மாவை சேனாதிராசா

From Wikipedia, the free encyclopedia

மாவை சேனாதிராசா
Remove ads

மாவை சேனாதிராசா (Mavai Senathirajah, 27 அக்டோபர் 1942 – 29 சனவரி 2025) என அழைக்கப்படும் சோமசுந்தரம் சேனாதிராஜா இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த உறுப்பினர் ஆவார்.

விரைவான உண்மைகள் மாவை சேனாதிராசாநாஉ, இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் ...
Remove ads

வாழ்க்கைக் குறிப்பு

மாவை சேனாதிராசாவின் இயற்பெயர் சோமசுந்தரம் சேனாதிராஜா. இவர் யாழ்ப்பாண மாவட்டம், மாவிட்டபுரத்தில் 1942 அக்டோபர் 27 இல் பிறந்தார்.[1][2] வீமன்காமம் பாடசாலையிலும், நடேஸ்வராக் கல்லூரியிலும் கல்வி கற்ற பின்னர்,[2] இலங்கைப் பல்கலைக்கழகத்தில் வெளிவாரி மாணவராக இணைந்து இளங்கலைப் பட்டம் பெற்றார்.[2]

அரசியலில்

சேனாதிராசா இலங்கைத் தமிழ்த் தேசிய இயக்கத்தில் செயல்பட்டு 1961 சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பங்குபற்றினார்.[2] இலங்கைத் தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணியில் 1962 இல் இணைந்தார்.[2] 1966 முதல் 1969 வரை ஈழத்தமிழர் இளைஞர் இயக்கத்தின் செயலாளராகப் பணியாற்றினார்.[2] 1969 முதல் 1983 வரையான காலப்பகுதியில் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டு எட்டு வெவ்வேறு சிறைச்சாலைகளில் மொத்தம் ஏழாண்டுகள் சிறையில் கழித்தார்.[2] 1972 இல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழ் இளைஞர் பேரவையின் செயலாளராக நியமிக்கப்பட்டார்.[2]

சேனாதிராசா 1989 நாடாளுமன்றத் தேர்தலில் ஈஎன்டிஎல்எஃப்/ஈபிஆர்எல்எஃப்/டெலோ/தவிகூ கூட்டணி சார்பில் யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிட்டு கூட்டணியின் வேட்பாளர்களில் 13வதாக வந்து தோல்வியடைந்தார்.[3][4] ஆனாலும், அ. அமிர்தலிங்கம் 1989 சூலை 13 இ படுகொலை செய்யப்பட்டதை அடுத்து அவரின் இடத்திற்கு சேனாதிராசா தேசியப்பட்டியல் மூலம் நாடாளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டார்.[5] 1999 சூலை 29 இல் நீலன் திருச்செல்வம் படுகொலை செய்யப்பட்டதை அடுத்து மீண்டும், தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்றம் சென்றார்.[5][6]

2000-ஆம் ஆண்டு தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணி (தவிகூ) வேட்பாளராக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[7] 2001 அக்டோபர் 20 இல் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி, தமிழீழ விடுதலை இயக்கம், தவிகூ ஆகிய கட்சிகள் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு (ததேகூ) என்ற கூட்டமைப்பை நிறுவின.[8][9]

2001 தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பாக யாழ் மாவட்டத்தில் போட்டியிட்டு மீண்டும் நாடாளுமன்றம் சென்றார்.[10] 2004,[11] 2010,[12] 2015[13][14] தேர்தல்களில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

2014 செப்டம்பரில் சேனாதிராசா இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டார்.[15][16] 2024 அக்டோபர் 7 அன்று தமிழரசுக் கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.[17]

Remove ads

தேர்தல் வரலாறு

இறப்பு

மாவை சேனாதிராசா வீட்டில் தவறி விழுந்து தலையில் நரம்பு வெடிப்பு ஏற்பட்டதால் யாழ்ப்பாண மருத்துவமனையில் 2025 சனவரி 28 அன்று அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 2025 சனவரி 29 அன்று சிகிச்சை பலனின்றி தனது 82 ஆவது வயதில் காலமானார்.[19][20]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads