் 3 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
பீகார்
16 உறுப்பினர்களைக் கொண்ட பீகார் மாநிலத்தில் 5 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
சத்தீசுகர்
5 உறுப்பினர்களைக் கொண்ட சத்தீசுகர் மாநிலத்தில் 2 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
குசராத்து
11 உறுப்பினர்களைக் கொண்ட குசராத்து மாநிலத்தில் 4 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
அரியானா
5 உறுப்பினர்களைக் கொண்ட அரியானா மாநிலத்தில் 2 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
இமாச்சலப் பிரதேசம்
3 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஒரு உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
சார்க்கண்டு
6 உறுப்பினர்களைக் கொண்ட சார்க்கண்டு மாநிலத்தில் 2 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
மத்தியப் பிரதேசம்
11 உறுப்பினர்களைக் கொண்ட மத்தியப்பிரதேச மாநிலத்தில் 3 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
மணிப்பூர்
1 உறுப்பினரைக் கொண்ட மணிப்பூர் மாநிலத்தில், உறுப்பினரின் பதவிக்காலம் முடிவரைந்த நிலையில் உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
ராஜஸ்தான்
10 உறுப்பினர்களைக் கொண்ட ராஜஸ்தான் மாநிலத்தில் 3 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
மேகாலயா
1 உறுப்பினரைக் கொண்ட மேகாலய மாநிலத்தில், உறுப்பினரின் பதவிக்காலம் முடிவரைந்த நிலையில் உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
Remove ads
சூன் தேர்தல்
அருணாச்சலப் பிரதேசம்
1 உறுப்பினரைக் கொண்ட அருணாச்சலப் பிரதேச மாநிலத்தில், உறுப்பினரின் பதவிக்காலம் முடிவரைந்த நிலையில் உறுப்பினர் ஒருவரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
கருநாடகம்
12 உறுப்பினர்களைக் கொண்ட கருநாடகம் மாநிலத்தில் 3 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
மிசோரம்
1 உறுப்பினர் உள்ளது.
Remove ads
நவம்பர் தேர்தல்
நவம்பரில் நடந்த தேர்தல்கள் உத்தரப் பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து, நவம்பர் 20, 2014 அன்று நடைபெற்றது [1]
உத்தரப்பிரதேசம்
31 உறுப்பினர்களைக் கொண்ட உத்தரப்பிரதேச மாநிலத்தில் 10 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
உத்தாரகாண்டம்
3 உறுப்பினர்களைக் கொண்ட கருநாடகம் மாநிலத்தில் 1 உறுப்பினரைத் தேர்ந்தெடுக்கத் தேர்தல் நடைபெற்றது.
இடைத்தேர்தல்
13 இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன (பதவி விலகல், மரணம் அல்லது தகுதி நீக்கம் காரணமாக).
ஆந்திரப் பிரதேசம்
பீகார்
Remove ads
குறிப்பு
- குலாம் நபி ஆசாத் இந்திய தேசிய காங்கிரஸின் தலைவராக, ஜூன் 8, 2014 அன்று டாக்டர் மன்மோகன் சிங்கிற்குப் பிறகு தேர்ந்தெடுக்கப்பட்டார்.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads