மானிக் மக்கள்

செமாங் மக்கள் குழுவைச் சார்ந்த பழங்குடி மக்கள் From Wikipedia, the free encyclopedia

Remove ads

மானிக் மக்கள் அல்லது மானி மக்கள் (ஆங்கிலம்: Maniq people; Mani people; மலாய்: Orang Maniq; Suku Maniq) என்பவர்கள் தீபகற்ப மலேசியாவின் கெடா, பாலிங் மாவட்டம்; மற்றும் தாய்லாந்தின் தென் பகுதிகளில் காணப்படும் செமாங் மக்கள் குழுவைச் சார்ந்த பழங்குடி மக்கள் ஆவார்கள்.

விரைவான உண்மைகள் மொத்த மக்கள்தொகை, குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் ...

இவர்கள் தாய்லாந்தில் சக்காய் (ஆங்கிலம்: Sakai; (தாய் மொழி: ซาไก) என்று பரவலாக அறியப்படுகின்றனர். சக்காய் எனும் சொல் 'காட்டுமிராண்டித்தனம்' என்று பொருள்படும்; மற்றும் அந்தச் சொல் ஒரு சர்ச்சைக்குரிய இழிவான சொல்லாகவும் அறியப்படுகிறது.[1]

Remove ads

பொது

மானிக் மக்கள் தாய்லாந்தில் உள்ள ஒரே நெகிரிட்டோ குழுவினர் ஆகும்; மற்றும் அவர்கள் பல்வேறு அசிலியன் மொழிகள் குடும்பத்தைச் சார்ந்த மொழிகளையும் பேசுகிறார்கள். குறிப்பாக கென்சியூ மொழியைப் பேசுகிறார்கள். மானிக் மக்களுக்கு நிலையான எழுத்து முறைகள் எதுவும் இல்லை.

தெற்கு தாய்லாந்தில் உள்ள மானிக் மக்கள், நராத்திவாட் மாநிலம், யாலா மாநிலம் ஆகிய மாநிலங்களிலும்; பன்டாட் மலைத் தொடரைச் சார்ந்த திராங் மாநிலம், பாத்தாலுங் மாநிலம் ஆகிய மாநிலங்களின் வாழ்கின்றனர்.[2]

Remove ads

சிறப்பியல்புகள்

மானிக் மக்கள் ஒரு வேட்டையாடும் இனத்தவர்; மற்றும் உணவுப் பொருள்களைத் தேடிச் சென்று சேகரிக்கும் வாழ்வியல் முறையைக் கொண்டவர்கள்; மூங்கிலால் தற்காலிகக் குடிசைகளைக் கட்டுகிறார்கள்; பல வகையான விலங்குகளை வேட்டையாடுகிறார்கள்.

மற்றும் பல வகையான காய்கறிகள், பழங்களைச் சாப்பிடுகிறார்கள். மூங்கில் இலை போன்ற பொருட்களால் செய்யப்பட்ட எளிய ஆடைகளை அணிகிறார்கள். பல்வேறு வகையான மருத்துவ மூலிகைகளைப் பற்றி நன்கு அறிந்து உள்ளார்கள். மானிக் மக்கள் புதிய புதிய பகுதிகளுக்கு இடம் மாறும் பழக்கம் கொண்டவர்கள்.

அடிமைத்தனம்

மலாய் ஆட்சியாளர்களில் சிலர்; மற்றும் தாய்லாந்தின் தெற்கு மாநிலங்களின் ஆட்சியாளர்களில் சிலர்; நெகிரிட்டோ மக்களை அடிமைப் படுத்தினார்கள் என்றும் அறியப்படுகிறது. ஒரு காலத்தில், நெகிரிட்டோ மக்கள் நெகிரிட்டோ மக்கள்; காட்டில் வாழும் உயிரினச் சேகரிப்பு பொருள்களாகக் கருதப்பட்டனர்.[3]

இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், தாய்லாந்தின் அரசர், மன்னர் சுலலாங்கொர்ன் (Rama V) தம் நாட்டின் தெற்குப் பகுதிகளுக்குச் சென்று செமாங் மக்களைச் சந்தித்தார். 1906-ஆம் ஆண்டில், கானுங் (Khanung) என்று பெயர் கொண்ட ஓர் அனாதை செமாங் சிறுவன், தாய்லாந்து அரசவைக்கு கொண்டு வரப்பட்டான். அங்கு அவன் ஆட்சியாளரின் வளர்ப்பு மகனாக வளர்க்கப்பட்டான்.[4] அதன் பின்னர், தாய்லாந்து அரசவையில், மானிக் மக்களுக்கும் மதிப்பளிக்கப்பட்ட்து. மற்ற உள்ளூர் மக்களின் அனுதாபத்தையும் பெற்றனர்.

Remove ads

நெகிரிட்டோ மக்கள்

மலேசியப் பழங்குடி மக்களில் முப்பெரும் பிரிவுகள் உள்ளன. அந்தப் பிரிவுகளில் செமாங் (Semang) அல்லது நெகிரிட்டோ மக்கள் (Negrito) என்பவர்கள் மலாய் தீபகற்பத்தில் உள்ள ஒரு பழங்குடி மக்கள் பிரிவினர் ஆகும். இவர்கள் தீபகற்ப மலேசியாவின் வட எல்லைப் பகுதிகளிலும் பேராக், கெடா, பகாங் மாநிலங்களிலும் வாழ்கின்றனர்

மேலும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads